இஸ்ரவேலும் சபையும் #1 Jeffersonville, Indiana, USA 53-0325 1இந்தச் சிறிய பழைய கூடாரம்... நான் அநேக முறை திரும்பி வந்து, ஒருக்கால் ஒரு ஆராதனைக்காக ஒரு மணி நேரமோ, அல்லது இரண்டு மணி நேரமோ இருந்திருக்கிறேன். ஒரு எழுப்புதலை நடத்த முயற்சிக்கும்படி திரும்பி வருவதோ, அல்லது எங்காவது போவதோ இதுவே என்னுடைய முதல் தடவையாகும். நாம் இன்றிரவு தொடங் குகிறோம். என்னுடைய அபிப்ராயத்தின்படி, ஒரு எழுப்புதலானது புது அங்கத்தினர்களை உடையதாய் இருப்பதில்லை, நல்லது, அது புது அங்கத்தினர்களைக் கொண்டு வருவதில்லை. ஒரு எழுப்புதலோடு ஒரு கூட்டம் மனமாற்றங்களும் சேர்ந்திருக்கும் அந்தக் காரியங்கள் இருந்த போதிலும், அது ஒரு கூட்டம் மனமாற்றங்களை உடையதாய் இருப்பதில்லை. ஆனால் ஒரு எழுப்புதல் என்பது, நீங்கள் ஏற்கனவே பெற்றிருப்பவர்களை எழுப்புதல் அடையச் செய்வது தான், அப்படியே அவர்களை எழுப்புதல் அடையச் செய்வது. 2இப்பொழுது, மிகவும் அற்புதமான மேய்ப்பராகிய சகோதரன் நெவில் அவர்களை இங்கே நாம் கொண்டிருக்கிறோம், அவருக்கு ஜலதோசம் இருப்பதால், சற்று கரகரப்பான குரலோடு இன்றிரவு அப்படியே முன்பக்க இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நான் உண்மையில் இதை வீடாகவே வைக்கப் போகிறேன். வழக்கமாக, நான் இங்கே இருந்த போது, நான் மேய்ப்பராகவும் இருந்தேன், அப்போது நான் பாடலை தலைமைத் தாங்கி நடத்துபவனாகவும் இருந்தேன், நான் காணிக்கைகளை எடுத்து, கடன்களை அடைத்தேன், வாயிற் காப்போனாகவும் நான் இருந்தேன், மேலும் நான் மரவேலை செய்பவனாகவும் இருந்தேன், அப்போது நான் அடுப்பிலிருந்து சாம்பல்களை எடுத்து சுத்தம் செய்பவனாகவும் இருந்து, கூடவே என்ன செய்ய வேண்டியிருந்தாலும் நான் அதைச் செய்தேன். அப்போது ஒரு பக்கத்தில் நான் பொதுச்சேவை நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தேன். அவ்வாறு 17 வருடங்களாக நான் இங்கே இருந்தேன். இன்றிரவு இந்தச் சிறு பழைய கட்டிடத்திற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். இது நிச்சயமாகவே எனக்கு ஒரு பிறந்த இடம் போன்று இருக்கிறது. மிகவும் விஸ்தாரமான இடமல்ல, ஆனால் இது மிகவும் பிரம்மாண்டமான இடமுமல்ல; ஆனால் இது வீடாக உள்ளது, நான் மிகவும் சௌகரியமாக உணருகிறேன். நான் அதற்காக மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். 3இப்பொழுது, நமக்குக் கூட்டங்கள் இருக்கப் போகிறது, (நாம் விளம்பரம் செய்திருக்கிறோம்), ஒருக்கால் ஐந்து இரவுகள் கூட்டங்கள் இருக்கும், ஞாயிறு இரவு வரை கூட்டங்கள் இருக்கலாம். நாம் வேதவாக்கியங்களிலிருந்து போதிக்கப் போகிறோம், போதனை. இப்பொழுது, இந்தப் போதனையில், வேதாகமத்தைத் தவிர வேறெதுவும் இருக்காது. இப்பொழுது, அப்படியானால், இப்போது நடக்கிற கூட்டத்தில், நாம் கொண்டிருக்கப்போகும் உண்மையான பின்னணிச்சூழலை, இப்பொழுது முதலிலேயே (புரிந்து கொள்ளும்படி) அதே விதமாக மிகவும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள்... என்று நான் நம்புகிறேன். அதைத்தான் முதலில் (தெளிவு படுத்த) விரும்புகிறோம், நாம் இந்த சட்டதிட்டங்களைப் பார்த்து, நாம் எல்லாரும் என்ன செய்கிறோம் என்று பார்ப்போம், எனவே நாம் ஜெபத்தைக் கொண்டிருப்பதற்கு முன்பாகவும், ஆராதனைகள் துவங்குவதற்கு முன்பாகவும் அதைச் செய்வோம். 4இப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால், இன்றிரவு சபையின் பேரில் பேசலாம் என்று உத்தேசித்திருக்கிறேன், சபையின் பேரில் ஐந்து இரவுகள். முதலாவது இரவாகிய, இன்றிரவில், எகிப்தில் இஸ்ரவேலர் என்பதின் பேரிலும், கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவில், வெளியே சிவந்த சமுத்திரத்தில் என்பதின் பேரிலும், பிறகு அடுத்த இரவில், வெண்கல சர்ப்பத்தின் முன்பு என்பதின் பேரிலும், அதன்பிறகு சனிக்கிழமை இரவில், காதேஷ் பர்னேயாவில் என்பதின் பேரிலும், ஞாயிறு இரவில், நாம் அவர்களை சொந்த தேசத்திற்கும் அழைத்துக்கொண்டு போக விரும்புகிறோம். அவை எல்லாமே வேதப்போதனைகள் தான். உங்களுடைய வேதாகமத்தைக் கொண்டு வாருங்கள், ஏனென்றால் நாம் அப்படியே தொடர்ந்து வேதவாக்கியங்களில் (போதிக்கப் போகிறோம்). 5வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்காகவும் மற்றவைகளுக்காகவும் அநேக அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் நான் ஒருவிதத்தில் அதிலிருந்து தொடர்ந்து விலகியே இருக்கிறேன். நான் தொடர்ந்து வேதப்போதனைகளின் பேரிலேயே சரியாக என் மனதைச் செலுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது நம்முடைய கர்த்தர் என்ன செய்வார் என்பது எனக்குத் தெரியாது. கடல்கடந்து போகும்படியாக, வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு அற்புதமான நேரமாக இருந்தது என்று நினைத்தேன். ஒருக்கால் அப்போது அது முதற்கொண்டு, சகோதரன் நெவில் நலமாக உணருவார், ஒருக்கால் அவர் சரியாக அங்கிருந்து முன்னேற்றமடைந்து, இந்த எழுப்பதலில் தொடர்ந்து போக முடியும். அது ஈஸ்டர் முழுவதும் தொடர்ந்து போவதைக்காண நான் விரும்புகிறேன். இங்கே ஈஸ்டர் காலையில் ஒரு மகத்தான பெரிய ஞானஸ்நானத்தைக் கொண்டிருக்க விரும்புகிறேன். அது அற்புதமாக இருக்காதா? அப்படியே ஒரு பெருங்கூட்டம் ஜனங்கள் ஞானஸ்நானம் பண்ணப்படும் ஒரு நேரம். ஞானஸ்நானம் பண்ணப்படுவதற்காக இங்கே சில வாலிப ஜனங்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். இப்பொழுது வாலிப ஜனங்கள் கேட்கும் கேள்விகளின் பேரில் நான் இருக்கையில். இப்பொழுது, வந்திருக்கிற ஒரு சிலர் நம்மிடம் உண்டு. இங்கே யார் வருகிறார்கள் என்றும் யார் வருவதில்லை என்றும் எனக்கு நன்றாகத் தெரியாது என்று நினைக்கிறேன். எனக்குத் தெரியவில்லை... [ஒலிநாடா வில் காலியிடம் - ஆசிரியர்.] 6எழுதுகோல்களையும் காகிதங்களையும் வைத்திருப்பவர்கள், 12ம் அதிகாரத்தில் துவங்குவோம். சில வேதவாக்கியங்களைப் பின்தொடர விரும்புகிற யாராவது இருந்து, அவருக்கு ஒரு வேதாகமம் தேவை என்றால், எங்களிடம் கூடுதலாக சில வேதாகமங்கள் உண்டு. நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களானால், மூப்பர்களில் ஒருவர் சரியாக இப்பொழுதே அதை உங்களிடம் கொண்டு வருவதில் மகிழ்ச்சியாயிருப்பார். இங்கே எங்களிடம் ஐந்து அல்லது ஆறு வேதாகமங்கள் உள்ளன. சகோதரனே, மற்றவைகள் வெறுமனே புதிய ஏற்பாடுகள் தான், நான் இன்றிரவில் பழைய ஏற்பாட்டிலேயே மிக அதிகமாக இருக்கப்போகிறேன். 7வேதவாக்கியத்தை கற்றுக் கொண்டிருக்கையில், நான் அதிகமாக முன்னடையாளங்களைக் கொண்டு போதிக்கிறவன் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். முன்னடையாளங்களைக் கொண்டு போதிப்பது (typology) என்பது 'பழைய ஏற்பாட்டை புதிய ஏற்பாட்டோடு பொருத்திக்காட்டுவதாகும்'. நான் ஏன் அதைச் செய்கிறேன் என்று உங்களுக்குக் கூறுகிறேன். அதற்குக் காரணம் இதுதான். ஒருக்கால் சிலசமயங்களில் - படித்த பண்டிதர்களும் மற்றவர்களும் வேதாகமத்துக்கு அதனுடைய - அதனுடைய வார்த்தைகளையோ அல்லது உச்சரிப்புகளையோ மகத்தான வார்த்தைகளாக கொடுக்க முயற்சிக்கலாம். நான் எனக்காக கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு வேதாகமத்தையே எடுத்துக் கொள்வதில் திருப்தியடைகிறேன். அது எந்த மொழிபெயர்ப் பைக் காட்டிலும் இதுவரையிலும் நீண்ட காலமாகப் புயல்களில் மேலும் கீழும் சென்றிருக்கிறது, நான் அதை அப்படியே அந்தவிதமாகவே விசுவாசிக்கிறேன். 8பழைய ஏற்பாட்டின் எல்லா வேதப்போதனைகளும் வரப்போகிற காரியங்களுக்கு நிழலாயுள்ளன என்று நான் விசுவாசிக்கிறேன். எனவே, நான் அந்தச் சுவரை நோக்கிப் போய்க் கொண்டிருந்து, என்னுடைய நிழலானது அங்கே எனக்கு முன்பாக இருக்குமானால், நான் அங்கே வரும்போது, நான் இருக்கிறது போன்ற ஏதோவொன்றை அது வெளிப் படுத்தும். நான் நான்கு காலுள்ள ஒரு மிருகமா அல்லது அது ஒரு கோழியா என்றோ, அல்லது அது என்னவாக இருந்தாலும், அதைக் காண்பித்து, நிழலானது அதை வெளிப் படுத்தும். பழைய ஏற்பாடானது புதிய ஏற்பாட்டுக்கு ஒரு நிழலாகவோ அல்லது ஒரு முன்னடையாளமாகவோ இருந்தது. பழைய ஏற்பாட்டினுடைய எல்லாமே கல்வாரியை நோக்கிச் சுட்டிக்காட்டினது. பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையினாலே, வரும் வாரங்களினூடாக (அது எவ்வளவு காலம் ஆகும் என்று எனக்குத் தெரியாது), அதைக் (காண் பிப்பேன்) என்று நம்புகிறேன், ஆனால் என்னால்... லிருந்து அதை நிரூபிக்க முடியும். பழைய ஏற்பாட்டின் ஒவ்வொரு அதிகாரமும் இயேசு கிறிஸ்துவைக் குறித்தே பேசினது, எல்லாமும் அவருக்குள் நிறைவேறி விட்டது. நாம் அவருக்குள் முழுமையடைகிறோம். தேவன் எவ்வளவு எளிமையாக அதைச் செய்திருக்கிறார்! கிறிஸ்துவுக்குள், நாம் பரிபூரண மாயிருக்கிறோம் 9இப்பொழுது, மனிதன் எப்போதுமே தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முயற்சித்திருக்கிறான், அவன் தன்னைத் தான் இரட்சித்துக்கொள்ளும்படியாக வித்தியாசமான காரியங் களின் மூலமாக அதை முயற்சித்திருக்கிறான், ஆனால் அவன் தன்னைத்தான் ஒருபோதும் இரட்சித்துக்கொண்டதே கிடையாது, நம்முடைய சொந்த கிரியைகள் எதைக் கொண்டும் அதைச் செய்ய (முடியாது), 'விசுவாசத்தின் மூலமாக, கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்' என்று புதிய ஏற்பாட்டில் (கூறப்பட்டுள்ளது.) உங்களை இரட்சிக்கக் கூடியது ஒன்று மாத்திரமே, அதுதான் கிருபை. 10இப்பொழுது, சற்று முன்பு உயர்த்தப்பட்ட கரங்களைக் கொண்டிருந்தேன், கிறிஸ்தவத்தோடு அடுத்த நிலைக்கு எவ்வாறு முன்னேறிச் செல்வது என்பதைக் காணும்படியாக இங்கே சபை அங்கத்தினர்கள் யார் என்றும், யார் சபை அங்கத்தினர்கள் இல்லை என்றும் தெரியவில்லை. இன்றிரவு இங்கே ஏறக்குறைய 99 சதவீதம் பேர் கிறிஸ்தவர்களாக இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. இப்பொழுது மற்றவர்களும் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். 11இப்பொழுது, ஆதியாகம புஸ்தகம் வேதாகமத்தில் ஆரம்ப அதிகாரமாக உள்ளது. அதுதான் ஆதியாக உள்ளது. ஆதியாகமம் என்ற வார்த்தைக்கு, 'துவக்கம்' என்று அர்த்தம். இப்பொழுது, நாளை இரவில், (இஸ்ரவேல்) புத்திரர்களைக் கொண்டு செல்ல, நாம் யாத்திராகமத்திற்குள் போயாக வேண்டும். யாத்திராகமம் என்பது, 'வெளியே அழைக்கப்படுதல், வெளியே செல்லுதல்' என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. இஸ்ரவேல் புத்திரர்கள் யாத்திரை செய்தனர். அவர்களுடைய யாத்திரையில், அவர்கள் எகிப்தை விட்டு வெளியேறி, தேவன் அவர்களுக்குக் கொடுத்திருந்த வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் போனார்கள். 12இப்பொழுது, அப்போதிருந்த சபையின் காட்சியை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அதை இன்றுள்ள (சபையோடு) பொருத்திப் பாருங்கள்; அது யாத்திரையைக் கொண்டிருக்கக் கூடும் முன்பே, யாத்திரைக்குள் அதைக் கொண்டு வரும்படியாக, நீங்கள் அந்த தொடக்கத்திற்குள் திரும்பிச் சென்றாக வேண்டும். இப்பொழுது நீங்கள்... அல்லது, சபை எங்கேயிருக்கிறது என்பதையும், அவர்கள் எவ்வாறு எகிப்தில் குடியேறினார்கள் என்பதையும் உங்களால் காணக்கூடும் இடத்திற்குள் அதைக் கொண்டு வாருங்கள், அப்பொழுது தேவன் எவ்வாறு அவர்களை வெளியே அழைத்தார் என்பதை நீங்கள் காண்பீர்கள். அதன்பிறகு மீதியுள்ள வாரம் முழுவதும், அவ்விதமாகவே நேராக வேத வாக்கியங்களுக்குப் போகலாம். கர்த்தருக்குச் சித்தமானால், இன்றிரவு போதனையின் போது, நாம் அநேக, அநேக வேதவாக்கியங்களை உபயோகிக்க விரும்புகிறோம். 13இப்பொழுது, முதற்கண் நாம் கண்டுபிடிக்க விரும்புவது என்னவென்றால், ஏன்... உலகம் முழுவதும் இருக்கிற கிறிஸ்தவ ஜனங்கள் மத்தியில் நான் கண்டிருக்கிற மிகப் பெரிய காரியம் என்னவென்றால், அது பயமாக இருந்து வருகிறது. அவர்கள் எப்போதுமே பயப்படுகிறார்கள். ஒரு சிறு வியாதி தாக்கும் போதும், அவர்கள் பயப்படுகிறார்கள். அநேகர், நான் சிலசமயங்களில் வியப்படைகிறேன், இப்பொழுது நான் உங்களோடு கூட சேர்ந்தேயிருக்கிறேன். ஆனால் இப்பொழுது இன்றிரவிலும், வரவிருக்கிற இந்த வாரத்திலும் நான் செய்ய முயற்சிப்பது என்னவென்றால், தேவனுடைய வார்த்தையின் மூலமாக, அந்த பயத்தை துரத்தியடிக்க முயற்சிப்பது தான். 14இப்பொழுது, நீங்கள் என்னிடம் வந்து, 'நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, நான் இதை விசுவாசிக்கிறேன். இப்பொழுது, நான் அதை விசுவாசிக்கிறேன்' என்று கூறலாம். அதை நிரூபிக்க இந்த உலகத்தில் ஒரே ஒரு வழி தான் உண்டு. இப்பொழுது, யாரோ ஒருவரின் அனுபவத்தைக் கொண்டோ, யாரோ ஒருவருடைய சபை சடங்குகளைக் கொண்டோ என்னால் போக முடியாது. இவை எல்லாவற்றையும் குறித்து என்ன என்ற ஒரே ஒரு உண்மையான நிரூபணம் தான் உண்டு, அதுதான் தேவனுடைய வார்த்தை. இப்பொழுது, தேவனுடைய வார்த்தையானது ஒரு குறிப்பிட்ட காரியத்தைக் கூறுமானால், அப்போது அது சத்தியம் என்று நான் அதை விசுவாசித்தாக வேண்டும். 15சமீபத்தில் ஒரு வாலிப ஊழியக்காரர் என்னிடம் வந்து, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையைக் குறித்து என்னிடம் கூறி, அதன் பேரில் அவர் ஜெபித்ததாகக் கூறினார். அப்போது அது ஒரு குறிப்பிட்ட வழியாக இருந்தது என்று கர்த்தர் அவருக்கு வெளிப்படுத்தினதாக அவர் கூறினார். நான் சற்று அவரை நோக்கிப் பார்த்து, 'சகோதரனே, அது மிகவும் அழகாக உள்ளது. கர்த்தர் உங்களுக்காக அதைச் செய்து கொண்டிருப்பதை நான் - நான் பாராட்டுகிறேன். ஆனால், நான் உம்மிடம் ஒன்றைக் கூறட்டும், அது முரணாயுள்ளது' என்றேன். அவர், 'நல்லது, அந்தத் தரிசனம் தேவனிடமிருந்து தான் வந்தது' என்றார். நான், 'சகோதரனே, அது அப்படியிருக்க முடியாது, ஏனென்றால் அது வார்த்தைக்கு முரணாயுள்ளது' என்றேன். 16இப்பொழுது, நாம் எல்லா காரியங்களையும் வேத வாக்கியத்தைக் கொண்டே நிரூபிக்க வேண்டும்.... என்னவாக இருந்தாலும் அதுவல்ல. அது என்னுடைய விசுவாசத்திற்கு முரணாக இருந்து, இருப்பினும் வேதவாக்கியம் அவ்வாறே கூறுமானால், வேதவாக்கியம் சரியாயுள்ளது, நான் தான் தவறாயுள்ளேன். புரிகிறதா? வேதவாக்கியம் எப்போதுமே சரியாக உள்ளது. நீங்கள் எதையாவது செய்யக் கூடிய ஒரே வழி என்னவென்றால், வேதவாக்கியத்திற்குத் திரும்பி வருவது தான். இப்பொழுது, அது உண்மை தானா? இப்பொழுது, நீங்கள் அதை விசுவாசிக்கும் போது, நீங்கள், 'ஆமென்' என்று கூறுவதைக் கேட்கவே நான்-நான் விரும்புகிறேன், நீங்கள் பாருங்கள். ஆமென் என்றால், 'அப்படியே ஆகக் கடவது' என்று அர்த்தம். இப்பொழுது, இப்பொழுது, நம்மால் முடியாது... 17அன்றொரு நாள் யாரோ ஒருவர் என்னிடம் இவ்வாறு கேட்டுக் கொண்டிருந்தார், நல்லது, இந்த நாளிலும் கூட, அவர்கள் செய்து கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட காரியத்தில் வெற்றி பெறுகிற ஒரு-ஒரு நபராக இருந்த ஒரு குறிப்பிட்ட மனிதரைக் குறித்து என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அவர், 'ஓ, சகோதரன் பில் அவர்களே, கர்த்தர் நிச்சயமாக அதில் இருக்க வேண்டும்' என்றார். நான், 'அவர் அதில் இருக்க முடியாது' என்றேன். 'ஓ,' அவர், 'ஆத்துமாக்களை அவர்கள் இரட்சிக்கப் படும்படி செய்து கொண்டிருக்கிறார்களே' என்றார். நான், 'அது அவ்வாறு இருக்க முடியாது. ஏனென்றால், அது அவ்வாறு இருக்குமானால், அது அவருடைய வார்த்தைக்கு முரணாக உள்ளது. அதன்பிறகு, தேவன் ஒரு காரியத்தைச் சொல்லி விட்டு, பிறகு வேறொரு காரியத்தைச் சொல்லப் போவதில்லை. அவர் துவக்கம் முதல் முடிவு பரியந்தம் ஒரே காரியத்தையே சொல்லப் போகிறார்' என் றேன். பாருங்கள், தேவனால் பொய் சொல்ல முடியாது. தேவன் தவறாதவர், அவருடைய வார்த்தைகள் தவறிப் போகாதவை. அவர் தேவனாக இருக்க வேண்டுமானால், அவர் இராஜாதிபத்தியம் உள்ளவராக இருக்க வேண்டும், நீங்கள் பாருங்கள். அவர் இராஜாதிபத்தியம் உள்ளவராயிருக் கிறார். 18மேலும் இப்பொழுது நீங்கள், 'நல்லது, தேவனுடைய வார்த்தை... (இவ்வாறு) கூறுகிற போதிலும், தேவன் ஒரு குறிப்பிட்ட காரியத்தை இங்கே செய்தார் என்று நீங்கள் நினைக்கவில்லையா?' என்று கேட்கலாம். நான், 'இல்லை. 'இந்தப் புஸ்தகத்தில் உள்ளவைகளி லிருந்து எதையாகிலும் எடுத்துப் போடுகிறவனோ, அல்லது இவைகளோடு எதையாகிலும் கூட்டுகிறவன், அவனுக்கான ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படுவான்' என்று வேதாகமம் கூறுகிறதே' என்றேன். எனவே, அங்கே தான் அதற்கான காரணம் உள்ளது. எல்லாவற்றைக் கொண்டும், அனுபவத்தின் மூலமாகவோ, அல்லது அது எதைப் போன்று தோற்றமளிக்கிறது என்பதன் மூலமாகவோ அல்ல, ஆனால் எப்போதுமே, தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறதோ அதன் மூலமாகவே அது (இருக்க வேண்டும்.) இப்பொழுது, புதிய ஏற்பாட்டில், பவுல், 'நாங்களோ அல்லது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வந்து, நீங்கள் கேட்டிருக்கிறதை விட வேறு எதையாவது உங்களுக்குப் போதித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்' என்றான், நீங்கள் அதைக் குறித்துக்கொள்ள விரும்பினால், அது கலாத்தியர் 1:8. 19ஆகையால், இப்பொழுது, நாம் திரும்பிச் சென்று, துவக்கத்திற்கு வந்து, இந்த வார்த்தையானது எவ்வளவு நிச்சயமானதாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்போம். இப்பொழுது இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் இந்த வேதாகமத்தினூடாக கற்றுக் கொள்கையில், தேவனுடைய இயந்திரச் சக்கரத்தின் பற்கள் மெதுவாகவே சுழலும், ஆனால் நிச்சயமாக சுழலும் என்பதை நீங்கள் காண்பீர்கள். அது பத்து இலட்சம் மைல்களுக்கு அப்பால் இருப்பது போன்று தோன்றலாம், ஆனால் அது அங்கே எல்லா நேரமும் சரியாக அரைத்துக்கொண்டு தான் (grinding up) இருக்கும், இப்பொழுது, என்னவாக இருந்தாலும் காரியமில்லை, இந்நாட்களில் ஒன்றில், அது இங்கே இருக்கும். நீங்கள் அப்படியே... அதில் எதையும் எடுத்துப் பாருங்கள். 20இப்பொழுது இங்கே நாம் ஆதியாகம புஸ்தகத்தை எடுத்துக்கொண்டு, ஆதியாகமத்தை விட்டு ஒருபோதும் விலகிச் செல்லாமல், ஏறக்குறைய ஆறு அல்லது எட்டு மாத வேத ஆராய்ச்சியைக் கொண்டிருக்கும்படியான நேரம் நமக்கு இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அடுத்த மூன்று வாரங்களுக்குள், மூன்று அல்லது நான்கு வார காலத்தில் ஆதியாகமத்தை ஆராய்ச்சி செய்து, வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வருகிற அதன் ஒவ்வொரு சிந்தனைகளும் எவ்வாறு சரியாக இந்த வேதாகமத்தினூடாகப் போகிறது என்பதைக் காணலாம் என்று நம்புகிறேன், அதனுடைய ஒவ்வொரு வார்த்தையினூடாகவும் அது போகிறது. இப்பொழுது, நானே இரண்டு வருடங்களாக ஆதியாகமத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன், நான் இன்னும் அதனூடாக என்னுடைய இரண்டாவது காலக்கட்டத்தில் தான் இருக்கிறேன், மீண்டும் அதனூடாக பாதியளவு கூட வரவில்லை. ஏன், அதில் இரண்டு அல்லது மூன்று வசனங்களுக்கே வாரக்கணக்கான நாட்களை அது எடுத்துக்கொண்டது. அந்த விதையில்... நீங்கள் அதைக் கண்டுகொள்ளலாம். 21நீங்கள் எவ்வகையான விளைச்சலைக் கொண்டிருக்கப் போகிறீர்கள் என்றோ, அல்லது வயல்நிலத்தில் என்ன வளர்ந்து கொண்டிருக்கிறது என்றோ நீங்கள் அறிய விரும்பினால், அது என்ன விதை என்று கண்டுபிடிக்கும்படி திரும்பிச் செல்லுங்கள். அந்த விதை தான் சரியாக அது என்னவாக இருக்கிறதோ அதை உற்பத்தி செய்யும். அது அதனதன் ஜாதியை விளைவிக்கும். ஒரு சோளம் ஒரு சோளத்தையும், ஒரு முட்செடியானது முட்செடியையும், ஒரு கோதுமையானது கோதுமையையும் கொண்டு வரும். அது என்னவாக இருந்தாலும், விதை என்னவாக இருந்ததோ, அதையே அது பிறப்பிக்கும். 22இந்த எல்லா சமயக்கோட்பாட்டு முறைகளும், வளர்ந்து வரும் காரியங்களும், இன்றுள்ள இந்த எல்லா காரியங்களும் இஸம்களும், எல்லாமும் தேவனுடைய கிருபையினாலே ஆதியாகமத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது, அது அங்கே பின்னால் அதனுடைய துவக்கத்தைக் கொண்டிருந்து, அது அப்படியே வேறொரு பெயரைப் பெற்றிருந்தது. ஆனால் நீங்கள் அந்நாளில் அந்த ஆவியினுடைய கிரியையை கவனித்து, இன்றைக்கு அது எவ்வாறு கிரியை செய்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனித்துப் பார்த்தால், அது அதே காரியமாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். நண்பர்களே, அதில் சில காரியங்கள் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது! அதில் சிலக் காரியங்கள் மிக உயர்ந்த மத சம்பந்தமான மண்டலங்களுக்குள் இருக்கிறது என்பதை நீங்கள் அறியும் போது, நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். 23இப்பொழுது, அந்த ஆவியை சற்று கவனித்துப் பாருங்கள், அது அங்கே முற்காலத்தில் எவ்வாறு காயீனில் எழும்பி, அது எவ்வாறு காம் வழியாக தொடர்ந்து வந்து, வெளியே நிம்ரோத்தின் வழியாக, பாபிலோனுக்குள் வந்தது; பிறகு பாபிலோனை விட்டு, தொடர்ந்து அது இயேசு வருகிற நாட்களுக்குள் வருகிறது. போதகர்களும், வேதமாணாக்கர் களுமாகிய அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொள்ளத் தவறி விட்டனர். வார்த்தையையும், வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தையும், அது எங்கேயிருந்தது என்பதையும், அது எவ்வாறு எழுதப்பட்டது என்பதையும் அறிந்திருந்த மெருகேற்றப்பட்ட பண்டிதர்களாகவும், பரிசுத்த மனிதர்களாகவும், நீதிமான்களாகவும் இருந்த அவர்கள் அங்கே நின்று கொண்டிருந்தனர், முழுவதுமாக, ஒவ்வொரு புஸ்தகச் சுருளைக் கொண்டும் மற்றும் எல்லா வற்றையும் கொண்டும் இருதயத்தின் மூலமாக அவர்கள் அதை அறிந்திருந்தனர், அவர்கள் ஒரு குறிப்பிட்ட வம்சத்தில் பிறக்க வேண்டியிருந்தது, அல்லது ஒரு ஆசாரியத்துவத்தில் வர வேண்டியிருந்தது, அல்லது-அல்லது ஒரு கோத்திரத்தில் ஒரு ஆசாரியனாக இருக்கும்படி வர வேண்டியிருந்தது. இன்றைக்குள்ள மெருகேற்றப்பட்ட பண்டிதர்களும், வேதாகம கல்லூரி மாணாக்கர்களும் அவர்களில் ஒருவருக்கு அப்பால் பழைய காலங்கடந்த ஒருவராகத்தான் இருந்திருப்பார், ஆனாலும் அவர்கள் இயேசுவை அறிந்து கொள்ளத் தவறி விட்டனர். இயேசு வந்த போது, அவர்கள் பரிசுத்த மனிதர்களாக இருந்தனர், இயேசு, 'நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள். நீங்கள் தேவனுடைய வல்லமையையும், தேவனுடைய வார்த்தையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்' என்றார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு பரிசுத்த, நீதிமானாகிய பண்டிதனை, வேத மாணாக்கனை, ஒரு 'பிசாசு' என்று அழைப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஆனால் அவர் அவ்வாறு தான் அழைத்தார். இப்பொழுது, நீங்கள் திரும்பிச் செல்வீர்களானால், அது எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுகொள்வீர்கள். 24மேலும், அது இன்றைக்கு ஒரு பயங்கரமான வலிமையோடு மிக வேகமாக அசைந்து கொண்டிருப்பதைக் கவனியுங்கள். ஓ, என்னுடைய சகோதரனே, சகோதரியே, நீங்கள் என்ன கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை எண்ணிப்பார்க்கும் போது, அது உங்களுக்கு ஏற்றதாயிருக் கிறது, வஞ்சிக்கும் சாத்தானுடைய வல்லமையை நீங்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்கள் அவனை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம். அவன் கூடுமானவரையில் மெருகேற்றப்பட்டவனாயிருக்கிறான். அந்திக்கிறிஸ்துவின் ஆவி கம்யூனிஸம் அல்ல. இல்லை. கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவுக்கு அந்திக்கிறிஸ்துவின் ஆவி உண்மையான காரியத்தைப் போன்று மிகவும் நெருக்கமாக இருக்கிறது. மத்தேயு 24ல், இயேசு அவ்வாறு கூறியுள்ளார். அது ஒரு பக்தியுள்ள ஆவி. ஓ, ஏன், காயீனும் ஆபேலும் சகோதரர்களாக இருந்தார்கள். காகமும் புறாவும், பறவைகள் இரவில் தங்கும் ஒரே இடத்தில் இருந்தன. ஏசாவும் யாக்கோபும் சகோதரர்களாக இருந்தார்கள். யூதாசும் இயேசுவும் ஒரே சபையில், ஒருவர் பிரசங்கியாராகவும், மற்றவன் பொக்கிஷ தாரியாகவும் இருந்தார்கள். அங்கே பாருங்கள், அது எப்போதுமே வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. காயீன்... பொய். சாத்தான் ஏவாளிடம் 90 சதவீதம் சத்தியத்தையே பேசினான், அது தொண்ணூறு சதவீதம் சத்தியமாக இருந்தது. உங்களால் கூறக்கூடிய பொய்! மனிதர்கள் ...லிருந்து காப்பாற்றிக்கொள்ளும்படி, வேதவாக்கியத்திலுள்ள சிறு பகுதிகளை பொருட்படுத்தாமல் புறக்கணித்து விடுவதை நான் எவ்வளவாக கேள்விப்பட்டிருக்கிறேன். அது அவர்களுடைய வேதசாஸ் திரத்தை புண்படுத்துகிறது. பாருங்கள்? ஆனால் இந்தப் பாகம் சரியாக இருக்குமானால், அந்தப் பாகமும் சரியாக இருக்கிறது! நாம் அதை ஒன்றாகப் பொருத்தி முழு வேதாகமத்தினூடாகவும் அதைப் பொருத்திப் பார்ப்போம். இப்பொழுது, ஆதியிலே தேவன்... 25அங்கே திரும்பிச் செல்ல நமக்கு நேரமிருக்காது, ஆனால் சபையின் துவக்கத்தை நாம் இங்கே துவங்கப் போகிறோம். அது தேவன்... போது இருந்ததாகும். இப்பொழுது, சபை என்ற வார்த்தைக்கு, 'வெளியே அழைக்கப்பட்டவர்கள், வெளியே அழைக்கப்பட்ட ஜனங்கள்' என்று அர்த்தம். இன்று வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு ஸ்தாபனத்திலும், அங்கே அவைகள் ஒன்வொன்றிலும் சில நல்ல ஜனங்கள் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். இயேசு வருவாரானால், அது வெளியே அழைக்கப்பட்ட ஒரு கூட்டமாக இருக்கும் என்று நம்புகிறேன். நாம் கர்த்தருடைய வருகையை விட்டு தூரமாக இருக்கிறோம் என்று நான் நம்புகிறேன், சபையினுடைய கருத்தின்படி பார்த்தால், நம்முடைய நிலைகள் கர்த்தருடைய வருகைக்கான எந்த நிலையிலும் இல்லை. நாம் தெய்வீகசுகமளித்தலுக்கான விசுவாசத்தையே கொண்டிருக்க முடியவில்லை, அப்படியானால் எடுத்துக்கொள்ளப்படுதலை பற்றி நினைக்க வேண்டாம். அங்கே ஏதோவொன்று சம்பவித்தாக வேண்டும். 26ஏன், யாராவது ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்து பேசுவார்களானால், அவர்கள், 'நீங்கள் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கிறார்கள். சபை அங்கத்தினர்களாகிய ஜனங்களில் சிலர் அவ்வாறு கேட்கிறார்கள். தெய்வீக சுகமளித்தலைக் குறித்துப் பேசும் போது, 'நான் அப்படிப்பட்ட காரியத்தை விசுவாசிக்க மாட்டேன்' (என்கிறார்கள்.) அவர்களால் அதைக் காண முடியவில்லை. 'நல்லது, இவர்கள் அவர்களை ஹிப்னாடிஸம் செய்கிறார்கள் என்று நம்புகிறேன்' என்று கூறுகிறார்கள். நல்லது, அப்படியானால், அந்த நபர் எப்பொழுதாவது எடுத்துக்கொள்ளப்படுதலில் எப்படி போக முடியும்? உயிர்த்தெழுவதற்கு அங்கே எதுவுமே இல்லாத போது, அவனால் எப்படி மரித்தோரிலிருந்து உயிர்த்தெழ முடியும்? அவனை உயிர்த்தெழச் செய்ய அங்கே எதுவுமேயில்லை. 27அது வெறுமனே பெயரளவிலான போலி விசுவாச மாக (make-belief) உள்ளது, அது மனரீதியாக உணர்ச்சிவசப் படுதலாயிருக்கிறது. நீங்கள், 'இயேசு கிறிஸ்து தேவ குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்' என்று கூறும் போது, அதெல்லாம் சரிதான், ஆனால், சகோதரனே, அது இருதயத்திலிருந்து வராவிட்டால், ஏன், அது மனதளவிலான காரியமாக மட்டுமே உள்ளது. பரிசுத்த ஆவியானவர் அதைக் குறித்து சாட்சி கொடுப்பது வரையில், அது இருதயத்திலிருந்து வர முடியாது. எந்த மனிதனும்... என்று இயேசு கூறியுள்ளார். அல்லது, வேதாகமம், 'பரிசுத்த ஆவியினால் மாத்திரமேயன்றி, இயேசுவைக் கிறிஸ்து என்று எந்த மனிதனாலும் கூறமுடியாது' என்று கூறுகிறது. நீங்களாகவே அதைக் கூறிக் கொள்ள முடியாது, பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்திலி ருந்து அதைப் பேச வேண்டும். இயேசு... செய்த போது, கவனித்துப் பாருங்கள். 28பேதுரு அவரைக் குறித்து அறிக்கை பண்ணின போது, அவன், 'நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து' என்றான். அதற்கு அவர், 'யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை' என்றார். அது சரியல்லவா? எனவே, நாம் எங்கே யிருக்கிறோம் என்று பாருங்கள். 29இப்பொழுது, மையப்பாகம், இப்பொழுது நாம் தொடங்கப் போகிறோம். ஆதியிலே, தேவன் அழைத்து, தம்முடைய ஜனங்களை வெளியே அழைத்தார். சகோதரன் காக்ஸ் அவர்களே, நான் அதிக உரத்த சத்தமாய் பேசுகிறேனா, அல்லது போதுமான சத்தம் இல்லையா? சற்று அதிக சத்தம், நான் வருந்துகிறேன், நான்.. இந்தக் காரியமானது பயங்கரமான சத்தத்தைப் பெற்றிருக்கிறது, நான் வழக்கமாக மகத்தான பெரிய பழைய தானியக் களஞ்சியங்களிலும், அரங்கங்களிலும், திறந்த வெளிகளிலும், மற்றும் காரியங்களிலும் இருந்திருக்கிறேன், நான் சற்று அதிக உரத்த சத்தமாய் கத்துகிறேன் என்று நினைக்கிறேன். நான் உங்களிடத்தில் கத்திக் கொண்டிருப்பதாக நினைக்கவில்லை. 30இப்பொழுது, இன்றிரவில், நம்முடைய முதலாவது (தலைப்பிற்காக), ஆதியாகமம் 12வது அதிகாரத்தில் துவங்கு வோம். (ஆதியாகமம் 12:1-3) கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னை சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். 31ஆபிரகாம் தன்னுடைய தகப்பனோடு பாபிலோனை விட்டு, சிநெயாருக்குள் வந்தான், அவன் சிநெயார், சிநெயார் பள்ளத்தாக்குக்கு வந்தான், பாபிலோன் அழிக்கப்பட்ட பிறகு, அல்லது அந்தக் குழப்பமானது சம்பவித்த பிறகு, அங்கு தான் அநேக ஆத்துமாக்கள் பிரயாணம் பண்ணினார்கள். ஆபிரகாமுடைய தகப்பன், ஆபிரகாமுடைய பெற்றோர் ஆபிரகாமையும் அவனுடைய அன்பார்ந்தவர்களையும் சிநெயாருக்குள் அழைத்துக்கொண்டு வந்தார்கள். அத்தேசம் முழுவதிலும், அந்த ஜனங்கள் எல்லாருடைய மத்தியிலும், தேவன் ஒருவனிடம் தயவைக் கண்டு கொண்டார், இன்னும் சரியாகச் சொன்னால், ஒரு மனிதன் தேவனிடம் தயவைக் கண்டடைந்தான். 32இப்பொழுது, அதுதான் கிறிஸ்தவத்தின் துவக்கம், சபையின் துவக்கம் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டு மென்று நான் விரும்புகிறேன். ஆபிரகாம் ஒரு நல்ல மனிதனாய் இருந்த காரணத்தினால், அவன் தேவனிடம் தயவைக் கண்டடையவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்; ஆபிரகாம் தேவனிடம் தயவைக் கண்டடைந்த காரணம் என்னவென்றால், தேவன் அவனைத் தெரிந்து கொண்டு, அவனைத் தேர்ந்தெடுத்தார்; அது ஆபிரகாம் தேவனைத் தெரிந்து கொண்டதல்ல; அது தேவன் ஆபிரகாமைத் தெரிந்து கொண்டதாக இருந்தது. உங்களால் அதைக் காண முடிகிறதா? மேலும் இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, அப்போது அது எப்படி இருந்ததோ, அவ்விதமே இன்றும் இருக்கிறது. அது நீங்கள் தேவனைத் தெரிந்து கொள்வதல்ல; அது தேவன் உங்களைத் தெரிந்து கொள்வதாகும். 33இப்பொழுது, இது ஒருக்கால் மிகவும் கடினமானதாக இருக்கலாம், நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். தேர்ந்தெடுத்து, தெரிந்து கொண்ட பிறகு, உடனடி யாக, மற்ற எல்லாவற்றை விட்டும் வேறுபிரிவதாக இருக்கிறது, அவர் அழைத்த உடனே, மற்ற எல்லாவற்றிலிருந்தும் வேறுபிரிதல். அவர் தெரிந்துகொண்டு, அழைக்கிறார். பிறகு அவர் அழைக்கும் போது, உங்களைப் பற்றிப்பிடித்திருக்கும் எல்லாவற்றிலிருந்தும் அவர் உங்களை வேறுபிரிக்கிறார். அது ஒரு ஸ்தாபனம் அல்லவென்பதை அது நிரூபிக்கிறது. அது இரண்டு மூன்று பேர் ஒன்றாக இருப்பதல்ல. அவர் ஒவ்வொரு தனிப்பட்ட நபரிடமும் அதை எதிர்பார்க்கிறார்! ஆமென். அது ஒவ்வொரு நபரோடுமுள்ள தனிப்பட்ட விவகாரமாக உள்ளது. 34அங்கேயிருக்கும் என்னுடைய தாயார் இரட்சிக்கப் பட்ட காரணத்தினால், நான் இரட்சிக்கப்பட்டிருக்கவில்லை. அது கிறிஸ்துவுக்குள், தேவன் என்னைத் தெரிந்து கொண்டதன் நிமித்தமாகவே. நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்களாகவே தெரிந்து கொள்வதல்ல; நீங்கள் எவ்வளவு ஜெபித்திருந்தாலும், அது உங்களுடைய தெரிந்து கொள்ளுதல் இல்லை, நீங்கள் ஒரு புதிய பக்கத்தைத் திருப்பின போது. உங்களுக்கு அதனோடு எந்த சம்பந்தமும் இல்லை. அது தேவன்! ஓ, என்னே, எது சத்தியம் என்பதை நீங்கள் காண வரும்போது! நீங்கள், 'நான் - நான் கர்த்தரிடம் திரும்பவில்லை என்றா கருதுகிறீர்கள்' என்று கேட்கலாம். இல்லை, ஐயா. நீங்கள் கர்த்தரிடம் திரும்புவதற்கு எந்த வழியுமே இல்லாதிருந்தது. உங்களுடைய முழு சுபாவமும், உங்களுடைய இயற்கை பண்புகள் முழுவதுமே தேவனுக்கு விரோதமாக இருந்தது. தேவனே உங்களை அழைத்தார். அது எப்போதுமே அந்தவிதமாகத் தான் இருந்து வருகிறது. 35மனிதன் ஏதேன் தோட்டத்தில், முதலாவது பாவம் செய்த போது, ஒரு பாவியினுடைய சுபாவத்தைக் கவனியுங்கள், மறைத்துக்கொள்வது. ஆனால் ஆதாம் தான் தேவனைக் கூப்பிட்டுக் கொண்டிருப்பதாக இருந்திருக்க வேண்டும்; ஆதாமோ மறைத்துக் கொண்டிருந்தான், தேவன் தான் ஆதாமை கூப்பிட்டுக் கொண்டிருந்தார். உங்களுக்கு அது புரிகிறதா? அதுதான் ஒரு பாவியின் சுபாவமாக இருக்கிறது, மறைத்துக்கொள்ளுதல், விலகி ஓடிச்சென்று, ஏதொவொன்றின் பின்னால் போய் விடுதல். ஆனால் தேவனோ கூப்பிட்டுக் கொண்டிருந்தார்! ஓ, என்னே. கிருபை, ஆச்சரியமான கிருபை, தேவன் அழைத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது கவனியுங்கள், நீங்கள், 'ஓ, அது ஆதாமும் ஏவாளும் தானே' என்று கூறலாம். அது எப்போதுமே வேதாகமத்தினூடாக அதேவிதமாக உள்ளது. இயேசு, 'என்னுடைய பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவனால் என்னிடத்தில் வர முடியாது' என்றார். அது சரிதானா? இப்பொழுது, அது வார்த்தையாக உள்ளது. அவ்விதமாகத்தான் நாம் அதை, அந்த வார்த்தையை விரும்புகிறோம், அப்போது நீங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்கிறீர்கள். 36இங்கேயுள்ள எத்தனை பேர்... இன்றிரவு கிறிஸ்தவர்களாக இருக்கிறீர்கள், நீங்கள் கிறிஸ்தவர்கள் என்றும், நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்று கூறுகிற ஏதோவொன்று உங்களுக்குள் இருக்கிறது என்று அறிந்திருக்கிற எத்தனை பேர் இங்கே இருக்கிறீர்கள்? ஆமாம். சரி. நீங்கள் பாருங்கள்? ஏன், நீங்கள் உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான ஜனங்களாக இருக்க வேண்டும். நீங்கள் அப்படியே அதை விசுவாசிக்க வேண்டும். என்னே, அது எளிதாக உள்ளது, அதற்காக தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள்! 37இப்பொழுது, நீங்கள் ஒரு கிறிஸ்தவராக ஆகக்கூடும் முன்பே, தேவன் உங்களை அழைத்தார். நீங்கள் தேவனை அழைக்கவில்லை; தேவன் தான் உங்களை அழைத்தார். இப்பொழுது, அவர் ஆபிரகாமை அழைத்தார், அவன் நம் எல்லாருக்கும் தகப்பனாக, விசுவாசத்தின் தகப்பனாயிருக்கிறான். இப்பொழுது கவனியுங்கள், அவர், 'ஆபிரகாமே!' என்றார். இப்பொழுது, அது தெரிந்து கொள்ளுதலாக இருக்கிறது. நான் அந்தத் தெரிந்துகொள்ளுதலின் பேரில் திடமாக தொடர்ந்து பேச விரும்புகிறேன், ஏனென்றால் அது சத்தியமாயுள்ளது. இப்பொழுது, நீங்கள்-நீங்கள் தற்செயலாக ஒரு கிறிஸ்தவனாக ஆகவில்லை, ஏனென்றால், நீங்கள் இந்த உலகத்தில் இருப்பதற்கு முன்பே, ஒரு கிறிஸ்தவனாக ஆகி விட்டீர்கள். நீங்கள் பிறப்பதற்கு முன்பே, ஏதேன் தோட்டத்திலிருந்தே, உலகத்தோற்றத்திற்கு முன்பிருந்தே, தேவன் உங்களை ஒரு கிறிஸ்தவனாக நியமித்து விட்டார். 'ஓ,' நீங்கள், 'அது உண்மைதானா, சகோதரனே?' என்று கேட்கலாம். அது சத்தியமாயுள்ளது. தேவன்... அங்கே நீங்கள் எப்பொழுதாவது எதையும் அறிந்து கொள்ளும் முன்பே. 38நீங்கள் அறிந்திருந்த ஒரு நேரம் அங்கே இருந்தது, இப்பொழுது உங்களுடைய - உங்களுடைய சிந்தையானது அதற்கு அந்தகாரப்பட்டிருந்தது. தாம் முன்பிருந்ததை அறிந்த வராயிருந்த ஒரு மனிதர் மாத்திரமே பூமியில் இருந்தார், அவர் தான் இயேசு. அவர், 'பிதாவே, உலகத்தோற்றத்திற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே என்னை மகிமைப்படுத்தும்' என்றார். அவர் மனித உரு எடுத்த தேவனாக இருந்தார், அவர் அங்கே பின்னால் சென்று, அது என்னவாயிருந்தது என்பதை அறிய முடிந்தது. ஆனால் நம்முடைய சிந்தைகளோ அங்கே அந்தகாரப்பட்டிருந்தது (blackened). 39ஆனால் நாம் நியமிக்கப்பட்டிருந்தோம், முன்குறிக் கப்பட்டிருந்தோம். முன்குறிக்கப்படுதல் என்பதற்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியுமா? எதையாவது முன்குறிப்பது என்பது 'தேவனால் முன்னரே பார்க்கப்பட்டது' என்பதாக இருந்தது. ஆமென். இப்பொழுது அது மேலே மிதக்கிற ஆடையை எடுத்த பால் அல்ல. கவனியுங்கள். அது உங்களை குழப்புகிறது என்று நம்புகிறேன். நாம் சற்றே ஒரு நிமிடம் அங்கே போவது நல்லது. என்னோடு எபேசியர் முதலாம் அதிகாரத்திற்குத் திருப்புங்கள், நாம் கொஞ்சம் வாசிக்கலாம், ஏனென்றால் நீங்கள்-நீங்கள் அதைத்தவறவிட்டு விடுகிறீர்களோ என்றும், நான் கூறிக்கொண்டிருந்ததையே நீங்கள் அப்படியே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களோ என்றும் பயப்படுகிறேன். நான் உங்களைக் குழப்பவில்லை. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். சற்று நேரத்தில், அல்லது சற்று கழிந்து, நாம் சபை என்பதற்கு வருவோம். இப்பொழுது, எபேசியர் 1ல், பவுல் பேசிக் கொண் டிருக்கிறான், அவன் அதை நேரடியாகவும், வெளிப்படையாகவும், சபையிடமே பேசிக் கொண்டிருக்கிறான். அதைத் தான் நாம் இன்றிரவு செய்து கொண்டிருக்கிறோம். இது குழந்தைகளுக்கானதல்ல. இது வயது வந்தவர்களுக்கானது, குழந்தைகளுக்கல்ல. 40சிறு குழந்தைகள். நடக்கக் கற்று கொண்டு வரும் ஒரு சிறு குழந்தை அங்கே பின்னால் எனக்கு உள்ளது. அவன், 'பூம்ப்' என்று (நடந்து) கீழே விழுகிறான், பின்பு மறுபடியும் எழும்பி, தான் ஏதோ பெரிய காரியம் செய்து கொண்டிருந்ததாக நினைத்துக்கொள்கிறான். நான் ஒருநாள் அவ்விதமாக இருந்தேன்; ஆனால் இப்பொழுதோ நான் ஒரு மனிதனாக இருக்கிறேன், நான் குழந்தைக்கேற்றவைகளை (சிறு பிள்ளைத்தனமான காரியங்களை) ஒதுக்கி தள்ளி அகற்றி விட்டேன். இப்பொழுது நாம் முழு உபதேசத்திற்கு வர வேண்டியிருக்கிறது. நல்ல பழைமையான சத்தமிடும் கூட்டங்கள் எனக்குப் பிடிக்கும், அங்கே நாம் நமது கரங்களைத் தட்டியோ, அல்லது சத்தமிட்டோ ஒரு நல்ல நேரத்தைக் கொண்டிருந்து, மகத்தான வல்லமைமிக்க ஆராதனைகளையும் மற்றும் காரியங்களையும் உடையவர்களாயிருந்து, அது இருந்தபடியே bubbles மேல் நடனத்தையும் உடையவர்களாக இருக்கிறோம். ஆனால் பொறுங்கள், பிறகு முகமுகமாய் யுத்தம் செய்வதற்கான நேரம் வரும்போது, நீங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. நாம் திரும்பிச் சென்று, அதைக் கண்டுபிடிப்போம். எது அதை நம்மைச் செய்ய வைக்கிறது என்பதை நாம் கண்டுபிடிப்போம். நாம் அடிப்படை அஸ்திபாரமான காரியத்திற்குத் திரும்பிச் சென்று, நாம் எங்கேயிருக்கிறோம் என்பதைப் பார்ப்போம். தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல்... (எனக்கு அது பிடிக்கும்)... எந்த வேதாகமக் கல்லூரியும் என்னை வெளியே அனுப்பவில்லை; தேவனுடைய சித்தத்தினாலே, எபேசு விலே... இருக்கிற, (இப்பொழுது கவனியுங்கள், அவன் அதைப் பேசிக் கொண்டிருக்கிறான்)... இயேசு கிறிஸ்து வுக்குள் விசுவாசிகளாயிருக்கிற... 41கவனியுங்கள், அது நேராக யாரிடம் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது? பாவியிடமோ, குழந்தைகளிடமோ அல்ல, ஆனால் நன்கு வளர்ந்தவர்களிடம் தான் கூறப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல்... கவனியுங்கள், ... பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். ஓ, என்னே! அவன் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என்று பார்த்தீர்களா? ஒரு கூட்டம் குழந்தைகளிடம் அல்ல. உன்னதங்களில் உட்கார்ந்திருக்கிற ஜனங்களிடமும், ஆசீர் வதிக்கப்பட்ட ஜனங்களிடமும் தான் பேசிக் கொண்டிருக்கிறான். இப்பொழுது அவன், 'ஒரு காரியம் உங்களுக்குத் தெரியும், நீங்கள் போதிக்கப்பட்டிருக்கிறீர்கள், நீங்கள் இரட்சிக் கப்பட்டிருக்கிறீர்கள், இவை எல்லாம் எதைப் பற்றியது என்று நான் உங்களிடம் கூற விரும்புகிறேன்' என்றான். ஓ, அது எனக்குப் பிடிக்கும், உங்களுக்கும் இல்லையா? 'நீங்கள் பூமியோடு மிகவுமாக கட்டப்பட்டிருப்பதற்குப் பதிலாக, சற்று நேரம் உன்னதங்களில் (Heavens) உங்கள் கால்களைப் பதிக்க விரும்புகிறேன். இப்பொழுது ஏனென்று நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். நான் உங்களைச் சற்று, சற்று-சற்று ஊக்குவிக்க, உங்களுக்கு சிறிது எழுப்புதலைக் கொடுக்க, சற்று சிலிர்ப்பூட்ட விரும்புகிறேன்' என்றான். ஆமென். உற்சாகப்படுத்தப்படுவது எனக்குப் பிடிக்கும், அது ஒரு விதத்தில் உங்களைக் கட்டியெழுப்புகிறது, குறிப்பாக, அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று உங்களால் கூற முடியும் இடத்தை நீங்கள் அறியும் போது! அவன், 'கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் உட்கார்ந்து, ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் ஒருமிக்க ஆசீர்வதிக்கப்பட்டு வருகிற, உங்களிடம் நான் இப்பொழுது பேச விரும்புகிறேன், தேவனுடைய வரங்கள் வெளிப்படுத்தப்படுதலும், தெய்வீக சுகமளித்தலும், தீர்க்கதரிசனங்களும், எல்லாமும் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. இப்பொழுது நீங்கள் முதிர்ச்சி யடைந்த ஜனங்களாக இருக்கிறீர்கள், நான் உங்களிடம் பேச விரும்புகிறேன். நான் இதை உங்களிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறேன்' என்றான். 42இப்பொழுது கவனியுங்கள், '(தெரிந்துகொண்ட) படியே...' ஆமென். இப்பொழுது இதோ அது இருக்கிறது. அது உண்மையில்... என்று நம்புகிறேன். அது சரியாக உள்ளே மிகவும் நன்றாக ஊறவைக்கப்படும்படி செய்யப் போகிறேன், ஏனென்றால் அது நலமானதைச் செய்யும், அது ஒருக்கால் நேரடியாக எலும்புகளுக்குள் போகலாம். ...அவருக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, யார் அதைச் செய்தது? 'நான் தான் அதைக் கேள்விப்பட்டு வந்தேனா'? இல்லை, இல்லை, நீங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டு வரவில்லை. 'அவர் தெரிந்து கொண்டிருக்கிறார், தெரிந்து கொண்டிருக்கிறார் (கடந்த காலம்), நம்மை (சபையை) அவருக்குள் தெரிந்து கொண்டிருக்கிறார்.' பவுலே, எவ்வளவு காலத்திற்கு முன்பு தெரிந்து கொண்டிருக்கிறார்? சென்ற வாரத்திலா, அல்லது நீங்கள் எழுப்புதலை நடத்தின போதா? இல்லை....உலகத்தோற்றத்துக்கு முன்னே... 43இப்பொழுது உங்களால் மேகத்தின் மேல் சவாரி செய்ய (பிரயாணம் செய்ய) முடியும், பாருங்கள். அவர் என்ன செய்தார்? 'அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) நம்மைத் தெரிந்து கொண்டார்.' யோபு 7:37க்குப் போய், அவர் அங்கே, 'நான் பூமியை அஸ்திபாரப்படுத்தினபோது நீ எங்கேயிருந்தாய்? நான் உலகத்தை அஸ்திபாரப்படுத்துகிறதற்கு முன்னே! அவைகள் எதின்மேல் போடப்பட்டது என்று என்னிடம் கூறு. அல்லது, விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் கெம்பீரித்த போது, நீ எங்கேயிருந்தாய்?' என்று கூறின இடத்தைக் காண நமக்கு சிறிது நேரம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அவர் யோபிடம், 'புருஷனைப்போல் இடைகட்டிக்கொள் (Buckle up), நான் உன்னிடம் பேச விரும்புகிறேன்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். 44இப்பொழுது பவுல், 'உலகத்தோற்றத்துக்கு முன்னே அவருக்குள், சபையாகிய நம்மைத் தெரிந்துகொண்டார்' என்று கூறுகிறான். இப்பொழுது கவனியுங்கள். ...நாம் ... பரிசுத்தமுள்ளவர்களும்... நம்முடைய சொந்த பரிசுத்தமல்ல. 'நல்லது,' நீங்கள், 'சகோதரன் பிரன்ஹாமே, உமக்கு பரிசுத்தத்தில் விசுவாசம் உண்டா?' என்று கேட்கலாம். நிச்சயமாக. என்னுடையதல்ல; அவருடைய பரிசுத்தத்தில். என்னுடைய பரிசுத்தம் ஒன்றும் கிடையாது; அவருடைய பரிசுத்தமே பரிபூரணமாயுள்ளது. நல்லது, அப்படியானால் நீங்கள், 'நீங்கள் குடிக்கலாம் என்றோ அல்லது... (செய்யலாம்) என்றோ நீங்கள் நம்புகிறீர்களா?' என்று கேட்கலாம். இல்லை, நான் ஒரு போதும் அவ்விதம் கூறவேயில்லை. பாருங்கள், கோதுமை விதை கோதுமையை மாத்திரமே பிறப்பிக்க முடியும், அது முட்செடியைப் பிறப்பிக்க முடியாது. (அதைக்குறித்த) எந்த ஆசையும் (வாஞ்சையும்) அங்கே அதற்குள் இருக்காது, முட்செடிகளைப் பிறப்பிக்கும்படியான எந்த ஜீவனும் அதற்குள் இல்லை. நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்போ மானால்... 45வஞ்சிக்கப்பட வேண்டாம், இப்பொழுது நீங்கள் இதை கவனமாக நன்கு ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்கள். பாருங்கள், நீங்கள் தொடர்ந்து, 'நல்லது, இதைச் செய்யும் போது நான்-நான் என்னைக் குற்றவாளியென்று தீர்க்கிற தில்லை, அதைச் செய்யும் போது, உலகத்தின் காரியங்களைச் செய்யும்போது, அது என்னைக் குற்றவாளி என்று தீர்ப்ப தில்லையே,' என்று கூறிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படியானால் இப்பொழுது நான்-நான் உங்களைச் சற்று புண்படுத்தப் போகிறேன், இறகுகளை வேறுவிதமாக பிடித்திழுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குள் இல்லவே இல்லை என்பதற்கு அது ஒரு உறுதியான அத்தாட்சியாக இருக்கிறது. அப்படியானால் நீங்கள் ஒருக்காலும் மறுபடியும் பிறந்திருக்கவேயில்லை. 'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூருகிறவன் எவனோ, அவனிடத்தில் இன்னும் தேவனுடைய அன்பு இல்லை.' இப்பொழுது, நீங்கள் அதை விட்டுவிட வேண்டும் என்று அறிந்திருக்கிற காரணத்தினால், நீங்கள் அதைச் செய்வதையோ, இதைச் செய்வதையோ விட்டு விடுவீர்களானால், நீங்கள் இன்னும் எங்கேயும் சென்றடையவில்லை என்பதற்கான அடையாளமாக அது இருக்கிறது. அந்தக் காரியம் உங்களுக்குள் மரித்து, அந்த சுபாவமானது வெளியே போகும் போது, அங்கே உள்ளே வேறொரு நபர் இருக்கி றார், அது... ஐ மாத்திரமே பிறப்பிக்க முடியும். கிறிஸ்துவுக்குள்ளிருந்த பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருந்து கொண்டு, கிறிஸ்துவைப் போன்ற ஜீவியத்தைப் பிறப்பிக்கிறார். நீங்கள் செய்கிற எதுவுமல்ல; அவர் என்ன செய்திருக்கிறாரோ அதுவே. உலகத்தோற்றத்துக்கு முன்னே அவர் அதைத் தெரிந்து கொண்டிருக்கிறார். 46யாரோ ஒருவர், 'நல்லது, நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன் என்று அறிவேன், ஏனென்றால் நான் புகைப்பிடிப்பதை விட்டு விட்டேன்' என்றார். நான் இரட்சிக்கப்பட்டதற்கு காரணம் அதுவல்ல, நீங்கள் இரட்சிக்கப்பட்டதற்கு அதுவல்ல காரணம். நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்று தேவன் உலகத்தோற்றத்திற்கு முன்னே உங்களைத் தெரிந்து கொண்ட காரணத்தினால் தான் (ripe old age) நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். அது தான் வேதப்போதகமாகும். ஆமென். இப்பொழுது, நீங்கள் பாருங்கள், அது நாமல்ல என்று கண்டுபிடிக்கத் துவங்குவோம். அது அவராக இருக்கிறது, பாருங்கள், அவர் நம்மைத் தெரிந்து கொண்டார். ஆபிரகாமால், 'நல்லது, தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் பாபிலோன் கோபுரத்திலிருந்து வந்திருக்கிறேன். அல்லேலூயா! ஆகையால் நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன்' என்று கூற முடியவில்லை. அப்படியானால், அதை அவர்கள் செய்தது தான் அதற்குக் காரணம் என்றால், அந்த முழு கூட்டமும் இரட்சிக்கப்பட்டிருக்கும். பாருங்கள், அவர் அவ்வாறு இரட்சிக்கவில்லை. 47அவர் ஆபிரகாமைத் தெரிந்து கொண்டார். அவர் அவனை அழைத்து, அவனைத் தெரிந்து கொண்டு, அவனை முன்குறித்து, அவனுக்கு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்து, ஆபிரகாமோடும் அவனுடைய சந்ததியோடும் என்றென்று மாக ஒரு உடன்படிக்கை செய்த போதுதான் மனுஷனுக்குக் கொடுக்கப்பட்ட நமது இரட்சிப்பின் முதல் தொடக்கமாக அது இருந்தது. இப்பொழுது நாம் இங்கே முன்னோக்கிச் சென்று, அதிலுள்ள முழு அதிகாரத்தையும் வாசிக்க முடியும், ஆனால் நமக்கு நேரமில்லை. இப்பொழுது, தேவன் அழைத்தார். கவனியுங்கள், அவர் இங்கே ஆபிரகாமை அழைத்த போது, அவர் அவனைத் தெரிந்து கொள்ளுதலின் மூலமே அழைத்தார். அவன் தெரிந்து கொண்ட காரணத்தினால் அல்ல; அது தேவன் தெரிந்து கொண்ட காரணத்தினால் தான். அவர் அவனுடைய ஜனங்களை விட்டு அவனை வெளியே அழைத்து, அவனை ஆசீர்வதித்து, 'நான் உன்னை இரட்சிக்கப் போகிறேன்' என்று அவனிடம் கூறினார். இங்கே அவர், 'நீ பூரண வயதில் என்னிடம் வர வேண்டும்' என்று கூறுகிறார். அவன் அதற்குத் தகுதியாயிருப்பதற்கு எதையும் செய்வதற்கு முன்பே, தேவன் அவனைத் தெரிந்து கொண்டு, அவனிடம் பேசினார். 'உனக்கு மட்டுமல்ல, ஆனால் உனக்குப் பிறகு உன்னுடைய சந்ததியும்' ஓ, என்னே! கவனியுங்கள். 'மேலும் அவன் திரும்பி...' 8வது வசனம். இப்பொழுது நாம் இந்த மற்ற காரியத்தின் பேரில் சற்று கூடுதலாக இங்கே வாசிப்போம். கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னபடியே அவன் புறப் பட்டுப்போனான். லோத்தும் அவனோடேகூடப் போனான்; ஆபிராம் ஆரானை விட்டுப் புறப்பட்டபோது, எழுபத் தைந்து வயதுள்ளவனாயிருந்தான். ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும்... தங்கள் சம்பத்தெல்லாவற்றையும்... கூட்டிக்கொண்டு... 48இப்பொழுது கவனியுங்கள், எதைச் செய்யக் கூடாது என்று தேவன் அவனிடம் கூறினாரோ அதை அவன் அங்கே சரியாகச் செய்தான், அவன் தன்னுடைய மருமகனாகிய லோத்தையும், தன்னுடைய தகப்பனையும் கூட்டிக் கொண்டு போனான். ஆனால் அவனுடைய தகப்பனைக் கூட்டிக்கொண்டு போகும்படி அவர் ஒருபோதும் அவனிடம் சொல்லவேயில்லை, ஆனால் எப்படியும் இவன் அவனைக் கூட்டிக்கொண்டு போனான். எந்த வேத வாசகரும், உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, நாளைய தினம் இதை ஆதியாகமத்தில் வாசித்துப் பாருங்கள். அந்த வயதான மனிதன் மரிக்கும் வரையில், பரிமளத்தைலத்திலுள்ள (ointment) ஒரு ஈயாக அது இருந்தது என்பதைக் கவனியுங்கள். அவன் வழியெல்லாம் ஒரு இடற்கல்லாகவே இருந்தான், அவ்வண்ணமே லோத்தும் இருந்தான்; தேவன் ஆபிரகாமை தான் அழைத்தார், லோத்தையல்ல. அவர் ஆபிரகாமை அழைத் தார், அவனுடைய தகப்பனை அல்ல. நல்லது, நீங்கள், 'அப்படியானால் சாராளைக் குறித்து என்ன?' என்று கேட்கலாம். ஒரு மனிதனும் அவனுடைய மனைவியும் ஒன்றே. எபேசியரில், 'அவர்கள் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்' என்று வேதாகமம் அவ்வண்ணமே கூறி யுள்ளது. சரி. 49ஆனால் அவர் ஆபிரகாமை அழைத்து, அவனிடம் கேட்டு, அவன் கொண்டிருந்த எல்லாவற்றிலிருந்தும் அவனை வேறுபிரித்துக்கொண்டு, ஒரு அந்நிய தேசத்துக்குள் போகும்படி அவனிடம் கூறினார். கவனியுங்கள், ஒரு வேறுபிரிதல்! நீங்கள் அதைக் குறித்து எதையுமே அறிந்திராத ஒரு அந்நிய தேசத்தில் போகுதல், அதுதான் கிறிஸ்தவம். உலக காரியங்களிலிருந்து வேறுபிரித்துக்கொள்ளுதல், ஏனென்றால் தேவன் உங்களை அழைத்திருக்கிறார். வேறொரு தேசத்துக்குள் சென்று, நீங்கள் அவர்களைக் குறித்து எதையுமே அறிந்திராத ஜனங்கள் மத்தியில் வாசம் செய்வது, ஒரு பரதேசியாக (pilgrim) இருக்கும்படி. ஆமென். நான் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும் போது, நான் என்னைத்தானே அடக்கிக் கொண்டிருப்பது கடினமாயுள்ளது. பரதேசி! அந்நியன்! மரித்துக் கொண்டிருந்த வயதான யாக்கோபு, பார்வோனுக்கு முன்பாக நின்றுகொண்டு, அவன், 'நான் அநேக வருஷங்கள் பரதேசியாய் சஞ்சரித்து வந்திருக்கிறேன்' என்றான். ஆமென். அவன் என்னவாக இருந்தான்? அவன் உணர்வடையத் தொடங்கினான். அந்தச் சிறு மனிதன் மிக மோசமானதைச் செய்திருந்தான். அவன் இங்கே ஒரு பரதேசியாக மாத்திரம் இருந்தான் என்பதை அறிந்திருந்தான். இப்பொழுது கவனியுங்கள். 50நாம் 8வது வசனத்திற்கு வருவோம், தேவன் ஆபிரகாமையும் அவனுக்குப் பிறகு அவனுடைய சந்ததியையும் எவ்வாறு இரட்சிக்கப் போகிறார் என்று அவர் இங்கே அவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணுகிறார். இப்பொழுது, அவர் நிபந்தனையற்ற உடன்படிக்கை செய்தார். அவன்-அவன் ஆபிரகாமாக இருந்த காரணத்தினால், அவர் அதைச் செய்தது சரியாக இருக்கவில்லை. அவர், 'இப்பொழுது, ஆபிரகாமே, நீ இதைச் செய்தால், நீ அதைச் செய்தால்' என்று கூறவில்லை. அவர், 'ஆபிரகாமே, நான் ஏற்கனவே அதைச் செய்து விட்டேன். நீ செய்ய வேண்டியது எதுவுமில்லை. நான் அதைச் செய்து விட்டேன், நானே அதைச் செய்து விட்டேன்!' என்றார். ஆமென். ஓ, என்னே, நான் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும் போது! தேவன் தாமே அதைச் செய்தார், அது நிபந்தனையற்றதாக இருந்தது. தேவனுடைய உடன்படிக்கை நிபந்தனையற்றது! 51நீங்கள், 'நல்லது, சகோதரனே, நான் மாமிசம் புசிப்பதை நிறுத்தி விட்டேன். நான் இதைச் செய்யவில்லை. நான்...' என்று கூறலாம். சகோதரனே, அதற்கு இதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது. நீங்கள் மாமிசம் புசிக்கிறீர்களா என்றோ, மாமிசம் புசிக்கவில்லையா என்றோ, ஓய்வு நாட்களையோ அல்லது அமாவாசைகளையோ (new moons) ஆசரிக்கிறீர்களா என்றோ, ஞாயிற்றுக் கிழமையில் ஞாயிறுப் பள்ளிக்குப் போகிறீர்களா என்றோ, இது என்னவாக இருக்கிறது என்றோ அல்ல. நீங்கள் நிபந்தனையற்ற விதமாக இரட்சிக்கப்பட்டு விட்டீர்கள். அப்படியானால் நீங்கள், 'சகோதரன் பிரன்ஹாமே, தேவனுக்கு மகிமை, நான் இரட்சிக்கப்பட்டு விட்டதால், நான் விரும்புகிறதை செய்யலாமே' என்று கூறலாம். ஆம், ஐயா. சகோதரனே, நீங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டால், உலகத்தைக்குறித்த எந்த வாஞ்சையும் உங்களுக்கு இராது. உங்களுடைய முழு இருதயமும் அதன்பேரில் தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும், உங்களால் அதில் இருந்து தூர விலகி இருக்க முடியாது. ஆனால் அங்கே ஒரு பலமான இழுப்பு இருக்கும் காலம் வரையில், அங்கே இன்னும் ஏதோ தவறுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது, தெரிந்து கொள்ளுதல், தேவன் ஆபிரகாமை அழைத்து, அவர் அவனை நிபந்தனையற்ற முறையில் இரட்சிக்கப் போவதாக அவனிடம் கூறினார். 52இப்பொழுது சிறிது கழிந்து, வாக்குத்தத்தத்தைப் பெற்ற பிறகுள்ள (இடத்திற்கு) நாம் இங்கே போவோம். நீங்கள் என்னோடு கூட ஆதியாகமம் 15:7க்குப் போக விரும்புகிறேன், இங்கே சற்று பொறுத்துக்கொள்ளுங்கள், நாம் சற்று நேரம் இங்கே வாசிப்போம். சரி. பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: இந்த தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே என்றார். அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான். 53இப்பொழுது, ஆபிரகாம், அந்தத் தேசமாகிய கல்தேயருடைய தேசத்தை விட்டு, ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, சிநெயார் தேசத்திலிருந்து வந்த பிறகு, அவன் வேறுபிரிக்கப்பட்டு வெளியே வந்தான். அதைக் கவனித்துப் பாருங்கள், அப்படியே இன்றுள்ள கிறிஸ்தவர்களைப் போன்று, இன்னும் அலைந்து திரிந்து கொண்டிருத்தல். பாருங்கள். அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக் கடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டு வா என்றார். 54இப்பொழுது, நீங்கள் அதில் அதைக் குறித்து வைத்துக்கொள்வீர்களானால், நாளைய தினம் நீங்கள் தொடர்ந்து அதை வாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நேரத்தின் நிமித்தமாக, நான் அதை நேர இடைவெளிகளில் மேற்கோள் காட்டுவேன், ஏனென்றால் நான் உங்களை நீண்ட நேரம் பிடித்து வைத்திருக்க விரும்பவில்லை. நீங்கள் நாளை இரவும் திரும்பி வர வேண்டுமென்று விரும்புகிறேன், அப்பொழுது தான் நாம் சரியாக இதற்குள் போக முடியும். நாம் இன்றிரவு அப்படியே ஒரு-ஒரு அஸ்திபாரத்தை அமைத்துக் கொண்டிருக்கிறோம், வெறும் ஒரு அடித் தளத்தை. பாருங்கள்? 55இப்பொழுது அவன் இந்த கிடாரியையும், வெள்ளாட்டையும், ஆட்டுக்கடாவையும் மற்றும் இரண்டு... ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும் எடுத்துக்கொண்டு, அவன் அந்த ஆட்டுக்கடாவையும் கிடாரியையும், மற்றவைகளையும் துண்டித்து, அவைகளை பரப்பி வைத்தான். அவன் காட்டுப்புறாவை துண்டிக்காமல், அதைத் துண்டிக்காமல் அங்கே உள்ளே வைத்தான். பிறகு சூரியன் மறைவது மட்டுமாக, பறவைகள் அதை நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டான். அப்போது அந்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, தேவன் ஆபிரகாமிடம் இறங்கி வந்து, அவர் இறங்கி வந்து, 'இப்பொழுது, ஆபிரகாமே, நான் என்ன செய்யப் போகிறேன் என்று உனக்கு நிரூபிக்கப் போகிறேன்' என்றார். மேலும் அவர்... 56பல வருடங்களுக்கு முன்பே, நான் இந்த இதே காரியத்தையே போதித்தேன் என்று இங்கே சபையில் இருந்த ஜனங்களாகிய உங்களில் அநேகருக்குத் தெரியும். ஆமாம். ஆம், ஐயா. முன்பு 1949ம் ஆண்டில், நான் இதைப் போதித்துக் கொண்டிருந்தேன். சரி, அவள் அதைத் தன்னு டைய வேதாகமத்தில் குறித்து வைத்திருந்தாள். 57கவனியுங்கள்! பிறகு அவர் இறங்கி வந்து, தாம் என்ன செய்யப் போகிறார் என்பதை ஆபிரகாமுக்குக் காண்பித்தார். முதலில், அவர் ஆபிரகாமுக்கு நித்திரை வரப் பண்ணி, 'இப்பொழுது, ஆபிரகாமே, அதனோடு செய்வதற்கு உனக்கு எதுவும் கிடையாது.' 58இப்பொழுது, உங்களை நீங்களே இரட்சித்துக் கொள்ள முயற்சிக்கிற உங்களிடம் தான். சபையில், இந்தக் கூடாரத்தில் அதை நான் புரிந்து வைத்திருக்கிறேன், அந்தப் போதனையின் கீழ் இருந்த பிறகு, அநேக ஜனங்கள் இக் கூடாரத்தை விட்டு விட்டு, அங்கே விசுவாசிக்க வேண்டி யிருக்கிற எல்லா வகையான காரியங்கள் ஒவ்வொன்றையும் விசுவாசிக்கும்படி வெளியே சமயக்கோட்பாட்டு முறைகளுக் குள்ளும் மற்றவைகளுக்குள்ளும் போய் விட்டார்கள். அவர் களில் சிலர் மாமிசம் புசிப்பதை விட்டு விட்டிருக்கிறார்கள், அவைகளை நிறுத்தி விட்டார்கள், மேலும் அவர்களில் சிலர் தங்கள் ஓய்வுநாட்களையும், அமாவாசைகளையும் அனுசரித்தார்கள், நான்... தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்வதை உண்மையிலேயே மறுதலித்த பிறகு, உயிர்களைப் பலியிடுவதையும் மற்றும் எல்லாவற்றையும் செய்தார்கள் என்று நினைக்கிறேன். அது இங்கே உள்ளே என்னவாக இருந்தது என்பதைத்தான் அது காண்பிக்கப் போகிறது. பவுல், 'அவர்கள் பிரிந்து போனார்கள், ஏனென்றால் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை' என்றான். பாருங்கள், அது சரியே. பாருங்கள், அது உண்மை. பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையை பற்றிப்பிடித்துக்கொள்வார். பலப்பரீட்சை (showdown) (வரும்) போது, அக்காரியங்கள் தவறானவை என்று நிரூபிக்கப்படும். 59இப்பொழுது, அவர், 'ஆபிரகாமே' என்றார். அவர் அவனை நித்திரைக்குட்படுத்தி, 'நான் அதை எவ்வாறு செய்யப்போகிறேன் என்றும், நான் எவ்வாறு என்னுடைய உடன்படிக்கையை காத்துக்கொள்ளப் போகிறேன் என்றும் உன்னிடம் காண்பிப்பேன்' என்றார். அவர் அந்த மிருகங்களை ஏற்றுக்கொண்டார், இப்பொழுது கவனியுங்கள், ஆபிரகாம் நித்திரைக்குப் போன போது, மரணமானது ஒவ்வொரு சிருஷ்டிக்கும் நிச்சயம் வந்தாக வேண்டும் என்பதையே காண்பிக்கிறது. அதன்பிறகு அவனுக்கு முன்பாக, எரிகிற அக்கினி சூளை (burning furnace) கடந்து போனது; எரிகிற அக்கினி சூளையானது நரகத்தை குறிப்பிடுகிறது, நரகத்திற்குப் போவதென்பது ஒவ்வொரு பாவிக்கும் உரியதாக உள்ளது. பிறகு அதற்கும் அப்பால், அந்த மலையின் மேல் செலுத்தப்பட்ட பலியின் பக்கமாக, ஒரு சிறிய வெள்ளை நிற ஒளியானது கடந்து சென்றது, அது பலியினுடைய அந்தத் துண்டங்கள் ஒவ்வொன்றின் நடுவே கடந்து சென்றது. உடன்படிக்கை! 60நீங்கள் கவனிப்பீர்களானால், அநேக நேரங்களில், ஜனங்கள் அநேக வழிகளில் உடன்படிக்கை செய்திருக்கி றார்கள். இன்று நாம் எவ்வாறு உடன்படிக்கை செய்கிறோம்? 'கரத்தை குலுக்கி, எனக்கு ஐந்து கொடுங்கள்' என்கிறோம். அதுதான் ஒப்பந்தமாக உள்ளது. அதுதான் நம்முடைய உடன்படிக்கை, இல்லையா? பழங்காலங்களில், அவர்கள் வழக்கமாக... சீனாவில், அவர்கள் எவ்வாறு உடன்படிக்கை செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் உப்பை எறிகிறார்கள். அதுதான் சீனாவில் உள்ள உடன்படிக்கையாக உள்ளது. பாருங்கள், அவர்கள் வித்தியாசமான உடன்படிக்கைகளைச் செய்கிறார்கள், வித்தியாசமான ஜனங்களுடைய வழக்கங்களாக அவை கள் உள்ளன. 61ஆனால் கிழக்கத்திய வழக்கம் என்னவென்றால், ஒரு மிருகத்தைக் கொன்று, இந்த மிருகத்திற்கு இடையில் நின்று, பிறகு எழுதுவார்கள். இங்கே, லேவியராகமத்தில் நீங்கள் அதைக் கண்டுகொள்ளலாம், அவர்கள் இங்கே தங்கள் உடன்படிக்கையை எழுதுகிறார்கள். அந்த உடன்படிக்கையானது, இந்த மரித்த மிருகத்தின் மேலாக வைத்து இரண்டாக கிழிக்கப்படுகிறது. அவர்கள் இந்த உடன்படிக்கையை முறித்துப்போடுவார்களானால், அவர்களுடைய சரீரங்களும் இந்த மரித்துப்போன மிருகத்தைப் போல இருப்பதாக என்று அவர்கள் இந்த மரித்த மிருகத்தின் மேல்வைத்து உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள். பின்பு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு துண்டைக் கொடுப்பார்கள். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைப்பார்கள். அவர்கள் திரும்ப வரும்போது, அந்த இரண்டு துண்டுகளும் அப்படியே சரியாக ஒரே துண்டுகளாக ஒன்றுசேர வேண்டியிருக்கிறது. எவ்வளவு அழகாயுள்ளது! 62'நான் அதைச் செய்வேன் என்று ஆணையிட்டேன், உன் சந்ததிக்குள் நான் பூமியிலுள்ள சகல தேசங்களையும் ஆசீர்வதிப்பேன்' என்று தேவன் ஒரு உடன்படிக்கை செய்து, காண்பித்துக் கொண்டிருந்தார், அவர் அதை முன்கூட்டியே காண்பித்துக் கொண்டிருந்தார். அதை வாசித்துப் பாருங்கள். 'நான் புறஜாதிகளை ஆசீர்வதிப்பேன், நான் கறுப்பு மனித னையும், மஞ்சள் நிற மனிதனையும், வெள்ளை நிற மனிதனையும் ஆசீர்வதிப்பேன். உன்னுடைய சந்ததி வழியாக, நான் எல்லாரையும் ஆசீர்வதிப்பேன், உன்னிலிருந்து இராஜாக்களும் பிரபுக்களும் தோன்றுவார்கள்.' 'கர்த்தாவே, நீர் அதை எவ்வாறு செய்யப் போகிறீர்?' 'எப்படியென்று நான் உனக்குக் காண்பிப்பேன்.' அந்தத் துண்டங்கள் பிரதிநிதித்துவம் வகித்த இடமாகிய அந்த மலைப்பகுதியின் மேல் அவர் அவனுக்குக் காண்பித்தார். அவைகள் ஒவ்வொன்றும் ஒரு சுத்தமான மிருகமாக இருந்தது என்றும், அது இயேசு கிறிஸ்துவினுடைய பலியையே குறிப்பிடுகின்றன என்றும் இங்கே யுள்ள எந்த வேதாகமப் பண்டிதரும் அறிவார்கள். அவரே அந்த ஆட்டுக்கடாவாக இருந்தார். அதனூடாக தீட்டுக்கழிக்கும் ஜலத்தை (waters of separation) நீங்கள் கொண்டிருந்தபோது, அந்தத் தீட்டுக்கழிக்கும் ஜலம் உண்டாக்கப்பட்ட கிடாரியாக அவர் இருந்தார். இப்பொழுது நாம் ஜலத்தினாலே, தீட்டுக்கழிக்கும் வார்த்தையினாலே, வார்த்தையின் மூலமாக, அதை விசுவாசிப்பதின் மூலமாக, பாவத்திலிருந்து கழுவப் பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்தப் புறாவும் (Pigeon), காட்டுப்புறாவும் (Turtledove) தெய்வீக சுகமளித்தலாக இருந்தது, அவை எல்லாமும் கிறிஸ்துவுக்குள் இருந்தன! ஆமென். 63தேவன் என்ன செய்யப் போகிறார் என்று அங்கே அவர் ஆபிராமுக்குக் காண்பித்தார், சூரியன் அஸ்தமித்து, பூமியின் மேல் மந்தாரமான போது, அவர் அவரை (கிறிஸ்துவை) அங்கே சுக்குநூறாகக் கிழித்தெறிந்து, அதோ அங்கே வானங்களுக்கும் பூமிக்கும் இடையில் கொல்லப் பட்ட தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய கிறிஸ்துவை ஈசாக்கின் சந்ததி வழியாக பிறப்பிக்கப் போகிறார் என்பதை அவர் ஆபிராமுக்குக் காண்பித்தார். தேவன் அவருடைய ஆத்துமாவை அவரை விட்டு பறித்தெடுத்து, பூலோகத்தின் குடும்பங்களோடு ஒரு உடன்படிக்கையை எழுதினார். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அந்த விலையேறப்பெற்ற கலப்படமற்ற இரத்தமானது இம்மானுவேலின் இரத்தநாளங் களிலிருந்து சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருக்கும் போது, அவர் அந்த ஆத்துமாவை அவரை விட்டு கிழித்துப் போட்டார். அவர், 'என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?' என்றார். அவருடைய முகம் முழுவதும் பரிகாச உமிழ்நீரினால் நிரம்பியிருந்தது, கொடூரமான நிந்தையின் கிரீடமானது அவருடைய புருவத்தின் மேல் பதிக்கப்பட்டிருந்தது, அவருடைய ஆணிகள் கடாவப்பட்டன, அவைகள் பெரிய ரோம ஆணிகளாக இருந்தன, அவரு டைய விலா எலும்புகள் அதன் வழியாக தெரிவது மட்டுமாக அவருடைய முதுகு கிழிக்கப்பட்டிருந்தது, அவர் சிலுவையில் ஆடிக்கொண்டே, கதறிச் சத்தமிட்டுக்கொண்டு, பாவிகளுடைய மரணத்தில் மரித்துக் கொண்டிருந்தார், உலகத்தின் பாவம் அவர்மேல் (சுமந்தது). அங்கே தேவன் அவருடைய பக்கவாட்டுப் பகுதிகளை பிளந்து, அவருடைய ஆத்துமாவை அவரை விட்டு கிழித்து, அவர், 'உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்' என்று கூறின போது, தம்முடைய தலையை சாய்த்தார். அப்போது பூமி குலுங்கியது, அதனுடைய கற்பாறைகள் பெயர்ந்து விழுந்தன (belched out). அங்கே தான் அவர் இருக்கிறார், அங்கே தான் தேவனுடைய உடன்படிக்கை இருக்கிறது! அங்கே தான் அதனுடைய நிறைவேறுதல் இருக்கிறது. தகர்ந்துபோன கற்பாறைகளுக்கும் இருண்ட ஆகாயத்திற்கும் மத்தியில் என் இரட்சகர் தம் தலையை சாய்த்து ஜீவனை விட்டார், திறவுண்ட திரை பரலோகத்தின் மகிழ்ச்சிக்கும் முடிவற்ற நாளுக்கும் வழியைத் திறந்து காண்பித்தது. 64ஓ கல்வாரியே, ஓ கல்வாரியே, இயேசு இரத்தம் சிந்தி எனக்காக மரித்தார்! அப்போது அவர் தம்முடைய சொந்த குமாரனுடைய ஆத்துமாவை கிழித்து, ஒரு உடன் படிக்கையை வேறுபிரித்துக்கொண்டு, அந்த சரீரத்தை அவர் பூமிக்குள் போட்டு விட்டார். அது அங்கே மூன்று பகலும் இரவுமாக கிடந்தது. அது உயிரோடெழும்பியது! 'என்னுடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர், நான் அவருடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடேன்.' அவருடைய ஆத்து மாவானது பாதாளத்திற்குள் ஏறிச்சென்ற அவருடைய ஆவி யாக இருந்தது. அவர் உயிர்த்தெழுந்தார், தேவன் அதைச் செய்து, அவருடைய சரீரத்தை உயிர்த்தெழச் செய்து, அவருக்கு ஜீவனைக் கொடுத்தார். இயேசுவினுடைய சரீரத்தை எடுத்து, அதை மகிமையில் தம்முடைய வலது பாரிசத்தில் வைத்து, ஒரு உடன்படிக்கையாக பரிசுத்த ஆவியை திரும்ப அனுப்பினார். 65அங்கே தான் காரியம். அதை அடையாமல் இருக்க வேண்டாம், சகோதரனே. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் இல்லாமல், நீங்கள் இழக்கப்பட்டிருக்கிறீர்கள். அது... மட்டுமே. பரலோகத்துக்குப் போய்ச் சேருவதைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இங்கே இயற்கைக்கு மேம் பட்டது எதுவுமில்லை என்றால், கதவுகள் திறக்க முடியாது, நீங்கள் அங்கே நடந்து சென்று, அதன் மேல் உங்கள் தலையை மோத தான் முடியும். ஆனால் தேவனுடைய ஆவி அங்கே உள்ளே இருக்குமானால், உள்ளேயிருக்கும் தேவனுடைய ஆவியானது கதவுகளைத் திறந்து கொடுக்கும் (unhinge). அதோ அங்கேயுள்ள அதைத் திறக்கும்படியாக இங்கே உள்ளே அந்தக் காரியமானது இருந்தாக வேண்டும். அது சரியே. எனவே இயேசு கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதன் பேரில் நீங்கள் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டு விட்டீர்கள். 66இப்பொழுது, இதோ அவர் வந்து, கிழித்து போட்டு, வெவ்வேறாகக் கிழித்துப் போட்டு, துண்டுகளாக கிழித் தெறிந்து விட்டார் (tore to pieces). அவருடைய ஆத்துமா தேவனிடத்திற்குப் போனது. தேவன் அவரை ஆசீர்வதித்தார். பிறகு அவருடைய ஆத்துமாவானது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் ரூபத்தில் திரும்பி, பரிசுத்தப்படுத்தவும், சிந்தையை மாசில்லாமல் சுத்தப்படுத்தவும், இருதயத்தைச் சுத்தப்படுத்தவும் ஒவ்வொரு விசுவாசிகளுக்குள்ளும் வந்தது, பரிசுத்த ஆவியினுடைய ஒரு பாகத்தை அங்கே உள்ளேயும், இங்கும் அங்குமாக விட்டுச் சென்றார். பரிசுத்த ஆவியானது பகிர்ந்தளிக்கப்பட்ட போது, இயேசுவுடைய சரீரத்தை கல்லறையை விட்டு வெளியே கொண்டு வந்த அந்த அதே பரிசுத்த ஆவியானது எடுத்துக் கொள்ளப்படுதலில் போகும். ஒன்றோடொன்று பொருந்த வேண்டிய அந்த உடன்படிக்கையானது, அவர் அங்கே கிழிக்கப்பட்டு, சரீரத்தைக் கொடுக்கையில், தேவனிடம் திரும்பிச் சென்று, அந்த ஆவியோ பூமிக்குத் திரும்பி வந்தது. அப்படியானால், உங்களுடைய ஆவியானது அதேவிதமான ஒரு ஆவியாக இருக்க வேண்டும், அல்லது அது ஒன்றாக போகாமல் அந்த இடத்தைத் தவற விட்டு விடும். ஆமென். ஆம், ஐயா. உங்களை நீங்களே உருவாக்கிக்கொள்ளும் காரணத்தினால் அல்ல, ஆனால் தேவனுடைய அன்பானது உங்கள் ஆத்துமாவுக்குள் வீசியடித்து, பூமிக்குரிய ஒவ்வொரு விக்கிரகங்களையும் வலுக்கட்டாயமாக அகற்றிப் போட்டு விடும் ஏதோவொன்றின் காரணத்தினால் தான். அங்கே தான் அது இருக்கிறது. 67அங்கே ஏதோவொன்று மெல்லப்பேசிக்கொண்டு, தேவனை நோக்கிக் கதறிக் கூப்படுகிறது, அது இங்கே உள்ளேயிருக்கும் உங்கள் ஆத்துமா பரலோகப் பிதாவை நோக்கிக் கூப்பிடுவதாகும். அங்கே தான் காரியம். அதுதான் உங்களுக்கு ஒரு விசுவாசத்தைக் கொடுக்கிறது, அப்போது நீங்கள் ஆபிரகாமின் வித்தாக ஆகிறீர்கள். அப்போது நீங்கள் ஆபிரகாமைப் போன்று தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசிக்கிறீர்கள். அது தாமதித்தாலும், இன்னும் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். திட நம்பிக்கை! ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய் தள்ளா டிக்கொண்டிருக்காமல் (சந்தேகப்படாமல்), வல்லவனாகி, தேவனுக்கு துதியைச் செலுத்திக் கொண்டிருந்தான். ஒரு எழுப்புதல் தொடங்கி, வேறொரு எழுப்புதல் மட்டுமாக உங்களால் இரட்சிப்பில் நிலைத்திருக்க முடிய வில்லையே. பிறகு உங்களை நீங்களே ஆபிரகாமின் சந்ததி என்று அழைத்துக்கொள்கிறீர்களா? நீங்கள் முதலில் ஒரு காரியத்தைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது நல்லது. நீங்கள் எதையும் தவறாக மதிப்பிட வேண்டாம். சரியாக வார்த் தையோடு தரித்திருங்கள். ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய் தள்ளாடிக்கொண்டிருக்காமல் (சந்தே கப்படாமல்) இருந்தான். அவர் அவனுக்கு ஒரு குமாரனைக் கொடுப்பதாக அவனிடம் கூறின போது, அவன் இருபத்தைந்து வருடங்களாக காத்திருந்து, எல்லா நேரமும் வல்லவனாக வளர்ந்து வந்தான். அவன் கிருபையிலும் கர்த்தரை அறிகிற அறிவிலும் வளர்ந்து வந்தான். ஆமென். 68பிரசங்கம் பண்ண வேண்டுமென்ற நோக்கமில்லை, ஆனால் அது அப்படியே எனக்குள்ளிருந்து பிரசங்கம் பண்ண வேண்டியிருக்கிறது. சரி. 69தேவன் அழைத்து, தெரிந்து கொள்கிறார். இப்பொழுது, நீங்கள் இதை நன்கு ஒப்புக்கொண்டாக வேண்டும், ஒருபோதும் இரட்சிக்கப்பட மாட்டாத ஜனங்கள் அங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். ஒருபோதும் இரட்சிக்கப்பட மாட்டாத ஜனங்கள் அங்கே உண்டு, அவர்கள் என்ன செய்தாலும் அது காரியமில்லை. அது உங்களுக்குத் தெரியும். இழக்கப்பட வேண்டுமென்றே முன்குறிக்கப்பட்ட ஜனங்கள் இருக்கிறார்கள். இரட்சிக்கப்பட வேண்டுமென்று முன்குறிக்கப் பட்ட ஜனங்களும் உண்டு. இரட்சிக்கப்பட வேண்டுமென்று முன்குறிக்கப்பட்ட எல்லாரும் எப்படியும் இரட்சிக்கப்பட்டே தீருவார்கள். 70அது, அது மிக நன்றாக போகவில்லை. நீங்கள் அதைப் புரிந்து கொள்ளாதது போன்று தோன்றுகிறது. நல்லது, அப்படியானால், நாம் திருப்பி, அதைக் கண்டுபிடித்து, தேவன் என்ன கூறியிருக்கிறார் என்று பார்ப்போம். நாம் அங்கு போவோம், முதலில் புதிய ஏற்பாட்டுக்குப் போவோம். அப்படியே ஒரு நிமிடம், ரோமர் 9ம் அதிகாரத்தை எனக்குக் கொடுங்கள், இது சரியா இல்லையா என்று பார்ப்போம், சிலர் இழக்கப்படப் போகிறார்கள் என்றும், சிலர் அப்படி ஆவார்கள் என்றும் தேவன் கூறியிருக்கிறாரா என்று பார்ப்போம். தேவனுடைய வார்த்தையை நீங்கள் நேசிக்கிறீர்களா? நல்லது, இப்பொழுது அது என்ன கூறுகிறது என்று பார்ப்போம். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். உங்களுடைய நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அவசரப்பட வேண்டாம். இப்பொழுது புதிய ஏற்பாட்டில், ரோமர் 9ம் அதிகாரத்தில், பவுல் பேசிக் கொண்டிருப்பதைக் கவனியுங்கள். பழைய ஏற்பாட் டிலும் அநேக இடங்களை நீங்கள் எடுக்கலாம். 71குறித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு, அதோடு கூட யூதா 4ஐயும் குறித்துக் கொள்ளுங்கள், நீங்கள் அங்கே இருக்கையில், 'தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக் கேதுவாகப் புரட்டி, உலகத்தின் இச்சைகளுக்குப் பிறகே போய் விட்ட பூர்வகாலத்து மனுஷர் இந்த ஆக்கினையடைவார்கள் என்று முன்குறிக்கப்பட்டுள்ளது.' அதோடு கூட, தீமோத்தேயுவில், அங்கே அது, 'யம்பிரேயும் யந்நேயும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிர்த்து நின்றதுபோல, இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்பார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்' என்று கூறுகிறது. அவர்கள் அங்கே இருப்பார்கள் என்று தேவன் கூறினார், அவர்கள் இங்கேயும் இருக்கிறார்கள்! பொய்யான காரியங்களை நோக்கிப் பாருங்கள். நீங்கள் இங்கே வெளியே போய், பெந்தெகோஸ்தே சபைகளினூடாகவும், மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, ஹோலினஸ் சபைகளி னூடாகவும், நீங்கள் எங்கு போக விரும்பினாலும் அங்கு போங்கள், ஜனங்கள் அதை ஆள்மாறாட்டம் செய்து கொண் டிருப்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள், ஜனங்கள் தாங்கள் அவ்வாறு இருப்பதைப் போன்று ஆக்கிக் கொள்கிறார்கள். 'நல்லது, தேவனுக்கு மகிமை, அல்லேலூயா!' 72அன்றொரு நாள் ஒரு பெண்மணி, 'எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள், ஆனால், தேவனுக்கு மகிமை, சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும்படியாக கர்த்தர் என்னை அழைத்திருக்கிறார். அல்லேலூயா, நான் வெளியே சென்று, அதைச் செய்யப் போகிறேன்' என்றாள். அவர் அப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்ததே கிடையாது. அவர் ஒரு போதும் அவ்வாறு செய்ததில்லை, அவ்வாறு ஒருபோதும் செய்யவும் மாட்டார், ஏனென்றால் அவர் அவ்வாறு செய்ய மாட்டார் என்று சொல்லியிருக்கிறார். இப்பொழுது, ஆனால், ஓ, என்னே, அவள் அவ்வாறு நினைத்தாள். ஆம், ஐயா. வளர்க்கும்படியாக தேவன் அவளுக்கு பத்து பிள்ளைகளைக் கொடுத்திருக்கிறார், அதைச் செய்வது தான் அவளுடைய கடமையாயிருக்கிறது. சரி. ஆனால் அதைக் குறித்த காரியம் என்னவென்றால், அவர்கள் உற்சாகம் கொண்டு, தங்களைத் தாங்களே முழுவதும் அசுத்தமாக ஆக்கி விடுகிறார்கள். 73நல்லது, அவர்கள், 'எனக்கு யாரும் போதிக்க வேண்டிய அவசியமில்லை. தேவனுக்கு மகிமை. நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டேன்' என்று கூறலாம். நல்லது, அப்படியானால், பரிசுத்த ஆவியானவர் சிலரைப் போதகர்களாக சபைக்குள் நியமித்திருக்கிறார் என்று அது கூறின போது, பரிசுத்த ஆவி தவறாக இருந்திருக்குமா? தேவன் அவர்களைப் போதகர்களாக சபைக்குள் வைத்திருக் கிறார். அது அதைத் தீர்த்து வைக்கிறது. பரிசுத்த ஆவியானவரே போதிக்கிற எல்லாவற்றையும் செய்யப் போவதாக இருந்தால், அவர் ஏன் அங்கே போதகர்களை வைத்திருக் கிறார்? புரிகிறதா? சரி. பாருங்கள்? ஜனங்கள் தண்ணீரில் ஞானஸ்நானம் பண்ணப்படுவதுமல்லாமல், அவர்களுடைய மூளைகளிலும் ஞானஸ்நானம் பண்ணப்படுவது தான் அவர்களுக்கு அவசியமாயிருக்கிறது. அது சரியே. சரி. அந்தக் கூர்மையான பேச்சுக்காக மன்னித்துக்கொள்ளுங்கள், ஆனால் உண்மையாகவே அது அவளுக்குள் ஊடாகத் தோய்ந்து பரவ விட நான்-நான் விரும்புகிறேன். சகோதரனே, நமக்கு ஒரு எழுப்புதல் வேண்டும், நீங்கள் அந்தக் காரியத்தை கிளறிவிட வேண்டும். நீங்கள் அதைச் செய்யக் கூடும் முன்பாக, நீங்கள் சாத்தானை உதைத்துத் தள்ளியாக வேண்டும். அவனோடு மட்டுமீறிய அமளி செய்து கொண்டிருக்க வேண்டாம், உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள மறுத்து விட்டு, அங்கேயே நில்லுங்கள். உலகத்தைச் சுற்றிலும், அவனிடம் சண்டையிட வேண்டியிருந்தது, தேவனுக்காக எப்பொழுதாவது நின்ற மற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனும் அவனோடு சண்டையிட வேண்டியிருக்கிறது. ஆனால் நீங்கள் எதில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிவீர்களானால், நீங்கள் அறிந்து வைத்திருப்பது சத்தியமாக இருந்து, அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று இருக்குமானால், உங்களால் அங்கே நிற்க முடியும். 74நீங்கள், 'நல்லது, தேவனுக்கு மகிமை, நான் குடிப்பதை விட்டு விட்ட காரணத்தினால் இரட்சிக்கப்பட்டு விட்டேன். தேவனுக்கு மகிமை, என்னுடைய முதுகில் ஒரு நடுக்கம் பாய்ந்து செல்வதை நான் கொண்டிருந்தேன். என்னுடைய முகத்தில் பலத்த காற்று வேகமாக அடித்தது. சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?' என்று கூறலாம். நிச்சயமாக. ஆனால் வேகமாய் அடித்த அந்த பலத்த காற்று எங்கிருந்து வந்தது என்பதை முதலில் காண விரும்புகிறேன். புரிகிறதா? அது சரியே. அது உண்மை. அது நடுங்கச் செய்கிறது, சரிதான், ஆனால் நான் நடுக்கங் கொண்ட காரணத்தினால் நான் இரட்சிக்கப்படவில்லை, என்மேல் பலத்த காற்று வேகமாக அடித்த காரணத்தினால் நான் இரட்சிக்கப்பட்டிருக்கவில்லை. 'சகோதரனே, உமக்கு அதில் விசுவாசம் இல்லையா?' ஆமாம், எனக்கு விசுவாசம் இருக்கிறது. ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள், நாம் இங்கே முன்பு குறிப்பிட்ட காரியத்திற்கு சற்று திரும்பிப் போவோம். பிசாசானவன் சில போலியான காரியங்களை அங்கே நெடுக வைத்திருக்கிறான். தேவனுடைய நிபந்தனைகளை நான் சந்தித்த காரணத்தினால் நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். அவர் என்னை அழைத்தார், அவர் என்னை அழைத்தார் என்பதை நான் அறிவேன். அவருடைய வார்த்தையின் பேரில் நான் அவரை ஏற்றுக்கொண்டேன், ஆகையால் நான் சாத்தானைப் பார்த்து, 'கர்த்தர் உரைக்கிறதாவது!' என்று கூற முடியும். 75இயேசு இங்கே பூமியின் மேல் இருந்த போது, அவர் தேவனாக இருந்தார், அவர் இம்மானுவேலாக இருந்தார். தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து, உலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டார். அவர் சாத்தானை சந்தித்த போது, தம்முடைய மகத்தான வரங்களில் எதையும் அவர் ஒரு போதும் உபயோகிக்கவில்லை. அவர், ''மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் பிழைக்க மாட்டான்' என்று எழுதியிருக்கிறது. 'உன்னுடைய தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதிருப்பாயாக' என்று எழுதியிருக்கிறதே' என்றார். அவர் அவனைத் தோற்கடித்தார். அதுதான் அது, வேதவாக்கியத்தை அறிந்து கொள்வது. சாத்தானுக்கும் கூட அது தெரியும், ஆனால் தேவனுடைய வார்த்தையை எவ்வாறு சரியாக பகுப்பது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். புரிகிறதா? 76கவனியுங்கள், பவுல் பேசிக் கொண்டிருக்கிறதை கவனித்துக் கேளுங்கள். பவுலுடைய உபதேசத்தை எத்தனை பேர் ஏற்றுக்கொள்கிறீர்கள்? அவன், 'ஒரு தூதனாவது வேறு எதையாகிலும் போதித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்' என்று கூறினான். நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்கு சாட்சியாயிருக்கிறது. பவுல் தன்னைத்தானே உறுதிப்படுத்துவதைக் கவனியுங்கள், பாருங்கள், நீங்கள் அதை உறுதியாக அறிந்து கொள்ள வேண்டும் என்று அதை அவ்வண்ணமாகக் கூறிக் கொண்டிருக்கிறான். எனக்கு மிகுந்த துக்கமும்... மனவேதனையும் உண்டாயிருக்கிறது. நான்... நான்... மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே. 77'ஓ, யூதர்கள் எல்லாருமே தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனங்கள்' என்று கூறப்படுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது சரியல்ல. அது உண்மை அல்ல. யூதர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் அல்ல. பாருங்கள், அவர்கள் தேவன் தெரிந்தெடுத்த ஜனங்கள் அல்ல. இப்பொழுது நீங்கள் கவனியுங்கள், பவுலும் அதே காரியத்தைச் சொல்லவில்லை என்பதைப் பாருங்கள், அவன் ஒரு யூதனாக இருந்தான். பாருங்கள், ஆபிரகாமுக்கு பதினொரு பிள்ளைகள் இருந்தார்கள், அது உங்களுக்குத் தெரியும் (இல்லையா), அவர்கள் எல்லாருமே ஆபிரகாமுடைய வித்தாகத்தான் இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் ஆபிரகாமின் வித்தாக இருந்தார்கள், ஆனால், 'ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்.' அவர்களில் மற்றவர்களிடத்திலோ, இஸ்மவேலிடத்திலோ, அவனுக்கிருந்த மூன்றாவது மனைவியாகிய மற்றவளிடமிருந்து உண்டான மற்ற ஒன்பது பிள்ளைகளிடமுமல்ல. இல்லை. அது, 'ஈசாக்கினிடத்தில் சந்ததி விளங்கும்' என்பதாக இருந்தது. பொறுங்கள், இது அதே அதிகாரத்தில் இருக்கிறது என்று நம்புகிறேன். அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கையும், நியாயப்பிரமாணம் அருளப்படுதலும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களு டையவைகளே; இப்பொழுது, அவன் இஸ்ரவேலர்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். இப்பொழுது அவனைக் கவனியுங்கள், அவன் என்ன கூறுகிறான் என்று கவனியுங்கள். பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென் றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட சர்வத்துக்கும் மேலான தேவன். ஆமென். தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே. அது சரிதானா? அப்படியானால், அங்கேயிருந்த யூதர்கள் எல்லாரும் இஸ்ரவேலர்கள் அல்ல, அவர்கள் எல்லாரும் அதுவாக இருக்கவில்லை. கவனியுங்கள். அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும்... 78அது அவர்களை இஸ்ரவேலர்களாக ஆக்கி விடுவதில்லை. இப்பொழுது கவனியுங்கள். 'சகோதரன் பிரன்ஹாமே, நீர் எதை முன்னடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறீர்?' நான் கிறிஸ்துவை முன்னடையாளப்படுத்திக் கொண் டிருக்கிறேன். கிறிஸ்துவை அறிக்கை பண்ணுகிற எல்லாரும் கிறிஸ்தவர்கள் அல்ல. சபைக்குப் போகிறவர்கள் எல்லாரும் கிறிஸ்தவர்கள் அல்ல. ஆபிரகாமுடைய சந்ததி எல்லாரும் வாக்குத்தத்தத்தைக் கொண்டிருக்கவில்லை... இல்லை. அது ஒரு தெரிந்து கொள்ளுதலாக இருந்தது. அது வாக்குத்தத்தமாக இருந்தது. அந்த வாக்குத்தத்தமானது ஆபிரகாமுக்கு முன்னரே சொல்லப்பட்டது. தேவனுடைய தெரிந்து கொள்ளுதலானது உலகத்தோற்றத்துக்கு முன்பே முன்குறிக்கப்பட்டது. பாருங்கள்? கவனியுங்கள்! அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் அவர்கள் (எல்லாரும்) பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று (சொல்லியிருக்கிறதே). மற்ற யூதர்களிடத்தில் அல்ல, ஆனால் ஈசாக்கினிடத்தில். ஈசாக்கு வழியாக இயேசு வருகிறார். அதுதான் ஆபிரகாமின் சந்ததி, அவர் கிறிஸ்துவாக இருக்கிறார். அப்படியானால் அது முதலில் ஆபிரகாமுடைய சந்ததியாக இருந்தது, இனச்சேர்க்கையின் மூலமாக வந்த சந்ததி அல்ல, அது தேவனால் எண்ணப்பட்ட (reckoned) அவனுடைய விசுவாசமாக இருந்தது. நமக்குள்ளிருக்கும் விசுவாசத்தின் மூலமாக, கிறிஸ்துவினுடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலை விசுவாசிக்கும் போது, அது நம்மை ஆபிரகாமின் சந்ததியாக கொண்டு வருகிறது. 79ஆபிரகாமுடைய விசுவாசத்திற்கான ஒரு வாக்குத்தத்த முத்திரையாக, அவன் விருத்தசேதனம் பண்ணப்பட் டான். இப்பொழுது, அவன் விருத்தசேதனம் பண்ணப்படுகையில், அவன் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை, அவன் விருத்தசேதனம் பண்ணப்படுவதற்கு முன்பே வாக்குத்தத் தத்தைப் பெற்று விட்டான். மூப்பரே, அது சரிதானா? (ஒரு சகோதரன், 'ஆமென்' என்று கூறுகிறார் - ஆசிரியர்.) சகோதரன்... எங்கேயிருக்கிறார்? மற்ற பிரசங்கியார், அவர் உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் கண்டேன், சகோதரன்... அவர்கள், அவர் அங்கே பின்னால் ஒலிப்பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆமாம். சரி. 80அவன் விருத்தசேதனம் பண்ணப்படுவதற்கு முன்பே வாக்குத்தத்தத்தைப் பெற்று விட்டான். ரோமர் 4ம் அதிகாரம் அதை உங்களுக்குக் கூறும். அவன் விருத்தசேதனம் பண்ணப்படுவதற்கு முன்பே வாக்குத்தத்தத்தைப் பெற்றான். பிறகு தன்னுடைய விசுவாச கீழ்ப்படிதலுக்கான ஒரு முத்திரையாக அவனுக்கு விருத்தசேதனம் கொடுக்கப்பட்டது. இப்பொழுது நாம்... என்று கூறும் போது. ஆகையால் தான் பில்லி கிரஹாமும், சார்ல்ஸ் ஃபுல்லரும், பில்லிங்ஸ் அவர்களும், அவர்கள் எல்லாரும், அந்த பாப்டிஸ்டு சகோதரர்களும் அக்காரணத்தினால் தான் அவைகளைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் அநேகரிடம் அவ்வண்ணமாக நான் கூறினேன், ருபஸ் மோஸ்லி மற்றும் முழு கூட்டத்தினரிடமும் கூறினேன். நான் சொன்னேன்... அவர், 'நல்லது, இரண்டே வாரங்களில் இருபதாயிரம் மனமாற்றங்களை நாங்கள் கொண்டிருந்தோம். அவர்களால் இருபது பேரைக் (கூட) கண்டுபிடிக்க முடியவில்லை' என்று கூறினார். நான், 'அவர்கள் மனமாற்றம் அடைந்திருக்கவில்லை' என்றேன். 'ஓ,' அவர், 'அவர்கள் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்' என்றார். நான், 'இன்னுமாக, அவர்கள் மனமாற்றம் அடைய வில்லை' என்றேன். அது சரியே... மட்டுமாக நீங்கள் மன மாற்றம் அடையவில்லை. மனமாற்றம் என்பதற்கு, 'மாற்றப் படுதல்' என்று அர்த்தம். மேலும் கவனியுங்கள், பவுல்... 81பேதுரு கர்த்தர் பேரில் விசுவாசம் வைத்திருந்தான், அவன் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தான், வியாதியஸ்தரைச் சுகப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும், மரித்தோரை உயிர்ப்பிக்கவும் அவனுக்கு வல்லமை கொடுக்கப்பட்டிருந்தது. இயேசு சிலுவையிலறையப்படுவதற்கு முந்தின இரவு, இயேசு அவனிடம், 'நீ மனமாற்றம் அடைந்த பின்பு (நீ குணப்பட்ட பின்பு), உன் சகோதரனை ஸ்திரப்படுத்து' என்றார். அது சரிதானா? இருவருமே இரட்சிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டிருந்தனர், (அப்படியிருந்தும்) மனமாற்றம் அடைந்திருக்க வில்லை. அது வேதவாக்கியமாக உள்ளது. 'ஓ, அவன் பரிசுத்தமாக்கப்பட்டிருந்தானா?' ஆம், ஐயா. யோவான் 17:17, 'பிதாவே, சத்தியத்தினாலே இவர்களைப் பரிசுத்தப்படுத்தும்.' தகுதியற்ற ஒரு பாத்திரத்தில் அவர் அந்த ஆவியை வைப்பார் என்று நீங்கள் நினைக் கிறீர்களா? அவர்கள் வெளியே சென்று பிசாசுகளைத் துரத்தி, திரும்பி வந்து, சத்தமிட்டார்கள். சரி, மெதோடிஸ்டுகளே. அவர்கள் திரும்பி வந்து, சத்தமிட்டு, தேவனைத் துதித்து, 'ஓ, பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகின்றன!' என்று கூறினார்கள். ஊப், சற்று பொறுங்கள்! மத்தேயு 10ம் அதிகாரத்தில், அவர், 'பிசாசுகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்' என்றார். அது சரி தானா? 82இப்பொழுது நான் உங்களை சற்று நேரம் அமைதிப்படுத்த விரும்புகிறேன். யூதாசும் அவர்களோடு இருந்தான். அது சரிதானா? யூதாஸ் குட்டையிலிருந்த ஒரு பெரிய வாத்தாக இருந்தான். அவனும் கூட சத்தமிட்டான், களிகூர்ந்தான். சபையானது பெந்தெகோஸ்தே வரைக்கும் வருவது மட்டுமாக அவன் சபையைப் பின்தொடர்ந்து வந்தான். ஆனால் அது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ளும் படியாக பெந்தெகோஸ்தேவுக்கு வந்த போது, அவன் அதைப் புறக்கணித்து, இயேசுவை காட்டிக்கொடுத்தான். அதுதான் அந்திக்கிறிஸ்து. இன்றும் அந்த ஆவியானது தொடர்ந்து வந்து, விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுதலையும் மற்றும் எல்லாவற்றையும் போதித்து, சரியாக பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்துக்கு வந்து, அப்போது அதனுடைய நிறத்தைக் காண்பிக்கிறது. அது சரியே. 83புறப்பட்டுப் போன அந்த பத்து கன்னிகைகளைக் கவனியுங்கள். ஐந்து பேர்... அவர்கள் எல்லாருமே கன்னிகைகளாக இருந்தார்கள். அவர்களில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களாக இருந்தார்கள்; ஐந்து பேருடைய தீவட்டிகளில் எண்ணெய் இருந்தது. எண்ணெய் என்பது என்ன? பரிசுத்த ஆவி. பாருங்கள்? அது சரியே. அவர்கள் எல்லாருமே கன்னிகைகளாக இருந்து, நல்லவர்களாக ஜீவித்து, சுத்தமான ஜீவியத்தை உடையவர்களாக இருந்தார்கள். நீங்கள், 'நல்லது, சகோதரனே, நான் நடன நிகழ்ச்சிகளுக்கும் (dances), காட்சிகளுக்கும் போவதில்லை' என்று கூறலாம். அது வெறுமனே நல்ல நடத்தைக்குரிய காரியமாக உள்ளது. அங்கே இயற்கைக்கு மேம்பட்ட ஒரு காரியம் இல்லாவிட்டால்! நீங்கள் சத்தமிட்ட காரணத்தினாலோ, நீங்கள் அந்நிய பாஷைகளைப் பேசுகிற காரணத்தினாலோ, நீங்கள் மேலும் கீழும் குதித்த காரணத்தினாலோ, நீங்கள் இதைச் செய்த காரணத்தினாலோ அல்ல; ஆனால் இங்கே உங்களை மாற்றுகிறதும்... வைக்கிறதுமான இயற்கைக்கு மேம்பட்ட ஏதோவொன்று சம்பவித்திருக்கிறது தான் காரியம். நீங்கள் தேவனுக்குள் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் நங்கூரம் பாய்ச்சப்பட்டிருக்கிறீர்கள். அது சரியே. 'நல்லது, உங்களுக்கு அதில் விசுவாசமில்லையா?' சத்தமிடுவதை நான் விசுவாசிக்கிறேன், இந்த எல்லா காரியங்களையும் நான் விசுவாசிக்கிறேன், ஆனால் அது (அதற்கான) பதில் அல்ல. 84மெதோடிஸ்டுகள், தாங்கள் சத்தமிட்ட போது, அதைக் கொண்டிருந்ததாக எண்ணினார்கள், ஆனால் அவர்கள் தவறாக இருந்ததைக் கண்டுகொண்டார்கள். அவர்கள் அநேகர் சத்தமிட்டும், அதைக் கொண்டிருக்கவில்லை. பெந்தெகோஸ்தேகாரர்களும் கூடவே வந்து, அந்நிய பாஷைகளில் பேசி, அவர்கள், 'நாங்கள் அவளைப் பெற்று விட்டோம்' என்று கூறினார்கள், ஆனால் அவர்கள் தவறாக இருந்ததைக் கண்டுபிடித்தார்கள். அவர்களில் அநேகம் பேர் அந்நிய பாஷைகளில் பேசியும் எதையும் கொண்டிருக்க வில்லை. 'நான் மனுஷர் பாஷையையும் தூதர் பாஷையையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை.' அவர்கள் அதைக் கொண்டிருக்க வில்லை. அது சரியே. அந்த காரணத்தினால் தான் முழு உலகமும் அதினாலேயும் மற்ற காரியத்தின் மூலமாகவும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. அது (அதற்கான) பதில் அல்ல. மாம்சீகமான எந்த ஆர்ப்பாட்டமோ அல்லது மனக்கிளர்ச்சியோ அல்ல, ஆனால் உங்களுடைய முழு கருத்தையும், உங்களுடைய முழு சுபாவத்தையும் மாற்றுகிற இங்கே உள்ளே சம்பவித்திருக்கிற ஏதோவொன்று. அப்பொழுது நீங்கள் மனமாற்றமடைந்திருக்கிறீர்கள்; நீங்களல்ல, ஆனால் கிறிஸ்து உங்களுக்குள்ளே வந்து, உங்களை மாற்றியிருக்கிறார். பழைய மனுஷனில், உங்களுடைய சுபாவம் மரித்து விட்டது, நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள், நீங்கள் ஒரு புதிய மனுஷனாயிருக்கிறீர்கள். கவனியுங்கள். ஆமென். 85சொல்லுங்கள், நான் இங்கே தாமதித்துக் கொண் டிருக்கிறேன், நான் தாமதித்துக் கொண்டிருக்கவில்லையா? அங்கே பின்னாலிருக்கும் சகோதரர்களே, நான் சற்று மிக நீண்ட நேரத்தை எடுத்துக்கொண்டால், கொஞ்சம் என்னைப் பார்த்து சத்தமிடுங்கள். நான் சற்றே ஒரு நிமிடத்தில், இஸ்ரவேல் புத்திரர்களை இங்கே கொண்டு வர வேண்டும், ஆனால் இக்காரியங்களைச் செய்வது எவ்வாறு தேவனுக்கு அடுத்தது என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். நீங்கள் இன்னும் என்னை நேசிக்கிறீர்களா? சரி. இப்பொழுது அப்படியே தொடர்ந்து எனக்காக ஜெபித்துக் கொண்டிருங்கள். சரி. ஆனால் அப்படியானால், இப்பொழுது, சற்று நேரம், என்னை கொஞ்சம் ஓய்வெடுக்க விடுங்கள். அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும், அவர்கள் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று (சொல்லியிருக்கிறதே). அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே (ஓ, அதை நோக்கிப் பாருங்கள்) அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள். 'வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்கள்.' என்ன வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது? அது எவ்விதமான ஒரு வாக்குத்தத்தம்? உலகத்தோற்றத்துக்கு முன்பே தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணி விட்டார். அவர் அவர்களை அழைத்தார். அதுதான் சந்ததி. நீங்கள் இதை விட்டு விட்டதன் காரணமாகவோ, அதை விட்டு விட்டதன் காரண மாகவோ, பொய் பேசுவதை விட்டு விட்டதன் நிமித்த மாகவோ, திருடுவதை விட்டு விட்டதன் நிமித்தமாகவோ அல்ல. அது வெறுமனே நல்நடத்தைக்குரிய செயல்களாக இருக்கின்றன, ஒரு நல்ல குடிமகன் அதைச் செய்வான். இங்கே உள்ளே ஏதோவொன்று சம்பவிக்கும் மட்டுமாக, நீங்கள் மறுபடியும் பிறப்பது மட்டுமாக, இன்னும் நீங்கள் உங்களைத்தானே ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்ள முடியாது, இங்கே உள்ளே சம்பவித்திருக்கிற ஏதோ வொன்றை நீங்கள் (பெற்றிருக்க வேண்டும்). கவனியுங்கள். அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே. இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே, (இப்பொழுது இதைக் கவனியுங்கள்), ரெபெக்காள் கர்ப்பவதியானபோது, 86உங்களுடைய சட்டையை அணிந்து கொண்டு, உங்கள் தலைச்சீராவையும் ஆயத்தமாக வையுங்கள். இது உங்களை மறுபக்கம் திரும்பச் செய்யும். பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், (இது ஏசாவும் யாக்கோபும்) நல்வினை தீவினை... செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம்... அது நீண்ட நேரம் மனதில் பதியும்படி விட்டுக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது விழித்துக் கொள்ளுங்கள், அப்படியே ஒரு சிறிதான ஒன்று. 'ஏசாவும் யாக்கோபும், பிள்ளைகள் ஒன்றும் பிறவாமலும், அவைகள் சரி எது தவறு எது என்றும் கூட அறிந்து கொள்ளும் முன்பே.' ...தேவனுடைய தெரிந்துகொள்ளுதலானது கிரியைகளினாலே நிலைநிற்காமல், அழைக்கிறவராலே நிலை நிற்கும்படிக்கு, வியூ! நீங்கள் இரட்சிக்கப்படும்படி மாமிசம் புசிப்பதை விட்டு விட்டீர்கள் என்று நினைத்தேன்? உங்களுக்கு அதனோடு எந்த சம்பந்தமும் இல்லை! நீங்கள் இரட்சிக் கப்பட்டால், உலக தோற்றத்துக்கு முன்பே தேவன் உங்களை அழைத்து, உங்களை இரட்சித்திருக்கிறார். அது சரிதானா? இப்பொழுது கவனியுங்கள். எழுதியிருக்கிறபடியே, மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்ட படியே. அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது. பிள்ளைகள் எதுவும் பிறவாததற்கு முன்பே, தேவன், 'ஒருவனை சிநேகித்து மற்றவனை வெறுத்தேன்' என்றார். அது தேவனுடைய வார்த்தை தானா? நான் அதற்குப் பொறுப்பல்ல, அதைப் பிரசங்கிப்பதைத் தவிர வேறு எந்தப் பொறுப்புமில்லை. 87இப்பொழுது, தெரிந்து கொள்ளுதல் என்பது நீங்கள் செய்ய வேண்டியிருந்த எதுவும் அல்ல; அது தேவன் என்ன செய்திருக்கிறார் என்பதாக உள்ளது. தேவன் அதை உங்களுக்காக கிறிஸ்துவுக்குள் உலகத்தோற்றத்துக்கு முன்பே செய்து விட்டார். 'பிதா எனக்குக் கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.' அல்லேலூயா! ஓ, என்னே! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான் உணர்ச்சிவசப்படவில்லை; ஆனால் நான் சந்தோஷமாயிருக்கிறேன். 'பிதா எனக்குக் கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன், அவன் பாத்திரவானாயிருந்து, அவன் ஆவியைப் பெற்ற பிறகு, நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான். நான் அவனை கடைசி நாளில் எழுப்புவேன்.' [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.] 88நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? ஊ! தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார், அது நிபந்தனையற்றது. தேவனுடைய அன்பானது உங்கள் இருதயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது, நீங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், நீங்கள் எல்லாரையும் நேசிக்கிறீர்கள், முழு உலகமும் உங்களுக்கு வித்தியாசமாக ஆகி விட்டது, அவள் சரியாக அங்கே நங்கூரமிடப்பட்டிருக்கிறாள், எதுவும் உங்களை அசைப்பதில்லை, அப்படியே சந்தோஷமாயிருந்து, தொடர்ந்து செல்லுங்கள். தேவனுக்கு மகிமை! எதுவுமே உங்களைத் திரும்பிப் பார்க்கச் செய்யாது. ஓ, நீங்கள் வெளியே சென்று, குளிர்ந்து போய், சற்று மனம் உடைந்து போகலாம், ஆனால் தேவனுடைய அந்த வித்தானது தொடர்ந்து உண்மையாகவே இருக்கும். வேதாகமம், 'நாம் விசுவாசமில்லாதவர்களாக இருந்த போதிலும், ஆனால் அவரால் அப்படி இருக்க முடியாது. அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார், அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார்' என்று கூறுகிறது. இப்பொழுது கவனியுங்கள். நாம் இதை வாசிப்போம். ஆகையால் நாம் என்ன, ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? (பவுலைக் கவனியுங்கள்) தேவனிடத்தில் அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே. அங்கே அநீதி உண்டா? அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார். ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல,... ஓ, நீங்கள், 'தேவனுக்கு மகிமை, அல்லேலூயா, நான் மரிப்பதற்கு முன்பாக இரட்சிக்கப்படுவேன்' என்று கூறலாம். நீங்கள் இரட்சிக்கப்படுவீர்களா? அதைக் குறித்து கூறும்படியாக தேவன் ஏதோவொன்றை வைத்திருக்கிறார். ... விரும்புகிறவனாலும் அல்ல, (அவ்வண்ணமாக இல்லை), ஓடுகிறவனாலும் அல்ல, (என்ன?) இரங்குகிற தேவனாலேயாம். ஓடுகிறவனாலும் அல்லது விரும்புகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம். அது தேவனுடைய தெரிந்து கொள்ளுதலாக இருக்கிறது. தேவன், தாம் விரும்புவதைச் செய்கிறார். 89இப்பொழுது சற்று கூடுதலாக கவனியுங்கள். நான் இதை இங்கே சிவப்பு எழுத்துக்களில் குறித்து வைத்திருக்கிறேன், நிறைய குறித்து வைத்திருக்கிறேன், நான் அதைப் பார்க்க முடிவதே கஷ்டமாக இருக்கும் அளவுக்கு அது முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது. அது, நான் அதை இங்கே அதிகமாக வாசித்திருக்கிறேன். '... அங்கே என்ன இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. அது ஒரு... ஆமாம், அது தேய்க்கப்பட்டிருக்கிறது. அது இங்கேயிருக்கிறது என்று காண்கிறேன், அது அங்கே சிவப்பு மையினால் முழுவதும் மறைக்கப்பட்டிருக்கிறது. 'வேதவாக்கியம்... நாளை இரவில் என்னுடைய மற்ற வேதாகமத்தை வைத் திருப்பேன். ...என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் எங்கும், பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், அவனை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக... தேவன் பார்வோனை எழுப்பி, அந்த நோக்கத்துக்காக அவனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார். தேவன் யூதாஸ்காரியோத்தை எழுப்பினார், அவன் இங்கே கேட்டின் மகனாக பிறந்தான். அது சரிதானா? தேவன் ஏசாவிடமும் யாக்கோபிடமும் கூறினார், ஏசாவும் யாக்கோபும் பிறப்பதற்கு முன்பே, என்ன சம்பவிக்கப் போகிறது என்பதைக் குறித்த எல்லாவற்றையும், அவர் வெறுத்த ஒருவனையும், அவர் நேசித்த மற்றவனையும் குறித்து அவனுடைய தாயிடம் தேவன் கூறினார். அது உண்மை தானா? எனவே எல்லாவற்றிலும் எல்லா காரியங்களையும் செய்பவர் தேவன் தான், உங்களுக்கு அதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது. தேவன் உங்களை அழைத்திருப்பதால், தேவனுடைய அன்பானது உங்களுடைய இருதயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர் அழைத்திருக்கிறவர்கள் எல்லாரும் அவரிடம் வருவார்கள், அதில் யாருமே இழக்கப்பட மாட்டார்கள். தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார், அவர், 'அவர்களில் ஒருவரும் இழக்கப்பட மாட்டார்கள், பிதா எனக்குக் கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும். வேதவாக்கியங்கள் நிறைவேறத்தக்கதாக, யூதாஸ்காரியோத்து கெட்டுப்போனானேயல்லாமல் அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை. நான் கடைசி நாளில் அவர்களை எழுப்புவேன்' என்றார். 90இப்பொழுது, நீங்கள், சற்று நேரத்துக்கு முன்பு, நீங்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறினீர்கள். எது உங்களைக் கிறிஸ்தவனாகச் செய்தது? ஒரு கிறிஸ்தவனாக இருக்க வேண்டுமென்று தேவன் உங்களை உலகத் தோற்றத்துக்கு முன்பே அழைத்த காரணத்தினால், நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக ஆனீர்கள். அப்போது நீங்கள் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிறைக்கப்பட்டு, நித்திய ஜீவனைப் பெற்றீர்கள். அவர் ஏன் உங்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுத்தார்? உங்களுடைய விசுவாசத்திற்கான ஒரு முத்திரையாகவே அதைக் கொடுத்தார். நீங்கள் முதலில் விசுவாசத்தைக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது நீங்கள், “நல்லது, நீர் சற்று நேரத்துக்கு முன்பு பில்லி கிரஹாமைக் குறித்துக் கூறினீர், அவர்கள், '... எல்லாரும் யார், எத்தனை பேர் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள், அவர்கள் கரத்தை உயர்த்துங்கள்' என்று சத்தமிட்டதாகக் கூறினீர். அது சரிதானா?' என்று கூறலாம். நிச்சயமாக, அதெல்லாம் சரிதான். அது நல்லது தான், ஆனால் அது வெறுமனே தொடக்கம் தான். அதன்பிறகு நீங்கள் உண்மையாகவே அதை விசுவாசித்து, அதை உண்மையாகவே உங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொண்டு, சரியாகப் போதிக்கப்பட்டிருக்குமானால், அப்போது ஒரு விருத்தசேதனமாக பரிசுத்த ஆவியானவர் வருவார், ஆபிரகாமுடைய விசுவாசத்திற்குப் பிறகு, ஒரு உறுதிப் பாடாக, அவர் அதை ஆபிரகாமுக்குக் கொடுத்தார். 91இப்பொழுது நீங்கள் சொல்லுகிறீர்கள், ஜனங்கள், 'நாம் காத்திருப்பு கூட்டத்தை நடத்துவோம். தேவனுக்கு மகிமை, நாம் திரும்பிப் போவோம். தேவனுக்கு மகிமை, நாம் பரிசுத்த ஆவிக்காக காத்திருப்போம்' என்று கூறலாம். அங்கே அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. காத்திருத்தல் (Tarry) என்பதற்கு 'ஜெபி (pray)' என்று அர்த்தமல்ல. காத்திருத்தல் (Tarry) என்பதற்கு 'காத்திரு (wait)' என்று தான் அர்த்தம். காத்திருத்தல் (Tarry) என்ற வார்த்தைக்கு 'காத்திரு (wait)' என்று அர்த்தம் என்று எத்தனை பேருக்குத் தெரியும். இயேசு, 'நான்... வரைக்கும், வாக்குத்தத்தமானது உங்களுக்குக் கொடுக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் காத்திருங்கள்' என்றார். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்களோ எனக்குத் தெரியாது. அவர்கள் அநேகமாக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். எனக்குத் தெரியாது. ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் ஒருபோதும் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. 'பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசின போது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் விழுந்தார்.' யாவர் மேலும் இறங்கினார்! பவுல் அவர்கள் மேல் தன்னுடைய கரங்களை வைத்த போது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் வந்தார். அது சரிதானா? பாருங்கள், காத்திருத்தல் என்பது இல்லை. பரிசுத்த ஆவியானவர் அங்கேயிருந்து, அவர்களுடைய விசுவாசத்தின் உறுதிப்பாடாக, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை அவர்களுக்குக் கொடுத்தார். 92ஆபிரகாமுடைய விசுவாசத்தின் உறுதிப்பாடாக, அவனுக்கு விருத்தசேதனத்தை தேவன் உடையவராயிருந்தார். அது என்னவாக இருந்தது? பரிசுத்த ஆவி என்பது என்ன? பரிசுத்த ஆவி எதற்காக என்று யாரோ ஒருவர் என்னிடம் கூறினார். அது ஒரு அடையாளமாக இருக்கிறது. அது சரிதானா? விருத்தசேதனம் என்பது என்னவாக இருந் தது? ஒரு அடையாளமாக இருந்தது. அது சரிதானா? ஒரு அடையாளம். அவர் ஆபிரகாமை ஏற்றுக்கொண்டிருந்தார் என்பதற்காக, விருத்தசேதனமாகிய ஒரு அடையாளத்தை தேவன் கொடுத்தார். நீங்கள், 'நான் தேவனை விசுவாசிக்கிறேன், நான் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன்' என்று கூறும்போது, அவர் உங்களுடைய விசுவாசத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதற்கான ஒரு அடையாளமாக பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை தேவன் உங்களுக்குக் கொடுக்கிறார். அல்லேலூயா! அப்போது நீங்கள் தேவனுடைய இராஜ்யத்துக்குள் முத்திரை போடப்பட்டிருக்கிறீர்கள்; அடுத்த எழுப்புதல் வரைக்கும் அல்ல, ஆனால் நீங்கள் மீட்கப்படும் நாள் வரைக்கும். எபேசியர் 4:30, 'நீங்கள் மீட்கப்படும் நாள் வரைக்கும் முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.' அங்கே தான் காரியம். 93இப்பொழுது துரிதமாக செல்லலாம், ஏறக்குறைய ஐந்து நிமிடங்கள் தான் இருக்கின்றன, நாம் ஆதியாகமம் 45ம் அதிகாரத்திற்குப் போவோம். இங்கே ஒரு-ஒரு அற்புதமான சிறு குறுக்கு வழியை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன், நாளை இரவு நீங்கள் இந்த இஸ்ரவேல் புத்திரர்களை கண்டுபிடித்து, அவர்களை வெளியே அழைத்துவரும் அந்த இடத்திற்குள் அவர்களைக் கூட்டிக்கொண்டு வரும்படியாக அதைச் செய்ய விரும்புகிறேன். நான் இன்றிரவு சற்று காலதாமதம் செய்து விட்டதற்காக வருந்துகிறேன், ஆனால் முதலில் நான் இந்தப் பிரயாணத்தைத் துவங்க வேண்டி யிருந்தது. 94இப்பொழுது, ஆபிரகாம் வாக்குத்தத்தத்தை பெற்றுக் கொண்டான். ஈசாக்கு கூடவே வருகிறான். பலிகளைக் குறித்து உங்களுக்குத் தெரியும். நான் அதைத் திரும்பவும் உங்களுக்குக் கொடுக்க முயற்சித்திருக்கிறேன், அங்கே அந்த முற்காலத்து சபையானது வெளியே அழைக்கப்பட்டு, தெரிந்து கொள்ளப்பட்டு, தேவனுடையதாக இருந்தது, அது இன்று இருப்பது போலவே இருந்தது. தேவன் ஆபிரகாமைத் தெரிந்து கொள்ளுதலில் மூலமாக அழைத்தார்; அவர் சபையைத் தெரிந்து கொள்ளுதலின் மூலம் அழைக்கிறார். அவர் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார், ஆபிரகாம் அதை விசுவாசித்தான்; அவர் இன்றும் சபையை அழைக்கிறார். நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், முதலில், நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். பிறகு, தேவன் ஆபிரகாமுக்கும், அவனுடைய பிள்ளைகளுக்கும், அவனுடைய சந்ததிக்கும் விருத்தசேதனத்தை ஒரு அடையாளமாகக் கொண்டிருந்தார்; அவர் இன்றும் உங்களுக்கு பரிசுத்த ஆவியை ஒரு அடையாளமாகக் கொடுக்கிறார். இன்று ஒரு மனிதனுக்கு பரிசுத்த ஆவி என்பது என்ன, அது எப்போது வருகிறது? அது விருத்தசேதனம் பண்ணும்படியாக இருக்கிறது. ஸ்தேவான் அவ்வண்ணமாகக் கூறவில்லையா - அவன் அவ்வாறு கூறவில்லையா, அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தில், 7ம் அதிகாரத்தில், அவன், 'ஓ, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, நீங்கள் எப்போதும் பரிசுத்த ஆவிக்கு எதிர்த்து நிற்கிறீர்கள். உங்கள் பிதாக்கள் செய்தது போலவே நீங்களும் செய்கிறீர்கள்' என்று கூறின போது. அது சரி தானா? பரிசுத்த ஆவி என்பது ஒரு விருத்தசேதனமாக இருக்கிறது. விருத்தசேதனம் என்ன செய்கிறது? அதிகப் படியாக இருக்கும் மாம்சம் வெட்டி அகற்றப்படுகிறது, உலகத்தின் காரியங்கள் எல்லாவற்றையும் வெட்டி அகற்றி விடுதல். அது உங்களை உலகத்தின் காரியங்களிலிருந்தும், உலக சிநேகத்திலிருந்தும், மாம்சத்தின் இச்சையிலிருந்தும், ஜீவனத்தின் பெருமையிலிருந்தும் விருத்தசேதனம் பண்ணி, தூரமாக வைத்து விடுகிறது. அது அப்படியே உங்களை அதிலிருந்து விருத்தசேதனம் பண்ணுகிறது. உங்களுக்கு அதனோடு எந்த சம்பந்தமும் இல்லை; அது தானாகவே அதைச் செய்து, உங்களை இயேசு கிறிஸ்துவோடுள்ள அன்புக்குள், நீடித்து நிலைத்திருக்கிற அன்புக்குள் வைக்கிறது. 'கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு எதுவும் உங்களைப் பிரிக்க முடியாது.' பவுல், 'நாசமோசமோ, சோதனைகளோ, சிறைகளோ, மற்ற ஒவ்வொன்றும், நிகழ் காரியங்களோ, வருங்காரியங்களோ எதுவும் கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மைப் பிரிக்க முடியாது' என்றான். 95அவர் உங்களை அழைத்து, உங்களை விருத்த சேதனம் பண்ணி, அவருக்குள் உங்களை... வைத்து, உங்களுடைய நித்தியமாக சேருமிடத்தை முன்குறித்திருக்கிறார். அது கிறிஸ்தவர்களை சத்தமிடும்படி செய்ய வேண்டா மென்றால், எது அதைச் செய்யுமென்று எனக்குத் தெரியவில்லை. கிறிஸ்துவுக்குள்ளிருக்கும் மனிதனை அது விழித்தெழும்படி செய்யாதென்றால், அவனை விழித்தெழச் செய்வதற்கு என்ன தேவையாயிருக்கும் என்பது எனக்குத் தெரிய வில்லை; அவன் இரண்டுதரஞ் செத்து, வேரற்றுப் போனவன் என்று நம்புகிறேன். நீங்கள் அவ்வாறு நம்பவில்லையா? சரி. 96இப்பொழுது, பிறகு அவர் அழைத்து, தொடர்ந்து தம்முடைய வித்தை கொண்டு வந்தார். அடுத்த காரியமாக, அவர் ஆபிரகாம் வழியாக இறங்கி வருகிறார், அதன்பிறகு ஈசாக்கு வழியாகவும், யாக்கோபு வழியாகவும், பிறகு யாக்கோபிலிருந்து யோசேப்புக்கும் வருகிறது. இப்பொழுது கவனியுங்கள், நாம் இதற்குள் செல்ல நமக்கு கொஞ்ச நேரம் இருக்குமானால். நாம் போவோம், ஆனால் இப்பொழுது அல்ல. கவனியுங்கள், ஆபிரகாமுக்குள் தெரிந்து கொள்ளுதல் இருக்கிறது. நீங்கள் கவனித்தீர்களா? வெறுமனே அந்த நான்கு கோத்திர பிதாக்கள் தான் என்பதைக் கவனித்தீர்களா, அதன்பிறகு அது ஒரு முடிவுக்கு வந்து, முடிந்து விடுகிறது. பிறகு அது பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களிலும் சென்று, கோத்திரங்கள் தூரமாக விலகிச் சென்று விட்டன. அது சரிதானா? ... ஆபிரகாமுடைய வித்தாகிய ஒருவரிடத்தில் அது திரும்பிப்போகும் மட்டுமாக அது ஒருபோதும் மறுபடியும் திரும்பவில்லை; அதன்பிறகு அது இங்கே பூமியில் மகிமையடைந்து, தேவனுக்குள் உயர்த்தப்பட்ட போதிலும், அது கிறிஸ்துவாக இருந்த அந்த மனிதருக்குள் தான் வருகிறது. முழு தேசங்களிலும் பரவி, பரலோகங்கள் எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அவ்வளவு ஆழமாக, கர்த்தரை அறிகிற அறிவைக் கொண்டு பூமியை நிரப்பும்படியாக பரிசுத்த ஆவியானவர் திரும்பி வந்தார், ஓ, அதுதான் இன்றுள்ள பரிசுத்த ஆவியாகும். 97இப்பொழுது கவனியுங்கள். ஆபிரகாமுக்குள் தெரிந்து கொள்ளப்படுதல்; ஈசாக்குக்குள் நீதிமானாக்கப்படுதல்; யாக்கோபுக்குள் கிருபை; யோசேப்புக்குள் பரிபூரணம். யோசேப்புக்கு விரோதமாக ஒரு காரியமும் பதிவு செய்து வைக்கப்படவில்லை. அது பரிபூரணமாக இருக்கிறது. இஸ்ரவேல் புத்திரர்களின் பூமிக்குரிய யாத்திரையின் மூன்று கட்டங்கள், அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் போன போது, அதுதான் நான்காவதாக இருந்தது, அதுதான் ஆயிரவருட அரசாட்சியாக இருந்தது. மேலும் புறஜாதி சபையின் மூன்று கட்டங்கள். இந்த வாரத்தில், தேவனுக்குச் சித்தமானால், நான் அதை வேதாகமத்தினூடாக கொண்டு வந்து, நாம் நம்முடைய மூன்றாவது கட்டத்தில் இருக்கிறோம் என்பதை உங்களுக்குக் காண்பிக்கலாம், இப் பொழுது யோசேப்பின் காலத்தில் நாம் ஆயிரவருட அர சாட்சிக்குள் போக ஆயத்தமாகிறோம். 98இப்பொழுது கவனியுங்கள், எல்லாமும் யோசேப்பில் குவிந்து வரும் போது. என்ன? ஒரு பரிபூரண மனிதன்; தன்னுடைய பிதாவினால் பிறந்து, தன்னுடைய பிதாவினால் நேசிக்கப்பட்டு, தன்னுடைய சகோதரனால் வெறுக்கப்பட்டவன். இப்பொழுது துரிதமாகப் பார்ப்போம், ஏனென்றால் நான் துரிதப்பட வேண்டியிருக்கிறது, உங்களுடைய சிதறாத கவனத்தை எனக்குக் கொடுங்கள். தம்முடைய பிதாவினால் நேசிக்கப்பட்டு, தம்முடைய சகோதரனால் வெறுக்கப்படுதல்; கர்த்தராகிய இயேசு, இயேசு அங்கே ஒவ்வொரு கதாபாத் திரங்களிலும் நடித்துக் கொண்டிருப்பதைக் கவனியுங்கள். அந்த பரிபூரணமான யோசேப்பைக் கவனியுங்கள். ஓ, நாம் அவன் பேரில் வாரக்கணக்காக (நேரத்தை) செலவழிக்க முடியும். கவனியுங்கள், அவன் தன்னுடைய சகோதரனால் வெறுக்கப்பட்டு, தன்னுடைய பிதாவினால் சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான். ஏன்? அவன் ஒரு ஆவிக்குரிய மனிதன். அவன் தரிசனங்களைக் கண்டான், சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்ல அவனால் முடிந்தது. அவன் ஆவிக்குரியவனாக இருந்தான். அவனுடைய சிறு வயதில்... அவனுடைய சகோதரர்கள், 'முட்டாள்! தூரப்போ' என்றார்கள். இப்பொழுது இன்றைய சபைகளைக் கவனியுங்கள். அந்த ஆவிக்குரிய பக்கத்தைக் கவனியுங்கள். இன்று கர்த்தராகிய இயேசு தம்முடைய சபையில் இருக்கிறார், அவர் பிள்ளைகள் எல்லாராலும் பகைக்கப்பட்டிருக்கிறார். பாருங்கள், அப்படியே சரியாக இருக்கிறது. அவர் கேலி செய்யப்பட்டு, எல்லாவிடங்களிலும், 'மதவெறியர்' என்று அவரை அழைக்கிறார்கள். நல்லது, அது அவ்வாறு தான் இருக்க வேண்டியிருக்கிறது. இதோ அந்த ஒப்புமையான காரியம் (antitype); இதோ அதனுடைய நிழலாட்டம் இருக்கிறது. நீங்கள், 'நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டால், அவர்கள் எல்லாரும் என்னைப் பார்த்து சிரிப்பார்களே' என்று கூறலாம். நல்லது, அவர்கள் எல்லாரும் உங்களைப் பார்த்து சிரிக்காவிட்டால், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் உலகத்தால் பகைக்கப்பட்டாக வேண்டும். இயேசு, 'வீட்டெஜமானையே 'பெயல்செபூல்' என்று அழைப்பார்களானால், அவருடைய சீஷர்களை, வீட்டாரை அவர்கள் அப்படி அழைப்பது அதிக நிச்சயமல்லவோ, பாருங்கள்' என்றார். இப்பொழுது, அவர் அவ்வாறு இருந்தார். மேலும் கவனியுங்கள். 99அப்போது அவன் நேசிக்கப்பட்டான். அவனுடைய தகப்பன்... நாம் இதை விட்டு போகவோ, இதை விட்டு விலகிச் செல்லவோ முடியவில்லை. அவனுடைய தகப்பனார் அவனுக்கு ஒரு பலவர்ண அங்கியை கொடுத்தான். அது சரிதானா? இப்பொழுது, தையல் விளிம்பு (seam) இல்லாத அந்த அங்கியை நீங்கள் கவனிப்பீர்களானால், அவனுடைய ஜீவனை மூடிக் கொண்டிருந்த பரிசுத்த ஆவியைப் பிரதி நிதித்துவப்படுத்தினது. இன்று பலவர்ண அங்கியானது சபை யை மூடிக் கொண்டிருக்கும் பரிசுத்த ஆவியாக இருக்கிறது. வானவில்லில் ஏழு வர்ணங்கள் உண்டு. பாருங்கள்? நாம் கொண்டிருக்கிற நிறங்கள் எல்லாமே அதனுடைய ஏழு பரிபூரண நிறங்கள் தான். அவைகள் ஒன்றோடொன்று கலந்துவானவில்லை உண்டாக்குகின்றன. வேதாகமத்தில், ஒரு வானவில் என்பது ஒரு உடன்படிக்கையை அர்த்தப்படுத்துகிறது. தேவன் நோவாவோடு தம்முடைய உடன்படிக்கையைச் செய்தார், அதற்கு மேலும் தண்ணீரால் அல்ல, ஆனால் அடுத்த முறை அக்கினியால், அவர் அவனுக்கு வானவில்லின் அடையாளத்தைக் கொடுத்தார், நாம் இன்னும் அதைக் கொண்டிருக்கிறோம். அது சரிதானா? 100இப்பொழுது (இந்த மற்ற வேதவாக்கியங்களுக்குச் செல்ல எனக்கு நேரம் இருந்தால்) நீங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 1ம் அதிகாரத்திற்குத் திருப்புவீர்களானால். அவர் நின்று கொண்டிருப்பதை யோவான் கண்ட போது, 'மனுஷ குமாரனுக்கொப்பானவர் ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே நின்று கொண்டிருந்தார்,' அது ஏழு சபைக்காலங்களாக இருந்தது. நாம் எபேசு சபைக்காலத்தில் பிரயாணம் தொடங்கி, நாம் இப்பொழுது இருக்கிற வெதுவெதுப்பான சபைக்காலமாகிய லவோதிக்கேயா சபைக்காலத்தில் முடிவடைந்து கொண்டிருக்கிறோம், 'தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள்.' சபைக்குச் சென்று, உள்ளே வரும் ஜனங்களை அவர்கள் உடையவர்களாயிருந்து, 'கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று கூறி, அவர்களுடைய பெயரை புத்தகத்தில் பதிவு செய்கிறார்கள்; ஆனால் லவோதிக்கேயா சபைக்காலத்தில், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையும் வல்லமையையும், அற்புதங்களையும், அடையாளங்களையும், அதிசயங்களையும் மறுதலித்து, அதைப்பார்த்து கேலி செய்கிறார்கள், இந்த சபைக்காலமானது தேவனுடைய வாயிலிருந்து வாந்திப்பண்ணிப் போடப்பட்டுள்ளது; தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்கள். ஓ, அல்லேலூயா! ஓ, நண்பர்களே, நான் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும் போது, என்னுடைய ஆத்துமாவுக்குள் ஏதோவொன்று வருகிறது. ஓ, உலகமானது இன்று அதனுடைய நிலையில் இருக்கிறது! 101அங்கே அவர் நின்று கொண்டிருந்தார். என்ன? அவர் பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் (Sardius stone) ஒப்பாயிருந்தார். வச்சிரக்கல் (Jasper) என்பது என்னவாக இருந்தது? ரூபனுடைய கல்லாக இருந்தது. பதுமராகம் (Sardius) என்னவாக இருந்தது? பென்யமீன். முதலாவதும் கடைசியானதும். அவர் பார்வைக்கு முந்தின வரும் பிந்தினவருமாக தோற்றமளித்தார். ஏழு பொன் குத்துவிளக்குகளுக்கு மேலாக, அவருடைய சிரசைச் சுற்றிலும் ஒரு வானவில் இருந்தது. ஒரு வானவில், தேவன் ஆபிரகாமின் வழியாகவும், ஈசாக்கின் வழியாகவும், கிறிஸ்துவின் வழியாக வும், சபையின் வழியாகவும் பரிசுத்த ஆவியின் ஞானஸ் நானத்தின் மூலமாக செய்து கொண்ட ஒரு உடன்படிக்கையாக அது இருந்தது. யோசேப்பின் மேலிருந்த ஏழு வர்ண அங்கியானது இயேசுவின் மேலும் இருந்தது, இன்று அது சபையின் மேல் இருந்து, பாதுகாக்கிறது. சரீரமானது அந்த அங்கியினால் மூடப்பட்டிருந்தது. சபை என்பது நீங்களல்ல, அது தேவனுடைய உடன்படிக்கையாகிய இரத்தத்தைக் கொண்டு உங்களை மூடிக் கொண்டிருக்கிற பரிசுத்த ஆவியாக இருக்கிறது, அவர்கள் உலகத்தோற்றத்துக்கு முன்பே முன்குறிக்கப்பட்டவர்கள். 10261.அல்லேலூயா! நான் அதைக் கூற வேண்டியிருந்தது. சரி. அது ஏறக்குறைய என்னை வெடிக்கச் செய்யும்படி இருந்தது. கவனியுங்கள், நான் இதைக் கூறட்டும், நான் பித்து பிடித்தவன் என்று நீங்கள் ஒருக்கால் நினைக்கலாம். நான் அப்படியிருந்தால், நான் சந்தோஷமாயிருக்கிறேன், என்னைத் தனியே விட்டு விடுங்கள். சரி. நான் ஒரு காரியத்தை உங்களிடம் கூறட்டும். ஓ, நான் அறிந்திருக்கிற இதை அறிந்து விட்டு, நான் எப்படி சந்தோஷப்படாமல் இருக்க முடியும்? நான் அறிந்திருக்கிற இதை அறிந்து விட்டு என்னால் எப்படி அடக்கிக் கொண்டிருக்க முடியும்? நான் அதை ஜனங்களிடம் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். என்னே! அது யாரையும் சந்தோஷமடையச் செய்யும். வியூ! என்னே! சரி. 103162.அங்கே அவர் இருந்தார், மற்றும் யாக்கோபு... மற்றும் யோசேப்பு அவருக்கு முன்னடையாளமாக இருந்தான். அந்த மூடல் (covering), தகப்பனார்-தகப்பனார் அவனுக்கு அந்த அங்கியைக் கொடுத்தான். அல்லேலூயா. இயேசு ஞானஸ்நானம் பெற்ற போது, 'ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானங்கள் அவருக்குத் திறக்கப்பட்டது; பரிசுத்த ஆவி புறாவைப்போல இறங்கி, அவர்மேல் வந்து, 'இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்' என்று உரைத்தது' என்பது உங்களுக்கு ஞாபகம் இல்லையா. அப்போது வரை, அவர் ஒருக்காலும் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை. அதன்பிறகு அவர் சோதிக்கப்படும்படியாக நேராக வனாந்தரத்திற்குள் சென்று, வெளியே வந்து அவர் வியாதியஸ்தரைச் சுகப்படுத்தி, தேவனுடைய வல்லமையால் (கிரியை செய்தார்). 163.அதுதான் சபை. அது ஞானஸ்நானம் பண்ணப்பட்ட போது, அது பரிசுத்த ஆவியால், வல்லமையால் உடுத்தப் பட்டது. ஓ, என்னே! 104164.ஈசாக்கு வருவதற்கு முன்பு, சாராளுடைய கர்ப்பம் மரித்துப் போயிருந்த அதே நிகழ்வு. அது தொடர்ந்து போகும்படி தேவன் விட்டார். அவள் அந்த வாக்குத்தத்தத்தைப் பெற்ற போது, அவளுக்கு அறுபது வயது ஆகியிருந்தது. அவளுக்குள்ளே அந்த வித்தானது எப்பொழுதாவது கர்ப்பந்தரிக்கப்படுவதற்கு முன்பாக, அவளுக்கு தொண்ணூறு வயது ஆகியிருந்தது. பரிபூரணமாக முற்றிலும் அற்புதம்! 165.மறுபடியும் பிறந்திருக்கிற மனிதன் ஒரு அற்புதமாகவே இருக்கிறான். அல்லேலூயா. அதை ஏற்றுக்கொள்ள வில்லையா, அல்லது உங்கள் கரத்தை இந்த விதமாக மேலே உயர்த்துங்கள். அது தேவனுடைய ஒரு வெகுமதியாக இருக்கிறது. ஆச்சரியம்! மறுபடியும் பிறத்தல், புலன்களின் ஆதிக்கத்திலுள்ள இந்த உலகத்தை விட்டு வெளியே எடுக்கப்படுதல். ஆம், ஐயா. ஏன், நீங்கள் அதற்குத் தகுதியுடை யவர்கள் என்ற காரணத்தினாலா? அதற்குக் காரணம் என்ன வென்றால், தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார், தெரிந்து கொள்ளுதலின்படி, அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாக உள்ளது. 105166.அதன்பிறகு யோசேப்பு தன்னுடைய சகோதரனாலே, ஏறக்குறைய முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விற்கப்பட்டான். யூத சபை யோசேப்பை காட்டிக்கொடுத்தது. 167.இன்று, இந்த சபையில், அது என்னவாக இருக்கிறது? ஒரு துரோகமாக இருக்கிறது. அவர்கள் ஆவணங்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் ஒரு...ஐக் கொண்டிருக்கும்படி முயற்சிக்கப் போகிறார்கள். நல்லது, இப்பொழுது, நீங்கள் இதை உங்களுடைய மனதில் பதித்துக் கொள்ளுங்கள். அவர்கள் சபைகளின் சம்மேளனத்தைக் (confederation of churches - சபைகளின் கூட்டமைப்பைக்) கொண்டிருக்கப் போகிறார்கள். அமெரிக்காவிலுள்ள சர்ச்சஸ் ஆஃப் கிறைஸ்ட் சபையானது ஏற்கனவே தங்களுடைய எல்லா சபைகளோடும் கூட்டமைப்பை ஏற்படுத்தி விட்டன, நுழையக்கூடாது என்ற ஒரு அடையாளத்தை (band) ஏதோ வொரு நாளில் அவர்கள் இங்கே கொண்டிருக்கப் போகிறார்கள், கம்யூனிஸத்தை எதிர்த்து போராடும்படி, அது கத்தோலிக்கத்தோடு இணைந்து கொள்ளும், புரட்டஸ்டன்ட் சபையும் கத்தோலிக்க சபையும் ஒன்றாக இணைந்து கொள்ளும். சத்தியத்தினிமித்தமாக இணங்க மறுக்கும், எந்த ஸ்தாபனத்தையும் சேராதவர்கள், தாங்கள் பெற்றிருந்த அந்த போதகங்களிலிருந்து விலகிப் போய், உபத்திரவப்படுவார்கள். மிருகத்தின் முத்திரை; தேவனுடைய முத்திரை; பலப்பரீட்சை சீக்கிரத்தில் வரும். சகோதரனே, அது அங்கே உள்ளே இராவிட்டால், உலகம் இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக நீங்கள் வஞ்சிக்கப்படுவீர்கள், ஏனென்றால் அது மிகவும் அருமையாக தோன்றும். அது, 'இப்பொழுது, கம்யூனிஸ மானது உலகத்திற்காக ஒரு-ஒரு- செய்திருக்குமானால், ஒரு... ஐ செய்திருக்குமானால், ஏன், நாம் வேறொரு ஒப்பந்தத்தை செய்து கொண்டு, கிறிஸ்தவர்கள் எல்லாரையும் கொண்டு வந்து, உலகத்தை மறுபடியுமாக கிறிஸ்தவத்துக்கு மாற்று வோம்' என்று கூறும். அது மிகவும் நன்றாகத் தோற்ற மளிக்கும், ஜனங்கள் அதற்குள் குதிப்பார்கள். புரிகிறதா? அவர்கள் சபைகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி, கொண்டு வந்து, கிறிஸ்தவத்தை ஒன்றாக ஆக்க முயற்சிப்பார்கள். வெளிப்படுத்தின விசேஷத்தில், வேதாகமம் கூறுகிறது, அது தன்னுடைய அதிகாரத்தையும் மற்றும் ஒவ்வொன்றையும் கொடுத்து, அது மிருகத்துக்கு ஒரு சொரூபம் பண்ணி, மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்தது. நிச்சயமாக, அவ்வாறு இருக்கிறது. இந்தக் காரியத்தில், அது எங்கேயிருக்கிறது என்று பார்க்கும்படியாக, வெளிப்படுத்தின விசேஷத்தை எடுத்துக்கொள்ள நமக்கு நேரமிருக்க விருப்பம் தான் (ஆனால் நமக்கு நேரமில்லை, பாருங்கள்). சகோதரனே, நீங்கள் சரியாக இங்கே காலத்தின் முடிவில் இருக்கிறீர்கள். நாம் காலத்தின் முடிவில் இருக்கிறோம். 106168.அதன்பிறகு அவர்கள் யோசேப்பை முப்பது வெள்ளிக்காசுக்கு விற்றனர். சாகும்படியாக, அவர்கள் அவனை ஒரு குழிக்குள் தள்ளினர். அவன் மேலே எடுக்கப்பட்டு, பிறகு அனுப்பப்பட்டான். அவன் அங்கே தன்னுடைய சிறைவாசத்தில் இருக்கையில், அவன்... அங்கே இரண்டு மனிதர்கள் இருந்தார்கள், பானபாத்திரக்காரனும், சுயம்பாகியும். சொப்பனத்தைக் கொடுத்து, அதற்கு அர்த்தம் சொன்ன யோசேப்பினாலே, அவர்களில் ஒருவன் இழக்கப் பட்டான், மற்றவன் இரட்சிக்கப்பட்டான். 169.இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது, அதே காரியம் தான், அங்கே ஒரு கள்ளன் ஒரு பக்கத்திலும், (மற்ற) கள்ளன் மறுபக்கத்திலும் இருந்தார்கள், ஒருவன் இழக்கப்பட்டான், மற்றவன் இரட்சிக்கப்பட்டான். அப்படியே சரியாக. 170.அதன்பிறகு அவன் பார்வோனுக்கு முன்பாக அழைத்து வரப்பட்டு, சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லி, அவன் பார்வோனுக்கு முக்கியஸ்தனாக (right-hand man) ஆக்கப்பட்டான், யோசேப்பிடம் வராமல் யாரும் பார்வோனைக் காண முடியாது. 171.இயேசுவைக் குறித்த ஒரு பரிபூரண முன்னடையாளம், அவர் தேவனுடைய வலது பாரிசத்தில் (right hand of God) உட்கார்ந்திருக்கிறார், கிறிஸ்துவாலேயன்றி யாரும் தேவனிடம் வருவதில்லை. அங்கே அப்படியே சரியாக பரிபூரண முன்னடையாளம். 107172.மேலும் கவனியுங்கள், இதோ வேறொரு காரியம், இப்பொழுது தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியின்படியான புறஜாதிகளே, யோசேப்புக்கு ஒரு புறஜாதி மணவாட்டி கொடுக்கப்பட்டாள். அவன் தன்னுடைய சகோதரனால் புறக் கணிக்கப்பட்டு, திரும்பிச் சென்று, ஒரு புறஜாதி மணவாட்டியைப் பெற்றுக்கொண்டான். அது சரிதானா? அவன் அவனுக்குக் கொடுத்தான், ஓர் என்ற பட்டணத்து ஆசாரியனின் (joint heirs) குமாரத்தியை, ஒரு மணவாட்டியாக, பார்வோன் அவனுக்குக் கொடுத்தான். அவன் ஒரு புறஜாதி பெண்ணை மணந்து, எப்பிராயீமையும் மனாசேயையும் பெற்றான், அவர்கள் இராஜ்யத்திற்குள், கோத்திரபிதா வாக்குத்தத்தத்திற்குள் உடன்சுதந்தரவாளிகளாக இருந்தார்கள். 108173.எவ்வளவு பரிபூரணமாயிருக்கிறது என்று கவனியுங்கள், இயேசு யூதர்களால் புறக்கணிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியைத் திரும்ப அனுப்பின போது, அவர்கள் இவர்களைப் பார்த்து நகைத்து, இவர்களைக் கேலி செய்து, 'இவர்கள் மதுபானத்தைக் குடித்து வெறித்திருக்கிறார்கள்' என்றார்கள். அது சரிதானா? 174.இயேசு, 'நீங்கள் என்னை தேவதூஷணஞ் செய்து, அதனோடு தப்பித்து விடலாம் (get by); ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக ஒரு வார்த்தை பேசினாலும், அது உங்களுக்கு ஒருபோதும் மன்னிக்கப்படாது' என்றார். அந்த யூதர்கள் அங்கே வந்து, 'நல்லது, இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள், அ, அ, அ' என்று கூறி, அவர்களைப் பரிகாசம் பண்ணினார்கள். அப்போ திலிருந்து முப்பது வருடங்களைக் காட்டிலும் அதிகமாக ஆகவில்லை, அல்லது அதற்கும் அதிகமான வருடங்கள் ஆகியிருக்கவில்லை, தேவனுடைய வார்த்தையின்படி, தீத்து மதில்களை முற்றுகையிட்டு, அவர்கள் ஒருவர் மற்றவரின் பிள்ளைகளைப் புசித்தனர், அவர்கள் இவர்களைக் கொன்று குவித்து, அந்த ஆலயத்தைச் சுட்டெரித்துப் போட்டனர். புறஜாதிகளின் நாட்கள் முடியும் மட்டுமாக, அது ஒருபோதும் எழும்பவில்லை. அடுத்த சில வாரங்களில், நான் அங்கே எருசலேமுக்கு விஜயம் செய்யப் போகிறேன், அங்கே அந்தப் பழைய இடிபாடுகளும், அழுகையின் சுவரும் உள்ளது. அங்கே அவர்கள் உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்டார்கள், ஏனென்றால் அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று தேவன் அவர்களிடம் கூறினார், அவர்கள் வந்து அதைச் செய்தனர். அது சரியே. ஓ, என்னே! பரிசுத்த ஆவியைப் புறக்கணிப்பதால் கிடைக்கும் சாபத்தைக் குறித்து எண்ணிப் பார்க்கும் போது! இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டிருந்தார், அவர்களோ அதைப் புறக்கணித்தனர். 109176.யூதர்கள் அதைப் புறக்கணித்த போது, புறஜாதிகள் அதைப் பெற்றுக்கொண்டனர், அது மணவாட்டிக்கு ஒரு முன்னடையாளமாக இருந்தது. அவர் புறஜாதிகளிலிருந்து தம்முடைய நாமத்துக்காக ஒரு ஜனத்தை அழைப்பார் என்று அவர் கூறினார். 177.அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்தச் சிறு பெண், அவள் வழக்கமாக ஒரு பிராயாக (Broy) இருக்கிறாள், ஆனால் அவள் இப்பொழுது பிரன்ஹாமாக இருக்கிறாள், அவள் என்னுடைய மனைவி. 178.இயேசு கிறிஸ்துவினுடைய மணவாட்டி திருமதி. இயேசு கிறிஸ்துவாக (Mrs. Jesus Christ) இருப்பாள், (அல்லேலூயா), அவள் அவருடைய ஆவியால், அவருடைய நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, அவருடைய வல்லமையால் நிறைக்கப்பட்டு, அவருடைய நீதியை வஸ்திரமாக உடுத்தியிருப்பாள். அல்லேலூயா! அதோ அவள் இருக்கிறாள். இப்பொழுது கவனியுங்கள், அது புறஜாதி மணவாட்டியாக இருந்தது. 110179.இப்பொழுது, முடிப்பதற்கு முன்பு, மீதமானவற்றை வாசிக்கும் போது. கடைசி காலத்தில் நீங்கள் எப்பொழுதும் கண்டதிலேயே வருத்தமான கதை இதோ இருக்கிறது, அங்கே இப்பொழுது நாம் முடிந்து கொண்டிருக்கிறோம், புறஜாதி மணவாட்டி ஏற்கனவே தெரிந்தெடுக்கப்பட்டு, வெளியே எடுக்கப்பட்டு விட்டாள். காரியம் ஏறக்குறைய முடிந்து விட்டது. இப்பொழுது இங்கே 41வது அதிகாரத்தில் கவனியுங்கள். '... சென்றபின்பு... இப்பொழுது இது யூதர்களுக்கான காலத்தின் முடிவில் இருக்கிறது, அப்படியானால் நாம் முடிவடைந்து கொண்டிருக்கிறோம். 'இரண்டு வருஷம் சென்ற... பார்வோன்... இல்லை, ஒரு நிமிடம் பொறுங்கள், எனக்கு கிடைத்திருந்தது - எனக்கு இங்கே தவறான அதிகாரம் கிடைத்தது, நான் அதில் மிகவும் நிச்சயமுடைய வனாயிருக்கிறேன். நான் கூற வந்தது, 41ம் அதிகாரத்துக்குப் பதிலாக 45ம் அதிகாரமாகும். அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக் கூடாமல்: யாவரையும் என்னை விட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன்னைப் புறக்கணித்திருந்த தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை. 111180.இப்பொழுது, நாம் இங்கிருந்து போவதற்கு முன்பாக, சற்று பொறுங்கள். யோசேப்பு, இந்த வருஷங்கள் எல்லாம் சென்ற பின்பு, அங்கே அவன் இருந்தான், அப்போது அங்கே அந்த தாய் நாட்டில் ஒரு பஞ்சம் வந்தது, தேவன் அசைவாடிக் கொண்டிருந்தார். பரிதாபகரமான சிறு யோசேப்பு வலது கரமாக (முக்கியஸ்தனாக) ஆகியிருந்தான். மேலும் இங்கே, அவனை விற்றுப்போட்டிருந்த அவனுடைய சகோதரர்கள், அவர்கள் வந்து, அவனுக்கு முன்பாக குனிந்து வணங்கினதைக் குறித்த ஒரு தரிசனத்தை அவன் கண்டிருந்தான், அவன் ஒரு சொப்பனக்காரன் என்றும் ஒரு ஞான திருஷ்டிக்காரன் (vision-seer) என்றும் அவர்கள் அவனை அழைத்து, அவனைக் கொல்ல முயற்சித்தனர். அவர்கள்... 181.இயேசு அந்த யூதர்களிடம், அவர்கள் என்னவாக இருந்தனர் என்றும், அவர்கள் என்ன செய்திருந்தனர் என்றும், அவர்கள் என்னவாக இருப்பர் என்றும் முன்னுரைத்தார். வீட்டின் எஜமானர், அவர் தம்முடைய சொந்த குமாரனையும், அவருடைய ஊழியக்காரர்களையும் அனுப்பினதைக் குறித்தும், அவர்கள் எவ்வாறு அதைக் கொன்று போட்டனர் என்பதைக் குறித்தும், அதைப் போன்ற எல்லாவற்றையும் இயேசு அவர்களுக்கு முன்னுரைத்திருந்தார். ஆனால், அது என்னவாக இருக்கும், அறுவடையின் ஆண்டவர் வந்து, அந்த பொல்லாத ஊழியக்காரர்களைக் கண்டுபிடித்த போது, என்ன செய்கிறார்? இப்பொழுது, சற்று பொறுங்கள். 112182.இதோ யோசேப்பு ஒரு பரிபூரண முன்னடையாளமாக இருக்கிறான், யூதர்கள் மறுபடியும் இரட்சிக்கப்படும் போது, கடைசி நாட்களில், முடிவில், திரும்பி வரும் அந்த யூதர்கள், ஆயிரவருட அரசாட்சியினூடாக வருவது போன்று அவன் அங்கே நின்று கொண்டிருந்தான். 183.அவர்கள் நோக்கிப் பார்த்தனர். மேலும் யோசேப்பு, அவன் எவ்வாறு அங்கே அனுப்பப்பட்டான் என்பதும், இஸ்ர வேல் எவ்வாறு தன்னுடைய பிள்ளைகளை அனுப்பினான் என்பதும் உங்களுக்குத் தெரியும். அவர்களிடம் கொஞ்ச தானியமே இருந்தது; அவர்கள் பட்டினியால் மரித்துக் கொண்டிருந்தனர், இராஜாவின் சொப்பனத்துக்கு யோசேப்பு அர்த்தம் சொல்லியிருந்தான், அவன் எவ்வாறு தானியத்தை சேமித்து வைத்திருந்தான், உலகத்திலேயே ஆகாரம் இருந்த ஒரே இடம் அதுதான். 184.இன்று சபையைக் குறித்த பரிபூரணம், ஆவிக்குரிய ஆகாரம் வழங்கப்படும் ஒரே இடம் யாதெனில், அது இயேசு கிறிஸ்துவினுடைய இராஜ்யத்திற்குள் தான் இருக்கிறது. நீங்கள் சென்று ஏதோவொரு பழைய சபைக் கோட்பாட்டை எடுத்து, ஒரு சில அப்போஸ்தல பிரமாணங்களை மனப்பாடமாக ஓதி, நீங்கள் விரும்பும் என்னவாக இருந்தாலும் அதைச் செய்யலாம், ஆனால், சகோதரனே, ஆவியானது ஜீவனுள்ள தேவனுடைய மறுபடியும் பிறந்த சபைக்குள்ளே தான் இருக்கிறது, அந்த இடத்தில் மாத்திரமே ஆகாரம் உண்டு. இந்நாட்களில் ஒன்றில், அந்த யூதர்கள் அதை அடையாளம் கண்டுகொள்ளப் போகிறார்கள், அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். 113185.இப்பொழுது நீங்கள் கவனியுங்கள், பிறகு அவன் வந்த போது, அவன் சிறிய பென்யமீனைக் கண்டதாகக் கூறினான். அது எப்படி என்று உங்களுக்குத் தெரியும், அவன் அங்கே அதை எப்படியாக செய்தான் என்பது புரிந்திருக்கும். அவனுடைய தகப்பனாரும், அவனுடைய தாயாரும் எப்படி யாக இந்தப் பிள்ளையைப் பெற்று, பிறகு (தாயார்) மரிக்க வேண்டியிருந்தது, அவன் தான் சிறு பென்யமீன். அவன் தன்னுடைய சகோதரர்களைக் கண்டான், அவன் யாரென்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவன் ஒரு மகத்தான ஆட்சியாளன் என்று அவர்கள் நினைத்து, அவர்கள் பயந்தார்கள். அதன்பிறகு அவன் திருப்பி அனுப்பின போது, அவன், 'நீங்கள் யார்?' என்று கேட்டான். 186.அவர்கள், 'நாங்கள் ஒரு மனிதருடைய குமாரர்கள், அவர் யாக்கோபு, வயது சென்றவர்; இஸ்ரவேலையும், கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தவர்களையும் மற்றவர்களையும் உமக்குத் தெரியும்' என்றனர். பிறகு அவனுடைய வயதான அன்பு தகப்பனார் இன்னும் உயிரோடிருக்கிறார் என்பதை அவன் கேட்டான். அவன் இங்கே என்ன கூறினான் என்பதைக் கவனியுங்கள். அவன் கதவுகளை மூடின போது, அவன் தன்னை அவர்களுக்குத் தெரியப் படுத்தினான். அவனுடைய இருதயமானது, அங்கே தேவனுடைய அன்பானது இன்னும் அழைத்துக் கொண்டிருக்கிறதை அவன் பார்த்தான். அதோ அங்கே அந்த யூதர்கள் நின்று கொண்டிருக்கின்றனர், பரிதாபமான வாலிபர்கள், அவர்கள் பட்டினி கிடந்தனர். 187.அவர்களுடைய தகப்பனும் பட்டினியாயிருந்து, 'போய், இன்னும் கொஞ்சம் அதிகமான தானியத்தை வாங்கிக் கொண்டு வாருங்கள், அல்லது நாம் பட்டினியால் மரித்து விடுவோம்' என்றான். 188.அவன் ஒரு அடையாளத்திற்காக பென்யமீனை அங்கேயே வைத்திருந்தான். அது எப்படி என்று உங்களுக்குத் தெரியும், அவன் எப்படியாக அவனுக்கு முன்பாக நின்றான். பிறகு அவன் நோக்கிப் பார்த்த போது, பென்யமீனைக் கண்டான், அவனால் அதற்கு மேலும் அடக்கிக் கொண்டிருக்க முடியவில்லை. அவன் எல்லாரையும் அவனை விட்டு அப்பால் போகச் செய்தான். பரிதாபமான யோசேப்பு அங்கே நின்று கொண்டு, அவன், 'நான் தான் உங்கள் சகோதரனாகிய யோசேப்பு' என்றான். 114189.அவனுடைய சகோதரர்கள் அவனிடம் கூறி, 'எங்களுக்கு ஒரு சகோதரன் உண்டு, அவன் (இப்பொழுது) இல்லை, அவன் மிருகங்களால் கொல்லப்பட்டான்' என்றான், அவன் சரியாக அவனுடைய சகோதரனிடமே பேசிக் கொண் டிருந்தான். அது தான் அவனுடைய சகோதரனாகிய யோசேப்பு, அவன் அங்கே நின்று கொண்டிருந்தான். 190.அவன்-அவன் அவர்கள் எல்லாரையும் அங்கிருந்து போகச் செய்து, தன்னை வெளிப்படுத்தி, அவன், 'நான் தான் உங்கள் சகோதரனாகிய யோசேப்பு' என்றான். கோத்திரப்பிதாக்களாகிய அவர்கள் பயந்தார்கள். அவர்கள் பயப்பட்டார்கள். அவன், 'பயப்படாதீர்கள்' என்றான். பார்வோனுடைய அரண்மனையில் இருப்பவர்கள் கூட அவன் கதறி அழுவதைக் கேட்கும் அளவுக்கு அவன் மிகவும் உரத்த சத்தமாக அழத் தொடங்கினான், பார்வோனுடைய அரண்மனையில் இருந்தவர்களும் கூட அவனுடைய அலறல் மற்றும் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்கள். அவன் ஓடிச்சென்று, அவனுடைய கரங்களை சிறிய பென்யமீனைச் சுற்றிலும் போட்டுக்கொண்டு, அவனைக் கட்டி அணைத்து, அவனை முத்தம் செய்து, அவனுடைய கழுத்தில் விழுந்து, அழத்தொடங்கி, 'என்னுடைய வயதான பரிதாபமான தகப்பனார் கானான் தேசத்தில் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று உண்மையாகவா சொல்லுகிறீர்கள்?' என்றான். என்னவொரு உணர்ச்சி! என்ன, ஊற்றப்பட்டிருக்கிற தேவனுடைய அன்பு! 'என்னுடைய தகப்பன் இன்னும் உயிரோடிருக்கிறார், நான் அவருக்கு கொஞ்சம் தானியத்தைக் கொடுக்கிறேன்.' 'ஓ!' என்றான். அவன் உச்சகுரலில் கத்தினான். 191.நம்முடைய கர்த்தராகிய இயேசு கிழக்குத் திசை அடிவானத்தினூடாக உடைத்துக்கொண்டு இறங்கி, இந்த பூமிக்கு மீண்டும் திரும்பி வரும் போது, அந்த நாள் எப்படி இருக்கும் என்று நான் வியப்படைகிறேன். அல்லேலூயா! 115192.அங்கே அவன் உரக்கக்கத்தி கூக்குரலிட்டு அழுதான், அந்த மகத்தான ஆட்சியாளனும் அந்தக் கோத்திரப் பிதாக்களும் அங்கே நின்று கொண்டிருந்தனர். அவன் சொன்னான், அவன், 'வருத்தப்பட வேண்டாம். தேவன் என்னை அனுப்பினார்' என்றான். பரிசுத்த ஆவியைப் பார்த்தீர்களா, தெய்வீக அன்பு என்ன செய்யும் என்று பார்த்தீர்களா? 'தேவன் என்னை இங்கே அனுப்பினார். நீங்கள் விசனப்பட வேண்டாம். இந்நேரத்தில் ஜீவனைக் காக்கும்படி தேவனே என்னை இங்கே அனுப்பினார்' என்றான். 193.ஜீவனைக் காக்கும்படியாகவே அல்லாமல் வேறு எதற்காக தேவன் அவரை இங்கே அனுப்பினார்? இன்றிரவு ஜீவனைக் காக்கும்படியாகவே அல்லாமல், வேறு எதற்காக பரிசுத்த ஆவி இங்கேயிருக்கிறது? அவர் யூதர்களால் புறக்க ணிக்கப்பட்டு, ஜீவனைக் காக்கும்படி இங்கே புறஜாதி களிடத்தில் அனுப்பப்பட்டிருக்கிறார். எனது நண்பரே, இன்றிரவு அது உமக்குப் புரிந்து விட்டதா? 194.அதன்பிறகு அவன், 'என்னுடைய தகப்பனார் இன்னும் உயிரோடிருக்கிறாரா?' என்றான். அவன் அங்கே பாரவண்டிகளையும் எருதுகளையும் மற்றவைகளையும் அனுப்பினான். 195.பரிதாபமான, வயதான, குருடாயிருந்த இஸ்ரவேல் வெளியே வருகிறான், அந்த வயதான தீர்க்கதரிசி அவ்வித மாக வெளியே வந்து, யோசேப்பு உயிரோடிருக்கிறான் என்று கேள்விப்பட்டான். அவன் அழுது, 'ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம்! நான் என்னுடைய மகனை இன்னும் ஒருவிசை காண்பேன், அவனைத் தடவிப்பார்ப்பேன்' என்றான். 196.அவன் இவனை அங்கே அழைத்துக்கொண்டு வந்த போது, அவன் இவனைச் சந்தித்தான். அவனுடைய வயதுசென்ற குருடான... பலவீனமான விரல்களை அவ்வித மாக நீட்டி, யோசேப்பின் முகத்தைப் பிடித்தான், அவர்கள் அங்கேயிருந்த ஏதோவொன்றின் மேல் முழங்கால்படியிட்டு, கதறி அழத் தொடங்கினார்கள். அப்பாவும் மகனும் ஒருவரையொருவர் கட்டித்தழுவினார்கள். ஓ, என்னே! 116197.தேவனை விட்டுத் தூரமாக இருக்கும் அந்த ஊதாரி யைக் குறித்து இன்றிரவு நான் எண்ணிப்பார்க்கும் போது, அதோ அங்கே வெளியில் பாவத்திலிருந்து, பன்றித் தொழுவங்களில் புசித்துக் கொண்டு, உலகத்தைச் சுற்றிலும் ஓடிக் கொண்டிருக்கும் சகோதரனே! ஏன், இந்த எழுப்புதலின் நேரத்தில், நீ ஏன், இந்த வருடங்களில் நீ உன்னுடைய ஜீவியத்தை வீணாக்கியிருப்பாயென்றால், அடங்காதவனாய் உன்னுடைய செல்வத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கும் நீ, ஏன் இப்பொழுது உன்னுடைய இருதயத்தை பிதாவினிடமாகத் திருப்பக் கூடாது? எது தவறோ அதையே நீ செய்திருப்பாயானால், இன்றிரவு நீ ஏன் பாதி வழியிலேயே அவரை சந்தித்து, உன்னுடைய கரங்களை அவரைச் சுற்றிலும் போடக் கூடாது? 198.'சகோதரன் பிரன்ஹாமே, சொல்லுங்கள், தேவன் இன்னும் என்னை நேசிக்கிறார் என்றா என்னிடம் சொல்ல நினைக்கிறீர்கள்?' 199.அவர் இன்றிரவு உனக்காக எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறார். அவர் உனக்காக எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார். ஜீவனைக் காக்கும்படியாகவும், உன்னைக் காக்கும்படியாகவும், உனக்கு ஆசீர்வாதத்தை அருளும்படியாகவும், உன்னை தெரிந்து கொள்ளும்படியாகவும் பரிசுத்த ஆவியானவர் இங்கேயிருக்கிறார். நீங்கள் தேவனுக்குள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாக இருப்பீர்களானால், நீங்கள் ஏதோவொரு நோக்கத்தோடு தான் இன்றிரவு இங்கே வந்திருக்கிறீர்கள். நீங்கள், 'சகோதரன் பிரன்ஹாமே, நானும் அதில் எண்ணப்பட்டிருக்கிறேனா?' என்று கேட்கலாம். 117200.இன்றிரவு நீங்கள் ஏன் சபைக்கு வந்தீர்கள்? எது உங்களை வரும்படி செய்தது? பிசாசு உங்களை எப்பொழுதாவது சபைக்கு இழுத்துக்கொண்டு வந்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை, ஐயா. பிசாசு உங்களை சபையை விட்டுத் தூரமாக இழுத்துக்கொண்டு போகிறவன். தேவன் தான் அழைத்திருக்கிறார். இன்றிரவு உங்களை அழைத்துக் கொண்டிருப்பது பிதா தான். இப்பொழுது, தேவனுக்குள் உங்களுக்கு ஒரு ஸ்தானம் உண்டு, தேவன் அழைத்து, அழைத்து, அழைத்திருக்கிறார். நீங்கள் அந்த ஸ்தானத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றால்... இங்கே ஒவ்வொருவருக்காகவும் அநேக ஸ்தானங்கள் எண்ணி எண்ணி கொடுக்கப்படுகின்றன, அதோ அங்கே முற்காலத்திலேயே இந்த ஸ்தானம் இவ்வாறு இருக்க வேண்டும் என்று தேவன் முன்குறித்து விட்டார். இப்பொழுது, அந்த ஸ்தானத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளத் தவறினால், யாரோ ஒருவர் உங்களுடைய ஸ்தானத்தில் அதை எடுத்துக்கொள்வார். எனவே, இப்பொழுது, இன்றிரவு நீங்கள் உங்கள் ஸ்தானத்தை எடுத்திராவிட்டால், நீங்கள் உங்களுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்ளும்படியாக தேவன் இன்றிரவு அருளுவாராக. 118201.நாளை இரவு நாம்... க்கு போகலாம். அவர்கள் அங்கே எகிப்தில் வருடக்கணக்காக தங்கியிருந்தனர். இப்பொழுது நாளை இரவு, பலியான ஆட்டுக்குட்டியின் கீழாக நாம் அவர்களைக் கொண்டு வந்து, யோர்தானைப் போன்று அவ்வளவு தூரமாக அவர்களைக் கொண்டு வந்து, அதன்பிறகு நதிக்கு அவர்களைக் அழைத்து வந்து, வனாந்தரத்தில் மற்றொரு தேசத்திற்குள் அவர்களைக் கொண்டு வரப்போகிறோம். 202.கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. இன்றிரவு, இது கடினமாக இருந்திருக்கிறது, இது நீண்ட நேரத்தை எடுத்து கொண்டு விட்டது. ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரமாக, இங்கே கஷ்டத்தோடு இதைக் கையாண்டு கொண்டும், இழுத்துக் கொண்டும் இருந்து வந்திருக்கிறோம், மேலும்- மேலும் வேதவாக்கியங்களினூடாகப் போய், அதைக் கொண்டு கடுமையாக (பேசியிருக்கிறேன்). ஆனால், சகோதரனே, சகோதரியே, அது தேவனுக்குள் உள்ள தெரிந்து கொள்ளுதல் என்று உங்களால் இன்றிரவு உணர முடிகிறதா? 'தேவனுக்குள் தெரிந்து கொள்ளப்படுதலை' எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? தேவன் உங்களைத் தெரிந்து கொண்டு, உங்களை அழைக்கிறார் என்றும், அதைச் செய்கிற ஒருவர் அவர் தான் என்றும் எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? இப்பொழுது சந்தோஷமாயிருக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? 119203.இப்பொழுது உங்களால் நிற்க முடிந்து, நாளை, 'சாத்தானே, நீ என்னை மிரட்டி பயமுறுத்தி, நீ இதையும் அதையும் செய்திருக்கிறாய். எல்லா நேரமும் என்னுடைய இருதயத்தில், அங்கே ஏதோவொன்று தேவனை நோக்கி துடித்துக்கொண்டும், என்னிடம் கூறிக் கொண்டும் இருந்து வந்திருக்கிறது. இப்பொழுது என்னுடைய அழைப்பு என்ன வென்று தெளிவாக உணர்ந்து கொள்கிறேன். அங்கே வெளியே நான் ஒருபோதும் திருப்தியாயிருக்க மாட்டேன். அங்கே வெளியே என்னால் திருப்தியாயிருக்க முடியாது, ஏனென்றால் தேவன் என்னை அழைத்திருக்கிறார். எனவே இப்பொழுது நான் இக்காரியங்களை ஒரு பக்கமாய் எறிந்து விட்டு, என்னுடைய பரலோகப் பிதாவிடம் வரப் போகிறேன். நான் அவரோடு ஜீவிப்பேன்' என்று கூறினவர்களாக, இன்றிரவு நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 204.இங்கேயிருக்கும் எத்தனை பேர், 'சகோதரன் பில் அவர்களே, நான் இந்த இரவு முதற்கொண்டு, நான் அவரை சேவிக்கப் போகிறேன் என்று நானே தேவனுக்கு உறுதி யளிக்கிறேன். நாம் பாதையின் முடிவில் இருக்கிறோம் என்பதை அறிவேன், இன்னும் நமக்கு அதிக நேரம் மீதியாக இல்லை என்பதை அறிவேன். ஆனால் தேவனுடைய கிருபையினாலே, இன்றிரவு, நான் தேவையற்ற காரியங்களை அகற்றிப் போட்டு விட கருதுகிறேன், நான் தேவனைச் சேவிக்கப் போகிறேன்' என்று கூற விரும்புவீர்களா? நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? தேவன் உங்கள் இருத யத்தை ஆசீர்வதிப்பாராக. சரி. 205.நீங்கள், 'சகோதரன் பில் அவர்களே, அது இன்னும் சரியாக என்னுடைய மனதில் தோன்றவில்லை. ஆனால் அந்நாளில் தேவன் என்னை அங்கே கொண்டிருக்க வேண்டுமென்றும், தேவன் எனது இருதயத்தில் இன்னும் ஒரு அழைப்பு தர வேண்டுமென்றும் நீர் எனக்காக ஜெபிப்பீரா? நான் வருவேன், அவர் இன்னும் ஒருமுறை என்னை அழைப்பாரானால், நான் வருவேன்' என்று கூறுவது போன்று உணருகிறவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? நீங்கள் இன்றிரவு அதைக் குறித்து அதிக சிரத்தையுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது... என்று கூறும் வேறு யாராவது ஒருவர். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சீமாட்டியே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வாலிப பெண்ணே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 120206.வேறு யாரோ ஒருவர், 'சகோதரன் பிரன்ஹாமே, இன்றிரவு நான் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கவில்லை. நான் அவ்வாறு இல்லை என்று எனக்குத் தெரியும். நான் என்னுடைய ஆண்டவரை துக்கப்படுத்தியிருக்கிறேன், ஆனால் என்னுடைய இருதயத்திலுள்ள ஏதோ வொன்று நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்க வேண்டுமென்று என்னிடம் எப்போதுமே கூறியிருக்கிறது. நான் தேவனை சேவிக்க விரும்புகிறேன்' என்று கூறலாம். இன்றிரவு இங்கே அந்த நபர் இருந்து, அதை ஒருபோதும் தொடங்காமல் இருக்கிறாரா? இப்பொழுது, முடிக்கையில், இதை அறிந்திருக்கிற நீங்கள் என்னோடு சரியாக இப்பொழுதே நேர்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அது, ஏதோ வொன்று உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் தேவனை சேவிக்க வேண்டுமென்று உங்களிடம் கூறியிருக்கிறது, நீங்கள் நீண்ட காலமாக அதைப் போன்று உணர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் ஒருபோதும் அதைத் துவங்கவேயில்லை, ஆனால் ஏதோவொன்று அதை உங்களிடம் கூறியிருக்கிறது. 207.நான், அங்கே பின்னால் ஓடி வந்து, உங்களை இங்கே மேலே இழுக்கும் அந்த நபர்களில் ஒருவன் அல்ல நான். இல்லை, இல்லை. வார்த்தையைப் பிரசங்கிப்பதன் மூலமாக, பரிசுத்த ஆவியானவர் அதைச் செய்யாவிட்டால், அது எனக்கு எந்த நன்மையும் செய்கிறதில்லை. பாருங்கள், அது சரியே, நீங்கள் உங்களுடைய தெரிந்து கொள்ளுதலைச் செய்தாக வேண்டும். 121208.ஆனால் நீங்கள் என்னோடு போதுமான அளவு நேர்மையோடு இருந்து, 'சகோதரன் பில் அவர்களே, அநேக வருடங்களாக, அல்லது காலங்களாக, ஏதோவொன்று எனக்குள்ளே இருந்து வருகிறது, அல்லது அது என்னவாக இருந்தாலும், அது என்னை அழைத்திருக்கிறது, அது என்னிடம் கூறி, நான் தேவனிடம் திரும்ப வேண்டும் என்பது போன்று தோன்றினது, நானோ அதை இன்னும் செய்ய வில்லை. சகோதரன் பில் அவர்களே, நீர் எனக்காக ஜெபித்துக்கொள்ளும், அப்போது அதைச் செய்யும்படியான போதுமான மனிதனாகவோ அல்லது பெண்ணாகவோ இருப்பேன்' என்று கூறுவீர்களா? நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்து வீர்களா? இப்பொழுது கட்டிடத்தில் எல்லாவிடங்களிலும், தேவன் அவ்வாறு செய்திருப்பதாக உணருகிறவர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 209.வேறு யாரோ ஒருவர், 'ஏதோவொன்று என்னுடைய இருதயத்தில் அழைத்திருக்கிறது, நானோ இன்னும் என்னை ஒருபோதும் ஒப்புவிக்கவில்லை' என்று கூறலாம். அப்படியே உங்கள் கரத்தை உயர்த்தி, 'நான், அதில் ஒருவன் நான். நான் இன்னும் ஒரு கிறிஸ்தவனாக ஆகியிருக்கவில்லை, ஆனால் நான்-நான்-நான் கிறிஸ்தவனாக ஆக விரும்புகிறேன். நான் அப்படி ஆக விரும்புகிறேன், நான் என்னுடைய தீர்மானத் தைச் செய்யும் வரையில், தேவன் என்னைத் தள்ளி விட வேண்டாம் என்று நீங்கள் ஜெபிக்கும்படி விரும்புகிறேன்' என்று கூறுங்கள். நீங்கள் அதைச் செய்வீர்களா? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அது மிகவும் அருமை. அப்படியே யாரோ ஒருவர் உங்கள் கரத்தை உயர்த்தி, 'சகோதரன் பில் அவர்களே, நீங்கள் ஜெபிக்க வேண்டுமென்று நான்-நான் விரும்புகிறேன், நான்-நான் தேவனைத் தள்ளிவிட மாட்டேன்' என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. அது, அது அருமையானது. இப்பொழுது வேறு யாரோ ஒருவர். இங்கே வேறு யாராவது உண்டா. இப்பொழுது, நேர்மையாக இருங்கள். 122210.இப்பொழுது கவனியுங்கள், மருத்துவர் பகல் வெளிச்சம் வருவதற்கு முன்பாக உங்கள் வீட்டிற்கு வந்து, உங்கள் நாடித் துடிப்பை எடுத்து, திரும்பி வந்து, 'இல்லை, இவர் ஒருபோதும் அதை விட்டு வெளியே வர மாட்டார், இவர் முடிந்து விட்டார்' என்று கூறுவாரானால், எப்படி யிருக்கும்? ஓ, அந்தக் கரத்தை உயர்த்த நீங்கள் எவ்வளவாக விரும்புவீர்கள்! 211.அது நிச்சயமாக ஏதோவொன்றை அர்த்தப்படுத்தி, 'சகோதரனே, எனக்காக ஜெபியுங்கள்' என்று கூறிக் கொண்டிருக்கிறது. நான் அறியும்படி நீங்கள் அனுமதிக்காவிட்டால், நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. நீங்கள் யாரென்று சபைக்கும் தெரியாது. ஆனால் நீங்கள் உங்கள் கரத்தை மேலே உயர்த்துவீர்களானால், தேவன் அதை அடையாளம் கண்டுகொள்வார். அது உங்களை இரட்சிக்காது, இல்லை, ஆனால் ஒன்றைத் துவங்க அதிகமானவற்றை அது உங்களுக்குச் கொடுக்கும். அதிகமான துவக்கத்தை அது உங்களுக்குக் கொடுக்கும். அப்படியானால் ஒருக்கால் இந்த எழுப்புதல் முடியும்முன்பாக, நீங்கள் உங்கள் இருதயத்தைக் கிறிஸ்துவுக்குக் கொடுப்பீர்கள். 212.இப்பொழுது, இன்றிரவு இது கடினமாக இருந்திருக்கிறது. நாம் தொடர்ந்து போகையில், ஆதியிலிருந்த வார்த்தைக்குள்ளாக உண்மையாகவே அதிகமானவற்றை விவரித்துக் கூற முயற்சிப்போம் என்று கருதுகிறேன். 123213.அங்கே இன்னும் ஒருவர் உண்டா? அங்கே ஐந்து பேர் தங்கள் கரத்தை உயர்த்தியிருக்கிறார்கள். வேறு யாராவது உண்டா? அப்படியே ஆறு அல்லது ஏழு பேரை நான் கொண்டிருக்க முடியுமா? இப்பொழுது, நீங்கள் நேர்மையுள்ளவர்களாக இருக்க நான் விரும்புகிறேன். வாலிப பெண்ணே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, உங்கள் கரத்தை உயர்த்த வேண்டிய இன்னும் ஒரு நபர் இங்கேயிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். இப்பொழுது, அப்படியே உங்கள் கரத்தை மேலே உயர்த்தி, 'சகோதரன் பில், எனக்காக ஜெபியுங்கள்' என்று கூறுங்கள். நீங்கள் இருக்கிற இடத்திற்கு நான்-நான் திரும்பி வருவதில்லை, நான் சரியாக இங்கேயிருந்து உங்களுக்காக ஜெபிக்கப் போகிறேன். அப்படியானால், 'இப்பொழுது என்னை நினைவுகூருங்கள், நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல, ஆனால் நான் கிறிஸ்தவனாக இருக்க வேண்டுமென்று எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். இப்பொழுது நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல என்று எனக்குத் தெரியும்' என்று வெறுமனே கூறுங்கள். இப்பொழுது வேறு ஒருவர் உண்டா, உங்கள் கரத்தை மேலே உயர்த்துங்கள். ஆமாம், நான் முடிக்கப் போகிறேன். டெட்டி, உனக்கு விருப்பமானால், பியானோவிடம் போங்கள். 124214.பிறகு யாரோ ஒருவர், 'சகோதரன் பில், என்னை நினைவுகூருங்கள், என்னுடைய ஜீவியம் தேவனுக்கு நெருக்க மாக இருக்க வேண்டும். இந்த அரைகுறையான ஜீவியம் செய்யவும், இந்த வெதுவெதுப்பான நிலையில் இருக்கவும் எனக்கு-எனக்கு விருப்பமில்லை. உண்மையாகவே, என்னுடைய இருதயம் கொழுந்து விட்டெரிய விரும்புகிறேன். எனக்காக ஜெபியுங்கள்' என்று கூறலாம். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை, உன்னை, உன்னை ஆசீர்வதிப்பாராக. அது அருமையானது. அது நல்லது. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய கரங்கள் மேலே உயர்த்தப்பட்டுக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். 215.கவனியுங்கள், குருடரின் கண்களைத் திறக்கவும், செவிடரின் காதுகளைக் கேட்கப் பண்ணவும், முடமானவர்களை (காங்கிரஸ்காரர்கள், இராஜாக்கள், ஆட்சியாளர்கள், அரசர்கள், முடமானவர்களை) குணப்படுத்தவும் தேவன் என்னுடைய ஜெபத்தைக் கேட்பாரானால்! உலகத்தைச் சுற்றிலும் கவனித்துப் பாருங்கள், பத்து இலட்சம், பத்து இலட்சக்கணக்கானவர்கள்! நான் என்னுடைய இருதயத்திலிருந்து உண்மையோடு இதைக் கூற துணிந்திருக்கிறேன், ஏறக்குறைய பத்து மில்லியன் ஜனங்கள் இந்தச் செய்தியைக் கேட்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும், எல்லா தேசங்களிலும் பத்து மில்லியன் ஜனங்கள். நான் ஒரே நேரத்தில் பத்து பதினைந்து வித்தியாசமான தேசத்தவர்கள் முன்பாக பேசியிருக்கிறேன், நீங்கள் வெறொரு வார்த்தையைக் கூறுவதற்குக் கூட போகக் கூடும் முன்பாக பத்து அல்லது பதினைந்து மொழி பெயர்ப்பாளர்களினூடாகப் போக வேண்டியிருக்கிறது, அவ்விதமாக மொழிபெயர்ப்பாளர்களினூடாக போக வேண்டியிருந்தது. ஒரு இலட்சம் பேர் போன்று அவ்வளவு அதிகமான ஜனங்களைப் பாருங்கள், அல்லது, 30,000 பேர் போன்று அவ்வளவு அதிகமான ஜனங்கள் ஒரே நேரத்தில் கிறிஸ்துவிடம் வந்ததைப் பாருங்கள், ஒரே நேரத்தில் முப்பதாயிரம் மனமாற்றங்கள். டர்பன், தென்... 125216.இப்பொழுது மூன்று இலட்சம் ஜனங்கள் இருக்கும் இடத்தில் நடக்கும் ஒரு கூட்டத்திற்குப் போகிறேன். நான் இதை என்னுடைய இருதயத்திலிருந்து கூறுகிறேன். அப்படியே சரியாக அவ்விதமாகவே சம்பவிக்காமல் போன எதையாவது நான் கர்த்தருடைய நாமத்தில் முன்னுரைத்ததை நீங்கள் எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்க ளுக்கு விருப்பமான எந்தவிடத்திலும், உலகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். அவர் சொன்ன நூறு நூறு கணக்கான காரியங்களைக் கவனித்துப் பாருங்கள். நிச்சயமாகவே, நான் என்ன பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். நானாக அல்ல; கிறிஸ்து இங்கே இருக்கிறார். 217.நண்பர்களே, நான் உங்களிடம் சத்தியத்தையே கூறிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் மறுபடியும் பிறவாமலே மரித்துப் போனால், நீங்கள் இழக்கப்பட்டிருக்கிறீர்கள். இயேசு, 'ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால், அவன் இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டான்' என்று கூறினார். எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் காரியமில்லை, நீங்கள் எவ்வளவு கொடுக்கிறவர்களாயிருந்தாலும், நீங்கள் எந்த சபையைச் சேர்ந்திருந்தாலும், நீங்கள் எதனோடு இணைந்திருந்தாலும், உங்களுடைய சமூக அந்தஸ்து (social standing) எப்படிப்பட்டதாக இருந்தாலும், உங்களுடைய தாயாரும் தகப்பனாரும் யாராயிருந்தாலும், உங்களுடைய மேய்ப்பர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் காரியமில்லை. 'ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், அவன் தேவனுடைய இராஜ்யத்தைக் காணவே மாட்டான்.' 126218.அன்றொரு நாள் அந்த சோளத்தை நாம் எடுத்துக்கொண்டோம், நீங்கள் அதை இங்கே விவசாயத்தில் கண்டீர்கள். அவைகளில் ஒன்று ஒரு பரிபூரணமான சோள தானியமாக இருந்தது, ஒவ்வொரு அளவு கால்சியமும், இந்த தானியத்துக்குள் இருந்த எல்லாமும், இந்தத் தானியத்துக் குள்ளும் இருந்தது. ஒன்று வயலில் வளர்ந்தது, மற்றதோ வளரவில்லை, ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு கையளவாக அது இருந்தது. அவர்கள் அவைகளை புதைத்து வைத்தார்கள். மற்றொன்றுக்குள் இருந்த ஒவ்வொரு மூலப்பொருட்களோடும் செய்யப்பட்டிருந்த ஒன்றாக அதில் ஒன்று இருக்கவில்லை, அது அதே வடிவத்தில் தான் உண்டாக்கப்பட்டு இருந்தது, மற்றும் எல்லா காரியங்களும் ஒன்று போலவே இருந்தது. அவைகளில் ஒன்று மேலே வரவில்லை. ஆனால் இவைகளிலுள்ள ஒவ்வொன்றும் மேலே வந்தன. ஏன்? அவைகள் தங்களுக்குள் ஜீவக்கிருமியைக் கொண்டிருந்தன. 219.இப்பொழுது இன்றிரவு இங்கே இந்த உலகத்தில், தங்கள் சபைகளுக்குப் போய்க் கொண்டிருந்து, சபையைச் சேர்ந்திருந்து, கிறிஸ்தவர்கள் என்று உரிமைகோரிக்கொண்டு, தங்களுக்குள் ஜீவக்கிருமியைப் பெற்றிராத மனிதர்களும் ஸ்திரீகளும் அங்கே உண்டு. அவர்களால் மேலே வர முடியாது. அவர்களை உயிர்த்தெழும்படி செய்ய அங்கே எந்த வழியும் கிடையாது. நண்பனே, வஞ்சிக்கப்பட்டுப் போக வேண்டாம், உங்களை நீங்கள் நிறுத்து பார்த்துக்கொள்ளுங்கள். அது உங்களைப் பொறுத்தது. அது உங்களுக்குள் தான் இருக்கிறது. அது உங்களுடைய தீர்மானமாக இருக்கிறது. நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துகையில், கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. 127220.பிதாவே, இது இன்றிரவு செய்யப்பட வேண்டிய வேலையாக இருக்கிறது, நான்-நான் மட்டுமீறிய கண்டிப்பு வாய்ந்த காரியங்களையும், கடினமான காரியங்களையும் கூற வேண்டியிருந்தது, கடினமாக வெட்டிக் கொண்டிருந்தேன், ஆனால் சுவிசேஷமானது இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைக் காட்டிலும் கருக்கானதாயும், எலும்புகளின் ஊனையும் கூட உருவக்குத்துகிறதாயும், மனதின் நினைவுகளை வகையறுக்கிறதாயும் இருப்பதாக நீர் சொல்லியிருக்கிறீர். தேவனே, அதைக் காட்டிலும் குறைவான எதையாவது கொண்டிருக்கக் கூடாதபடிக்கு அதைத் தடை செய்யும். இப்பொழுது, அந்தத் 'தெரிந்து கொள்ளுதலுக்காக' நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம், நீர் எங்களை அழைத்திருக்கிறீர் என்பதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் இப்பொழுது, எங்கள் இருதயங்களில், பரிசுத்த ஆவியானவர் இந்த எல்லா வருடங்களிலும் எங்களை பாதுகாத்திருக்கிறார். நாங்கள் எவ்வளவாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம்! பாவ சாக்க டைகளிலிருந்து நாங்கள் முன் நாட்களில் மேலே வந்ததை நினைத்துப் பார்க்கும் போது, அது ஆச்சரியமான கிருபையாக உள்ளது, நீர் எவ்வளவாக எங்களுக்கு நல்லவராக இருந்து வருகிறீர். 221.இப்பொழுது இங்கே இந்த உலகத்திலிருக்கிற இந்த மனிதர்களையும் ஸ்திரீகளையும் நீர் நேசிக்கிறீர், இன்னும் சூரியன் ஒரு சில சுற்றுகள் சுற்றும் போது, அப்போது அது மிகவும் காலதாமதமாகியிருக்கும் என்று அறிகிறோம். இந்நாட்களில் ஒன்றில் அது மிகவும் காலதாமதமாகி இருக்கும். அவர்கள் பரிகாரம் இல்லாமலும், இரக்கமில்லாமலும் அவ்வளவு துரிதமாக அறுப்புண்டு போவார்கள், நீர் அவர்களுடைய பேராபத்தைப் பார்த்து நகைக்க மாத்திரமே செய்வீர் என்பதாக சொல்லியிருக்கிறீர். 128222.இந்த உலகத்தைக் குறித்து எண்ணிப் பார்க்கும் போது, இந்நாட்களில் ஒன்றில், இந்தப் பழைய உலகத்தில் ஊளை சத்தமான காற்றுகள் வீசப் போகின்றன, இது ஒரு அணுகுண்டினாலே வெடிக்கப்பட்டு அழிந்து போய், அதோ அங்கே வெளியே சூரிய மண்டலத்தில் கிடக்கும் போது, இன்றிரவிலிருந்து 500 ஆண்டுகளில், ஊளை சத்தமான காற்றுகள் (howling winds) குறுக்கே வீசிக் கொண்டிருக்கும். அங்கே அந்த மணலில் கல்லறைகள் மறைந்து காணப்படும், ஒருக்கால் நம்முடைய பெயர்கள் அவைகளின் மேல் இருக்கலாம், அதோ அங்கேயுள்ள சுழல் காற்றிலும், ஊளை சத்தமான காற்றிலும் மற்றும் காற்றுகளிலும் கிடந்து, சூரியனிலிருந்து உஷ்ணமான கொதிக்கும் வெப்பம் (வரலாம்). ஆனால் நம்முடைய பரிதாபமான ஆத்துமா எங்கே யிருக்கும்? 223.தேவனே, இந்த இரவு தாமே ஏதோவொரு நித்தியமாக சேருமிடத்தை முடிவு செய்யும் இரவாக இருப்பதாக. இதை அருளும், கர்த்தாவே, இங்கேயுள்ள ஒவ்வொரு பாவியும், தங்கள் கரங்களை உயர்த்தி, தாங்கள் பாவிகள் என்றும், தாங்கள் ஜெபத்தில் நினைவுகூரப்பட விரும்புவதாகவும் கூறுகிற அந்த மனிதர்களுக்கும், ஸ்திரீகளுக்கும், வாலிப பெண்களுக்கும், மற்றவர்களுக்கும், ஓ தேவனே, பரிசுத்த ஆவியானவர் தாமே இப்பொழுதே அதை அருளுவாராக. அவர்கள் தாமே இயேசு கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பரிசுத்த ஆவியால் நிறையப்படு வார்களாக. 224.கர்த்தாவே, அருளும், இந்தப் பின்வாங்கிப் போனவர்களும், குளிர்ந்து போனவர்களும், உம்மை விட்டுத் தூரமாகப் போனவர்களும், அவர்கள் தாமே பட்டினியால் மரித்துக் கொண்டிருக்கிற ஒரு கூட்டம் பிள்ளைகளைப் போல, அவர்கள் இன்றிரவு ஓடி வருவார்களாக, அவர்கள் தேவனுடைய போஜனபந்திக்கு ஓடி வந்து, 'நான் சாப்பிட விரும்புகிறேன்' என்று கூறுவார்களாக. கர்த்தாவே, நீர் இதைச் செய்வீராக. 129225.தங்களுடைய கரத்தை உயர்த்தி, கண்ணீரோடும் ஜெபத்தோடும் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிற தேவனுடைய இந்த அன்பான பரிசுத்தவான்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம், அவர்கள் இந்த மணி நேரத்துக்கு உண்மையுள்ளவர்களாக தரித்திருக்கிறார்கள். 226.கர்த்தாவே, இன்றிரவு இந்த வார்த்தைகளை ஆசீர்வதியும், அவர்கள் வேதாகமத்தின் ஒரு பக்கத்திலிருந்து மற்ற பக்கத்திற்கு ஓடி, எல்லாவற்றிலும் மோசமான தோற்றத்தை ஏற்படுத்தின போதிலும், ஒருக்கால் நீர் தான் அவர்களுடைய மனதில் அதைச் செய்ய முடியும், கர்த்தாவே. அது எனக்கு புதிதாக இருந்து வருகிறது, இவைகளை முயற்சிப்பது என்பது, ஏழு வருடங்களில் முதல் முறையாக உள்ளது, கர்த்தாவே. நாளை இரவு, நீர் எங்கள் எல்லாரையும், இன்னும் அதிக மானவர்களையும் கூட திரும்பவும் கொண்டு வர வேண்டு மென்று நான் இப்பொழுது ஜெபிக்கிறேன், பரிசுத்த ஆவியானவர் தாமே இங்கேயிருப்பாராக. இன்றிரவு ஒரு தீர்மானம் செய்து, இரட்சிக்கப்பட்டிருக்கிற இங்கேயுள்ள இவர்களில் அநேகம் பேர் நாளை இரவும் திரும்பி வந்து, களிகூர்ந்து கொண்டும், சந்தோஷத்தோடும், (இதை அருளும், கர்த்தாவே), யோசேப்பு செய்தது போல, பிதாவினுடைய கழுத்தின்மேல் விழுந்து, கர்த்தாவே, பிதாவை முத்தம் செய்து, ஓ, 'கர்த்தாவே, என்னை இரட்சித்ததற்காக உமக்கு நன்றி' என்று கூறுவார்களாக. இதை அருளும், கர்த்தாவே. இப்பொழுது ஏதோவொன்று சம்பவிப்பதாக. இந்த ஆசீர்வாதத்திற்காக நாங்கள் ஜெபிக்கிறோம், நீர் எங்களை இந்தக் கூட்டத்திலிருந்து அனுப்பிவையும், ஆனால் ஒருபோதும் உம்முடைய - உம்முடைய சமூகத்திலிருந்தல்ல, நாங்கள் தாமே சந்தோஷத்தோடும், களிகூர்ந்து கொண்டும், நாளை இரவு திரும்பி வந்து, விலையேறப்பெற்ற அரிக்கட்டுகளைக் கொண்டு வருவோமாக. நாங்கள் இதை கிறிஸ்துவின் நாமத் தில் கேட்கிறோம். ஆமென். 130227.கிறிஸ்தவ நண்பனே, நான் இந்த நேரமெல்லாம் பிடித்து வைத்திருந்ததற்காக வருந்துகிறேன். நான் மிகவும் வருந்துகிறேன். கூடுமானால், நாளை இரவில், 9 மணிக்கு வெளியே அனுப்ப நோக்கங்கொண்டிருக்கிறேன். நான் சற்று கடுமையாக பேச வேண்டியிருந்தது. என்னால் அதைத் தவிர்க்க முடியவில்லை. நீங்கள் எப்படியும் என்னை நேசிக்கிறீர்கள், இல்லையா? நானும் தான், நான் உங்களை நேசிக் கிறேன். அது உங்களுடைய நன்மைக்காக மாத்திரமே. இப்பொழுது நாம் எழுந்து நிற்போமா. சரி, இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் என்ற இசைத்தந்தி. இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டுசெல், துயரமும் துக்கமும் கொண்ட பிள்ளையே; அது ... மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும். 228.இப்பொழுது, நீங்கள் நாளைக்கு போன் பண்ணத் தொடங்கும்படி நான் விரும்புகிறேன். ஏதாவது பாவியிடம் சென்று, அவனை அழைத்து வாருங்கள். திரும்பி வாருங்கள். மேய்ப்பர்களிடம் சொல்லுங்கள். இப்பொழுதே வாருங்கள், நாம் ஒன்றுசேர்ந்து, ஒரு பழைமை நாகரீகமான எழுப்புதலைக் கொண்டிருப்போம். இப்பொழுது, ஒரு இரவு, அல்லது இரண்டு இரவுகளில் நாம் சரிப்படுத்திக் கொள்வோம், அப்பொழுது நாம் முன்னேறிச் சென்று, ஒரு நல்ல நேரத்தைக் கொண்டிருப்போம். இப்பொழுது ஒருவர் மற்றவரின் கரங்களைக் குலுக்குவோம். பரலோகத்தின்...; விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். 131229.இப்பொழுது, இயேசுவின் நாமத்தில், நாம் மறுபடியும் சந்திக்கும் வரையில், இப்பொழுதிலிருந்து தேவனுடைய கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும், உங்களோடு தொடர்ந்து தங்கியிருப்பதாக. ஆமென். 230.இப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுடைய அன்போடும் ஆசீர்வாதத்தோடும் நீங்கள் அனுப்பி வைக்கப்படுகிறீர்கள். இப்பொழுது, இந்தக் கூடாரத்தின் அங்கத்தினர்களாகிய நீங்கள் எல்லாரும் இங்கேயிருக்கும் இந்த ஜனங்களோடு கரங்களைக் குலுக்குங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய கரங்களைக் குலுக் குகிறீர்களா என்பதைக் குறித்து நிச்சயத்தோடு இருங்கள், திரும்பி வரும்படி அவர்களை வாழ்த்துங்கள். பரிசுத்த ஆவியானவரும் அதே காரியத்தை செய்வாராக. இப்பொழுது, சரிசெய்து சமாதானமாயிருங்கள், உங்களுடைய எல்லா வித்தியாச பேதங்களையும் மறந்து விட்டு, சமாதானமாயிருங்கள். சரி. இயேசுவின் நாமத்தில் பணிந்து, ... விழுந்து வணங்கி.